மதராஸி” திரைப்பட விமர்சனம் ..

 

“மதராஸி” திரைப்பட விமர்சனம் …

நடித்தவர்கள்:- சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால்,

பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் கல்லாரக்கல் மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :- ஏ.ஆர்.முருகதாஸ்.

இசை: அனிருத் ரவிச்சந்தர்.

ஒளிப்பதிவு:- சுதீப் இளமோன்.

படத்தொகுப்பு:-ஸ்ரீகர் பிரசாத்.

தயாரிப்பு: ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் – என். ஸ்ரீலட்சுமி பிரசாத்.

தமிழ்நாட்டுக்குள் திருநெல்வேலி, கோவை‌, போன்ற இடங்களில்

துப்பாக்கி சூடு கலாச்சாரத்தை பத்திரிகை வாய்லாக கேள்விப்பட்டு இருப்பீர்கள்…

இதுபோன்ற உருவாக்க நினைக்கும் பயங்கரவாத கும்பல் ஒன்று, மிகப்பெரிய

அளவிலான துப்பாக்கி ஆயுதங்களை விநியோகிக்கும்

திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கின்றனது.

இதனை தடுத்து நிறுத்த முயற்சியில் பிஜு மேனன்.

தலைமையிலான ஒரு தேசிய புலனாய்வு அமைப்புகள் இதுல ஈடுபடுகின்றனது.

இதற்கிடையில், தனது‌ காதலி ரூக்மணி தன்னை விட்டு பிரிந்து சென்ற சோகத்தில் தான்

தற்கொலை செய்துகொள்ள போவதாக சுற்றிக் கொண்டிருக்கும்

நாயகன் சிவகார்த்திகேயனை வைத்து, பயங்கரவாத கும்பலின் திட்டத்தை

முறியடிக்க பிஜு மேனன் முடிவு செய்கிறார்.

இந்த சூழ்நிலையில், சிவகார்த்திகேயன் மிக மோசமான‌‌ மனநலம் நிலையில் பாதிக்கப்பட்டவர்

என்றும், அதற்கு பிறகு சுமார் பதினைந்து ஆண்டுகள் சிகிச்சை

பெற்று வந்தவர் என்றும் பிஜு மேனனுக்கு தெரிய வருகிறது. அவர்

நினைத்தது போல் சிவகார்த்திகேயன் மூலம் பயங்கரவாத கும்பலின் திட்டம்

முறியடிக்கப்பட்டதா ? ,
இல்லையா?அவரது, மனநிலை பாதிக்கப்பட்டது ஏன் ? என்று அவரது காதலி அவரை பிரிந்து

சென்றது ஏன் ?என்று ஆகிய கேள்விகளுக்கு சரியான விடையை ஆக்ஷன் ஜானரில்

சொல்வது தான் “மதராஸி”. இந்த திரைபடத்தின் கதைக்களம்.

சிவகார்த்திகேயனின்வெகு காலமாக சில‌ படங்கள் சரியாக போகாமல் இருந்த சமயத்தில் இந்த மாஸ்

ஆக்ஷன் படம் இப்போது மறு அவதாரம் எடுத்து கைகொடுத்திருக்
கிறது.

மனுஷன் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

குறிப்பாக கேஸ் தொழிற்சாலையில் நடைபெறும்

சண்டைக்காட்சியில், கடைசி காட்சியில் வில்லனுடனான ஆக்ஷன் சண்டை காட்சியில் மிரட்டல்.

ஆக்ஷன் காட்சிகளில் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளிலும்
அசத்திருக்கிறார்.

அம்மாவுடன் போன் செய்தது போல் நடிக்கும் காட்சியில்

பார்வையாளர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.

நாயகியாக நடித்துள்ளார். ருக்மணி வசந்த்,

ஆரம்பத்தில் திரைக்கதையில் இருந்து விலகி இருந்தும்,

இரண்டாம் பாதி படத்தில் அவர் இல்லை என்றால்

படம் இல்லை, என்ற அளவிற்கு திரைக்கதையுடன் ஒன்றி பயணித்து பார்வையாளர்களை கவர்ந்து ஈர்க்கிறார்

துப்பாக்கி படத்திற்குப் பிறகு மீண்டும் சூப்பர் வில்லனாக விஸ்வரூபம்
எடுத்துள்ளார்.

