ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பட விமர்சனம்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்பட விமர்சனம்
ஆர்.சந்திரசேகர்

மதுரையில் அரசியல் செல்வாக்கு பெற்ற ரவுடியாக வருக்கிறார் அலியஸ் சீசர் ராகவா லாரன்ஸ். ஒரு பார்ட்டியில் கலந்துகொள்ளும் சினிமா ஹீரோ அரவிந்த் ஆகாஷ் அவரை ‘கருப்பா இருக்குறவன் நடிகராக வர முடியாது’ என்று சீண்ட, ஹீரோவாகும் ஆசை வருகிறது, அலியஸ் சீசருக்கு. கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் தீவிர ரசிகரான இவர், தனது படத்துக்கு உதவி இயக்குநர்களிடம் கதை கேட்கிறார். சத்யஜித் ரே-யிடம் சினிமா கற்றவராக வரும் ரே தாசனை எஸ்.ஜே.சூர்யா தேர்வு செய்கிறார். ‘காட் ஃபாதர்’ மாதிரி அவரின் வாழ்க்கைக் கதையை படமாக்கலாம் என்கிறார் ரே தாசன். நினைத்தபடி அவர்களால் படம்பிடிக்க முடிந்ததா, ரே தாசன் யார்? இறுதியில் என்ன நடக்கிறது இந்த கதை.


‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற அதன் இரண்டாம் பாகத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ். வித்தியாசமான கதையம்சம் , புதுமையான காட்சி அமைப்புகள், சுவாரசியமான கதாபாத்திரத்தில் திரைக்கதையை திரைப்படமாக்கி ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ்.
கொடூர ரவுடியான ஆலியஸ் சீசர் ராகவா லாரன்ஸ், ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் ரசிகராக இருப்பது, அவரைப் போலவே துப்பாக்கியால் சுடுவது, லாரன்ஸ் கதாபாத்திரமைப்பு அதேபோல் சீசரின் சுயசரித்தை இயக்குவதாக படைக்கும் இயக்குநராக எஸ்.ஜே. சூர்யாவின் ரசிக்க வைக்கிறார் .
படத்தில் யானைகளைக் கொன்று தந்தங்களை வேட்டையாடும் கடத்தல்காரன், ஆகிய இரண்டு தரப்பினராலும் அப்பாவி பழங்குடி மக்கள் பல கொடுமைகளை அனுபவிப்பது என தமிழ்நாட்டில் நடைபெற்ற சில வரலாற்று நிகழ்வுகளை வலு சேர்க்கின்றன. காட்டில் வாழும் பூர்வகுடி மக்களின் வாழ்வியல், யானைகளின் இயல்பு என பண்பாட்டு, சூழலியல் அம்சங்களையும் கமர்ஷியல் படம் என கொண்டு செல்கிறது. ஆளும் வர்க்கத்தின் அரசியல்வாதிகள் அப்பாவி பழங்குடி மக்களுக்கு நேரும் துயரத்தைச் சொல்லும் காட்சிகள் மனதைப் பதற வைக்கின்றன.
முதல் பாதியில் வெட்டுக் குத்துக்காரா இரண்டாம் பாதியில் மக்களைக் காக்கும் வீரனாகவும் நடிப்பை சிறப்பாக ராகவா லாரன்ஸ். மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் . எஸ்.ஜே.சூர்யா அசத்தல். தனது வழக்கமான நடிப்பிலிருந்து இதுல வேறுவித நடிப்பை தந்திருக்கிறார். சீசரின் மனைவியாக பழங்குடி பெண்ணாக நிமிஷா சஜயன், காவல்துறை அதிகாரியாக நவீன் சந்திரா, அரசியல்வாதி இளவரசு,
சந்தோஷ் நாராயணன் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. அடர்வனப் பகுதியில் எடுக்கப்பட்ட யானை வேட்டைக் காட்சியில் ஒளிப்பதிவாளர் திரு சாரின் காட்சி பிரமிக்கிறது. ஒளிப்பதிவு. கலை இயக்கமும் கதை நடக்கும் காலகட்டத்துக்கே நம்மை கொண்டுச் செல்கிறார். இயற்கை காட்சிகள் இயல்பா மிரள வைக்கிறது
முதல் தொடங்கம் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இரண்டாம் பாதியில் சீசரின் திடீர் மனமாற்றம். கடைசிக்
காட்சிகளிலும் நீளமும் அதிகம். என்றாலும் அதைக் கவனிக்க விடாமல் இழுத்துச் செல்லும் திரைக்கதை அதுவே படத்துக்குப் பலம். கார்த்திக் சுப்புராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல படைப்பை‌ ரசிகர்களுக்கு தந்து ‌இருக்கிறார்.

Comments (0)
Add Comment