மிராய்” திரைப்பட விமர்சனம்…

 

மிராய்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் : – தேஜா சஜ்ஜம், மனோஜ் மஞ்சு, ரித்திகா

நாயக், ஷ்ரியா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு, கெட்அப் ஸ்ரீனு

டைரக்டர் :-கார்த்திக் காட்டம்‌நேனி .மணிபாபு
கர்ணம்.

இசை: கெள்ரா ஹரி.

ஒளிப்பதிவு :- கார்த்திக் கட்டம் னேனி.

கலை இயக்குனர்:- நாகேந்திர
தங்கலா.

தயாரிப்பாளர்கள்:- பீப்பிள் மீடியா

ஃபேக்டரி – டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத்

கலிங்கத்து நாட்டின் போருக்குப் பின் பேரரசன் அசோகன்

சாகாவரம் பெறக்கூடிய மிக பெரிய

ரகசியத்தை 9, புத்தகங்களில் மறைத்து வைக்கிறார்.

மிகப்பெரிய தீய சக்திகளை இந்த 9. புத்தகங்களில் கைபற்றாமல் இருக்க

9 . வீரர்களை நியமிக்கிறார். பல ஆயிரம் ஆண்டுகளுக்குப்

பின்னர், தற்போதைய நவீன காலக்கட்டத்தில், மந்திர சக்திகள்

கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 .

புத்தகங்களை அடைய முயற்சிக்கிறார்.

மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் ஒன்றின் உதவியுடன் மனோஜின் முயற்சியை

முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா களத்தில் இறங்க, அதை அவர் எப்படி செய்கிறார் ?

என்பதை மிக பிரமாண்டமாக சொல்வது தான் “மிராய்”. கதைக்களம்.

நாயகன் தேஜா சஜ்ஜா, ஃபேண்டஸி படங்களின் கதைக்கு கனகச்சிதமாக

பொருந்தியுள்ளார். பார்வையாளர்களை படத்துடன் பயணிக்க வைத்துவிடுகிறார்.

தான் யார் ?,‌என்பதை தன்னிடம் இருக்கும் மிராயின் சக்தி என்ன ? என்று தெரியாமல்

இருப்பவர், அது தெரிந்ததும் எடுக்கும் விஸ்வரூபமும் திரையரங்கில் நிச்சயம் கைதட்டல் பெறுகிறார்.

வில்லனாக நடித்து ள்ள மனோஜ் மஞ்சு, 9 புத்தகங்கள் மூலம் சாகாவரம் பெற்று,

உலகத்தை ஆளும் தனது எண்ணத்தையும், திறமை மிக்கவர்கள்

கடவுள் என்ற தனது கருத்தையும்

அழுத்தமாக பதிவு வசெய்யும் வகையில் நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா நாயக், நாயகனின் இளம்

வயது தாயாக நடித்திருக்கும் ஸ்ரேயா சரண், முனிவராக நடித்திருக்கும்

ஜெயராம், ஜகபதி பாபு, கெட்டப் சீனு என அனைவரும்

கதாபாத்திரத்தின் ஏற்ப நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் பாடல்களும்,

பின்னணி இசையும் பிரமாண்டத்திற்கு பிரமாண்டம்
சேர்த்திருக்கிறது.

குறிப்பாக சண்டைக்காட்சி
களில் போது இடம்பெற்றுள்ள

பின்னணி இசை பவித்தியாசமாக மட்டும் இன்றி, பார்வையாளர்களின்

கனவனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் கட்டம்னேனி கேமரா ஒரு கதாபாத்திரமாகவே

திரையில் வலம் வந்து பிரமிக்க வைக்கின்ற காட்சிகள் வருகிறது.

கலை இயக்குநர் ஸ்ரீ நாகேந்திர தங்கலாவின்

கைவண்ணம் படம் முழுவதும் பேசுகின்றன. பிரமாண்டத்தின்

உச்சத்தை வடிவமைக்கப்பட்ட செட்டுகளும் கதை

சொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு
ள்ளது. படத்தின் கூடுதல் சிறப்புயமைப்புகள்

கதையாசிரியர்கள் கார்த்திக் கட்டம்னேனி மற்றும்

மணிபாபு கர்ணம் கடவுள் ராமரையும், அவர் கையில்

இருக்கும் வில்லையும் மையமாக கொண்டு ஒரு பிரமாண்டமான ஃபேண்டஸி ஜானரை

மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள். மனிபாபு கர்ணத்தின் வசனங்களும் சிறப்பு.

படத்தை இயக்கியிருக்கும் கார்த்திக் கட்டம்னேனி, ஆன்மீகம் பேசும் படம் என்றாலும், அதை

அனைத்து தரப்பினரும் கொண்டாடி ரசிக்கும் கூடிய கிராபிக்ஸ் காட்சிகளை

கையாண்டிருப்பதால் “மிராய் “என்ற கோளை மையப்படுத்திய கதையில், மந்திர

புத்தகம், மந்திர ஊர், மந்திர வித்தைகள் உள்ளிட்ட பல்வேறு

விஷயங்களை வியக்க கூடிய விதத்தில்

காட்சிப்படுத்தி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.

படம் பார்த்தத்தில்,ஆதி
காலத்து மந்திர தந்திரங்களில்பழங்கால வரலாற்று புத்தகங்ளில் உள்ள

நிகழ்வுகளை பின்னப்பட்ட கற்பனை கலந்த கதைக்களம்.
தான் ‘மிராய்’ வியக்க பவைக்கும் ஃபேண்டஸி படம்.வந்துள்ளது.

அனைவரும் முக்கிய மாக குழந்தைகள் சிறுவர்கள் பார்க்க வேண்டிய திரைப்படம்…