வித்யூத் ஜமால், “யார் கிட்ட வேண்டுமானாலும்

துப்பாக்கியை வைத்து இருக்கலாம், ஆனால் அந்த காட்சியில்

நான் தான் வில்லன்” என்று பஞ்ச் டைலாக் வசனம் பேசி

ஹாலிவுட் நடிகரைப் போல் ஆக்ஷனில் நடித்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் சபீர் கல்லரக்கல், தேசிய

புலனாய்வு அமைப்பின் அதிகாரியாக

நடித்திருக்கும் பிஜு மேனன், விக்ராந்த் ஆகியோர் பார்வையாளர்கள் எல்லோரும் மனதில்

பதிந்துவிடும் அளவில் பயணித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத், படத்தின்

டைடில் கார்டிலேயே பார்வையாளர்களை தன் பின்னணி

இசையால்‌‌ தன்வசம் நிமிர‌‌ வைத்து தனது பீஜியம் மூலம்

காட்சிகளின் விறுவிறுப்பை அதிக படுத்தி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே இருந்த முனுமுனுக்க வைத்த பாடல்கள்

காட்சிகளில் நம் பார்க்கும் அளவுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

ஒளிப்பதிவு சுதீப் இளமோன், படத்தின் முழுவதும் ஒரு

பிரமாண்டமாக
காட்சி யை படமாக்கியிருக்கிறார்

சண்டைக்காட்சி
களில்‌‌ வேகம் மற்றும் கேமரா பிரேம்களின்

மூலம் பார்வையாளர்களை வியக்கும்படி

வைத்திருக்கும் சுதீப் இளமோன், படம்

முழுவதையும் ஹாலிவுட் தரத்தில் படமாக்கியுள்ளார்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், இரண்டரை மணிக்கும் மேலான

நீளம் இருந்ததை, அனைத்து காட்சிகளை

ரசிக்கும்படி நேர்த்தியாக காட்சிகளை தொகுத்துள்ளார்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கண்டெய்னர் சேசிங், அதன் பின்னர்

ஹீரோவின் அறிமுகம், அவரது காதல், மனநலம் பாதிப்பு என

அனைத்து விஷயங்களை பார்வையாளர்கள் ரசிக்கும்படி தொகுத்திருக்கிறார்,

சண்டைக்காட்சிகளை படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதத்தில் தொகுத்திருக்கிறார்.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் தன்னை நிரூபித்துகாட்டி விட்டார் என்று

சொல்லும் அளவுக்கு துப்பாக்கியை வைத்து மிகப்பெரிய சமூக பிரச்சனையை

பேசியிருப்பது அதன் மூலம் பார்வையாளர்களின்

ஆக்ஷன் கமர்ஷியல் படத்திற்கு சிறப்பு விருந்து கொடுத்துள்ளார்.

இதுபோன்ற எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புகள் இனி தமிழகத்தில் வரக்கூடாது, என்ற

அவரது எண்ணமும் எச்சரிக்கையுடன் அதனை மையப்படுத்தி கவனத்தை

திரைக்கதையில் படம் முழுவதும் தொய்வு இல்லாமல் நகர்ந்து செல்கிறது.

சிவகார்த்திகேயனை ஆக்ஷன் மாஸ் ஹீரோவாக மிக

கனகச்சிதமாக கையாண்டிருப்பது அவரது பேவரைட் காதல், எமோஷனல்

ஆகியவற்றையும் சரியான அளவில் சேர்த்துஅனைத்து

தரப்பினருக்கும் ரசிக்கும்படியான படமாக கொடுத்துள்ளார்.

குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் மிக பெரிய கவனத்தை பலம்

வாய்ந்த கதையம்சத்தை வடிவமைத்திருக்
கின்ற

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், காதல் ஒரு

சாமானியனை சாகசங்களை நிகழ்த்திய நாயகனாக

உருவாக்குறதை சொல்லி காதலர்களையும் படத்தை கொண்டாட
வைத்துவிடுகிறார்.

படம் பார்த்தத்தில், “மதராஸி”என்ற படத்தில் சிவகார்த்திகேயனை செம மாஸாக்கி மாற்றியமைத்து

வைத்து விட்டார் இயக்குனர். முருகதாஸ்… இந்த படம்

சிவகார்த்திகேயனுக்காக ஒரு பெரிய விருந்து இது எஸ் கே யின் ரசிகர்களின்

மனதில் மகிழ்ச்சி தரும் வகையில் படைப்புகள்

தந்திருக்கிறது ‌அனைவரும்‌ இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம்… கண்டுகளிக்கலாம்…