“பிளாக் மெயில்” திரைப்பட விமர்சனம்… !

 

“பிளாக் மெயில்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :-
ஜி.வி.பிரகாஷ்குமார், ரமேஷ் திலக்,

தேஜு அஸ்வின், ஸ்ரீகாந்த்,
பிந்துமாதவி, ரெயின்

கிங்ஸ்லி,சாஜி, முத்துகுமார், மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : – மு.மாறன்.

மியூசிக் : –
சாம் சி. எஸ்.

ஒளிப்பதிவு:-கோகுல் பினாய்.

படத்தொகுப்பு:-ஷால்லோகேஷ்.

தயாரிப்பாளர்கள் : – ஜெடிஎஸ் பிலிம் ஃபேக்டரி – ஜெயக்கொடி அமல் ராஜ்.

பலசரக்கு வாகன ஓட்டும் டிரைவரான ஜி.வி.பிரகாஷ்குமார்,

ரூ. ஐம்பது லட்சம் தன்னிடம் மட்டுமே இருந்தால் நான்

முதலாளியால் சிறைபிடிக்கப்பட்ட தன் காதலியை மீட்க

முடியும் என்ற தர்மசங்கடத்தில் நிலைஏற்படுகிறது.

பணத்திற்கு பல இடங்களில் கேட்டு ஏற்பாடு

செய்கிறார். இதற்கிடையே, தொழிலதிபர்

ஸ்ரீகாந்தின் மனைவியான பிந்து மாதவியை அவரது முன்னாள் காதலன்

லிங்கா மிரட்டி பணம் பறிக்க முயற்சிசெய்கிறார்.

இந்த சூழ்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பண தேவையை அறிந்துக்

கொண்டு அவர் மூலம், தொழிலதிபர்
ஸ்ரீகாந்தின் குழந்தையை கடத்த

லிங்கா திட்டம் செய்கிறார். ஆனால், ஜி.வி.பிரகாஷ் குமார் கடத்துவதற்கு

முன்பே அந்த குழந்தையை வேற ஒருவரால் கடத்தப்படுகின்றன.

அந்த குழந்தையை கடத்தினால் மட்டுமே பணம் கிடைக்கும் என்பதால்,

குழந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் ஈடுபட்ட குழந்தை, வேறு ஒரு தரப்பினரால்

தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இந்த

கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் ?, எதற்காக ? அந்த குழந்தையை கடத்த

முயற்சிக்கிறார்கள் ? என்பதை பரபரப்பாக

சொல்வது தான் “பிளாக்மெயில்” படத்தின் கதைக்களம்.

ஜி.வி.பிரகாஷ் குமார் ஒரு‌ அப்பாவி சரக்கு வாகன ஓட்டும் டிரைவர்

கதாபாத்திரத்தில் உணர்ந்து நடித்துள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் தனது காதலியை காப்பாற்றுவதற்காக

எந்த தவறையும் செய்ய ரெடியாகும் அளவில் அவர்,

நடிப்பில் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும்

விதத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி
நடித்திருக்கிறார்,

எமோஷனல் காட்சிகளில் அவர் நடித்ததில் பல இடங்களில்‌ தெளிவாக தெரிகிறது.

நாயகியாக நடித்துள்ள தேஜு அஸ்வினுக்கு திரைகளில் வரும்

காட்சிகள் குறைவு தான் என்றாலும், இந்த திரைக்கதையை நகர்ந்து போவது

அவரது கதாபாத்திரம் தான் மையமாக இருக்கிறது, அவர் பார்வையாளர்கள் கவர்ந்து ஈர்க்கிறார்.

தொழிலதிபராக நடித்துள்ள. ஸ்ரீகாந்த், தனது அனுபவமிக்க நடிப்பின் மூலம் தனது

கதாபாத்திரத்திற்குகூடுதல் பலத்தை சிறப்பு சேர்த்துள்ளார்.

ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்துள்ள பிந்து மாதவி, மாதி காதலனால்

பிளாக்மெயில் செய்யப்படுவதும், கடத்தப்பட்ட

குழந்தையை மீட்க போராடுவதில், உணர்வுப்பூர்வமாக சிறப்பாக நடித்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரத்தில், மிரட்டியுள்ள லிங்கா, நடிப்பில் சிறப்பான
மிளிரசெய்கிறார்.

சாஜி, ரெடின் கிங்ஸ்லி, முத்துகுமார், ரமேஷ் திலக் என மற்ற வேடங்களில்

அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும்,

பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம்
சேர்த்திருக்கிறார்.

திருநங்கைகளின் பாடல் ஒன்ஸ்மோர்
கேட்கும் விதத்தில் இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், சஸ்பென்ஸ் திரில்லர்

ஜானருக்கு ஏற்ற வகையில் வண்ணங்களையும்,

கோணங்களையும் கையாண்ட விதத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் ஷால் லோகேஷின் திரைக்கதையை

வேகமாகவும், காட்சிகளை விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார்.

கடத்திய குழந்தையை மீண்டும் மீட்க போராடும் தாயின்

வேதனை, சிறைபிடித்த காதலியை மீட்க

துடிக்கும் காதலனின் போராட்டாமும் இரண்டையும் பார்வையாளர்கள்

கடத்தும் வகையில் காட்சிகளை தொகுத்துள்ளார்.

எழுதி இயக்கியிருக்கும் மு.மாறன், குழந்தை கடத்தல் பின்னணியில்

இரண்டையும் வெவ்வேறு விதமான சம்பவங்களை பிளாக்மெயில்

சம்பவங்களுக்கு திரைக்கதையில் அமைத்த விதம்

விறுவிறுப்பாக இருந்தாலும் கொஞ்சம் யூகிக்க முடியாதபடி உள்ளது.

படம்‌‌ ஆரம்பத்திலி ருந்தது முதல் முடிவு வரை படம் விறுவிறுப்பாக

பயணித்து.குழந்தையை கடத்தல் மூலம் எதிர்பாரத விதமான

திருப்பங்கள் படத்தின் சுவாரஸ்யத்தை

அதிகரிக்கச் செய்கிறது. அதே சமயம், குழந்தை தொடர்ந்து

கடத்தப்படுவது, ஒரே விஷயத்தை திரும்ப காட்டுவது போல் இருக்கிறது,

திரைக்கதையில்
இந்த முழுமையான சஸ்பென்ஸ் திரில்லர்

அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி.

படம் பார்த்தத்தில், ” ” “பிளாக்மெயில்” சின்னச் சின்ன
குறைகள்

இருப்பினும் கதை கடந்து போகும் விதத்தில் சிறப்பு

என்று சொல்லலாம்.
அனைவரும் படத்தை பார்த்து கண்டு களியலாம்…