” ஏஸ் ” திரைப்பட விமர்சனம் …

” ஏஸ் ” திரைப்பட விமர்சனம் …

நடித்தவர்கள் :- விஜய் சேதுபதி, ரூக்மணி வசந்த் , யோகிபாபு,

திவ்யாபிள்ளை, பப்லு பிரித்விராஜ் , பி.எஸ். அவினாஷ், ராஜ்குமார்.மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :- ஆறுமுக குமார்.

மியூசிக் : – ஜஸ்டின் பிரபாகர்- பின்னணி இசை & பாடல் :- சாம்.சி.எஸ்.

ஒளிப்பதிவு:-கரண் பி.ராவத்.

படத்தொகுப்பு:-
ஃபென்னி ஆலிவர்.

தயாரிப்பாளர் : 7 சி.எஸ். என்டர் டெய்ட்மென்ட்- ஆறுமுக‌குமார்.

சிறைசாலையிருந்து விடுதலையாகும் விஜய் சேதுபதி,

தனது புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக

மலேசியா போகிறார்.
அங்கு யோகி பாபு வீட்டில் தங்குகிறார்.

அவர் மூலம் திவ்யா பிள்ளை உணவ
கத்தில்‌ வேலைக்கு சேருகிறார்.

அந்த பகுதியில் இருக்கும் ருக்மணி வசந்துடன் நட்பு கிடைத்தது

அது நாளடைவில் காதலாக மாறுகிறது.

இதற்கிடையே ருக்மணிக்கு பணம் தேவை ஏற்படுகிறது.

அதனால் கடன் வாங்க சென்ற இடத்தில் சூதாடி, ஒரு கோடி ரூபாய்க்கு

விஜய் சேதுபதி கடனாளியாகி விடுகிறார். ஒரு

வாரத்தில் கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் உயிர் போய்விடும் என்ற

சூழ்நிலையில், வங்கியில் கொள்ளையடிக்க

விஜய் சேதுபதி திட்டம் போடுகிறார். அவரது திட்டம்

ஜெயித்ததா? இல்லையா ? அதன் மூலம் அவரது எப்படிப்பட்ட

பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார், அதில் இருந்து எப்படி

 

மீண்டுவந்தரா? இல்லையா என்ன? என்பதை கமர்ஷியலமாகவும்,
சொல்ல முயற்சித்திருப்பது தான் “ஏஸ்” என்ற திரைப்பட கதைக்களம்…

விஜய் சேதுபதி வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பின் மூலம் போல்ட்

கண்ணன் என்ற கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படி

நடித்திருக்கிறார். கூடுதலான நடிப்பில் நல்லவே இளமையாகவும், ஸ்டைலாக வலம் வருகிறார்.

ஆக்‌ஷன் மற்றும் செம்மையாக காட்சிகளில் சூப்பராக அசத்தியிருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த்,

அழகு மற்றும் நடிப்பு கலையிலும் இரண்டு விதங்களில் அசத்துகிறார்.

யோகி பாபுவின் காமெடி காட்சிகள் சிரிப்பு மூலம் பலம் கொடுக்கிறது.

படம் முழுவதும் வரும் யோகி பாபு, வரும் காட்சிகள்.

பெரும்பாலும் காட்சிகளில் ரசிகர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்க

ள்.
திவ்யா பிள்ளை மற்றும்

வில்லன்களாக நடித்திருக்கும் பப்லு பிரித்விராஜ்,

பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் என மற்ற
வேடங்களில் நடித்துள்ளனர்

கதாபாத்திரங்
களுக்கு பலம்
தந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத், இதுவரை திரைப்படங்களில் காட்டப்படாத

மலேசியா லொக்கேஷனை அழகான வண்ண மையமாக காட்சிப்படுத்துள்ளார்

காட்சிகளை கலர்புல்லாகவும், கமர்ஷியலாகவும் படமாக்கியுள்ளார்.

ஜஸ்டின் பிரபாகர் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. சாம்.சி.எஸ்-ன்

பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்..

ஃபென்னி ஆலிவரின் படத்தொகுப்பில் ஆரம்பத்தில் படம் வேகமாக

பயணித்தாலும், இரண்டாம் பாதி முழுவதும்

காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

இந்த படத்தை‌ எழுதி இயக்கியிருக்கும்

ஆறுமுககுமார்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்…

அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய திரைப்படம்…

இது ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் “ஏஸ்”