கிங்ஸ்டன்’ திரைப்பட விமர்சனம்

 

’கிங்ஸ்டன்’ திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் : – ஜிவி.பிரகாஷ் குமார், திவ்யாபாரதி, சேத்தன், அழகம்பெருமாள், குமரவேல், சாபுமோன் அப்துல்சாமத்‌, ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாசலேஸ்வரர்.
பி.ஏ பிரவீன், பயர் கார்த்திக், மற்றும் பலர் நடித்துள்ளார்கள்…

டைரக்டர் : -‌ கமல்பிரகாஷ்

மியூசிக் :- ஜிவி.பிரகாஷ்குமார்.

தயாரிப்பாளர்கள்:-
ஜீ. ஸ்டுடியோஸ் & பேரல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ்- ஜிவி.பிரகாஷ் குமார், உமேஷ் கே.ஆர்.பன்சல், பாவனிஸ்ரீ.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை
நம்பியிருந்தால், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை.

காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு

வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40

வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும்வேலைகளை செய்கிறார்கள்.சில

இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவரான கதாநாயகன்

ஜி.வி.பிரகாஷும், ஆரம்பத்தில் கடத்தல் தொழிலில்

ஈடுபட்டவர், அதன் உண்மையான பின்னணியை அறிந்துக் கொண்டு

அதில் இருந்து விலகுவதோடு, தனது

கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்க கடுமையான முடிவு செய்கிறார்.

அதன்படி, மர்மம் சூழ்ந்த அந்த கடலுக்குள் சென்று பிரச்சனையை தீர்க்க நினைப்பவர்,

தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல, அவர் உயிருடன்

திரும்பி வந்தாரா ? இல்லையா ஊர் நம்புவதை போல் அவர் பிணமாக திரும்பி வந்தாரா ?

என்பதை ஒரு ஃபேண்டஸி கதை போல சொல்ல யிருப்பது தான் ‘கிங்ஸ்டன்’. என்ற கதைக்களம்

மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்,

தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் எந்தவித

கொஞ்சமும்‌ மாற்றம் இல்லை எப்போதும் போல் நடித்திருக்கிறார்.

இயக்குநர் சொன்னதை மட்டுமே அப்படியே நடிக்கச் செய்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்,

அதையும் தனக்கு தெரிந்த மாதிரி, ஒரே மாதிரி கோணத்தில் நடிக்கச் செய்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு அவருக்கு படத்தில் பெரிய வேலை இல்லை.

என்றாலும், அவரை நடிக்க‌ வைப்பதற்குக்காக சில காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும்

சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.
பி.ஏ,
பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்

தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

கிரீன் மேட் படங்கள் என்றால் கோகுல்

பினாய் தான் என்ற முத்திரை குத்தப்பட்ட ஒளிப்பதிவாளர்.

கோகுல் பினாய், கடலின் அழகு, ஆபத்து

மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர

முயற்சித்திருக்கிறார், ஆனால் அனைத்தும் கிரீன் மேட் மூலம்

கொண்டு வர வேண்டும் என்பதால், அவரது
முயற்சி செய்திருக்
கிறார்.

நடிகராக வந்தாலும்.
இசையமைப்பாளராக சாதித்து வந்த ஜி.வி.பிரகாஷ் குமார், தனது சொந்த படத்தின்
மூலம் அவர் இசையில் இப்படி ரசித்து கேட்க ரசிகர்களுக்கு‌ பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறார்.

பாடல்களில்
ரசிகர்களுக்கு திகட்ட‌வைப்ப‌‌தால் ரசிக்க முடியவில்லை. பின்னணி இசையில் பெரும்

சத்தம் காதை கிழிக்கும் அளவில் தலைவலி வரும்படி அமைந்துள்ளது.

படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், கதையில் இருக்கும் திகில் முக்கியமா? அல்லது

திகில் பின்னணியில் இருக்கும் திருப்பங்கள் முக்கியமா? என்ற
குழப்பங்களோடு காட்சிகளை

தொகுத்திருப்பது சஸ்பென்ஸ்கள் கூட

திரைக்கதையில் எந்தவிதமான சுவாரஸ்சியமானதை

தராமல்‌‌ மிக சாதாரணமாக கடந்துசெல்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் கமல் பிரகாஷ், கடலில் நடக்கும் திகில் கதையை

ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.

ஆனால், அதில் அதிக அழுத்தமான கதை மற்றும் பலமான திரைக்கதை

இல்லாததால், அவரது ஃபேண்டஸி மற்றும்

திகில் யோசனைகள் பார்வையாளர்களிடம்

எந்தவிதமான பாதிப்பையும் தர
வில்லை.

கிராபிக்ஸ் மூலம் அமைக்கப்பட்டி
ருக்கும் அமானுஷ்ய உருவம், கடலில்

நடக்கும் ஆவிகளுடனான மோதல் ஆகியவற்றின்

மூலம் படக்குழுவின் உழைப்பு தெரிந்தாலும், அந்த இடங்களில் வரும்

கிராபிக்ஸ் காட்சிகள் தேவையானது இல்லாதது படத்திற்கு பலவீனமாகிறது.

‘கிங்ஸ்டன்’ பழுதடைந்த படகில் இருந்து விலகி ஒடும் அலைகளைப் போல் ஒடுகிறது,

தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்க முடிவு செய்கிறார்.‌

“கிங்ஸ்டன்.”
கிராப்ஃபிக்ஸ் சிஜி வொர்க்கில் மூலம்

கொஞ்சம் தாங்கிப் பிடிக்கிறது. அனைவரும்

திரையரங்குகளில் மகிழ்ச்சியாக‌ பார்வையாளர் பார்க்கலாம்