“ரஜினி கேங்க்” திரைப்பட விமர்சனம்

 

“ரஜினி கேங்க்” திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் : –
ரஜினி கிஷன், த்விவிகா, முனீஷ்காந்த்,

மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ், கல்கி மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :-
எம்.ரமேஷ் பாரதி.

மியூசிக் :-
எம்.எஸ்.ஜோன்ஸ்
ரூபெர்ட்டின்.

ஒளிப்பதிவு என்.எஸ்.சதிஷ்குமார்.

படத்தொகுப்பு:-
ஆர்.கே.வினோத்
கண்ணா.

தயாரிப்பாளர்கள் :-

மிஸ்ரி என்டர் பிரைஸ்.சி.எஸ் – பத்ம சந்த். சி.ஆரியன்ட்ராஜ் & ரஜினிகிஷன்.

காதலர்களாக நாயகன் ரஜினி கிஷனும், நாயகி த்விவிகாவும் இருவரும் ஊரை

விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ளுகிறார்கள்.

அந்த சமயத்தில் அப்போது அவர்களுக்கு

முனீஷ்காந்த் தனது காரில் லிப்ட் கொடுக்கிறார்.

வழியில் திருடனான கல்கியும் அந்த காரில்ஏறிக்கொண்டு பயணிக்கிறார்.
இரவு நேரத்தில்

பயணிக்கும் போது இவர்கள், ஏதோ ஒரு இடத்திற்கு சென்று விடுகிறார்கள்.

பல்வேறு தரப்பினர், பலகாரணங்களுக்
காக இவர்களை தேடிக் கொண்டிருக்
கிறார்கள்.

இதற்கிடையே, ரஜினி கிஷன் – த்வ்விவிகாவுக்கு திருமணம்

நடக்கிறது. அந்த சமயம் திருமணத்திற்குப் பிறகு காமெடி ஜானராக பயணித்த படம் திடீரென்று

வேறு ஒரு ஜானரில் பயணிக்க தொடங்குகிறது. அது என்ன ஜானர் ?, அதன் மூலம்

இயக்குநர் சொல்ல நினைத்ததை சரியாக சொன்னாரா? இல்லையா ? என்பதை தான் படத்தின் மீதிக்கதைக்களம்.

நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் ரஜினி கிஷன், காமெடி ஜானர் படத்திற்கு பொருந்தும் முகம்.

ஆட்டம், காதல், காமெடி என படம் முழுவதும் அசால்டாக

நடித்திருக்கிறார் முதல் படம் என்ற பயமே இல்லாமல் அசால்ட்டாக நடித்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கிறார் த்விவிகா, காமெடி மற்றும் காதல் பாடல்கள் என இரண்டு

தளங்களிலும் கவர்கிறார். நடிப்பில் அளவாக நடித்திருக்கிறார்.

முனீஷ்காந்த் காமெடி என்ற பெயரில் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனை கொடுத்து

பார்வையாளர்களை சலிப்படைய செய்கிறார்.

கூல் சுரேஷ் தேவையில்லாமல் கத்திக்கொண்டு

இருக்கிறார் அதுகாதை கிழிக்கவைக்கிறது. மொட்டை ராஜேந்திரன், கல்கி ஆகியோர்

வரும் காட்சிகளிலும் காமெடி நெடி குறைவ இருக்கிறது.

இசையமைப்பு எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின்

இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கமர்ஷியலாக இருக்கின்றன.

ஒளிப்பதிவு என்.எஸ்.சதீஷ் குமார், படத்தையும், பாடல்

காட்சிகளையும் கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்

சாதாரணமான கதையை, மிக சாதாரணமாகவே படத்தொகுப்பு செய்திருக்கும்

படத்தொகுப்பு ஆர்.கே.வினோத் கண்ணா, காட்சிகளின்

நீளத்தில் கூடுதல் கவனம் செலுத்திகுறைத்து
இருக்கலாம்.

எழுதி இயக்கியிருக்கிறார் எம்.எஸ்.ரமேஷ் பாரதி, முழுக்க முழுக்க

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். பார்வையாளர்கள்

எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்பதில் அதிகம்

மெனக்கெட்டிருக்
கிறார் இயக்குநர் அதற்காக காமெடி

நடிகர்களை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கிறார்.

இயக்குநர் எம்.எஸ்.ரமேஷ் பாரதி, காமெடி நடிகர்கள் மீது செலுத்திய

கவனத்தை தனது நகைச்சுவை எழுத்தில் செலுத்தியிருந்தால், பார்வையாளர்களை

கொஞ்சமாக சிரிக்க வைத்திருக்கலாம் இந்த ரஜினி கேங்க் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருக்கும்.

படம் பார்த்தத்தில், ‘ரஜினி கேங்க்’ ஒரு காமெடி கேங்க இதுபோன்ற நிறைய

படங்கள் வந்து விட்டது. திரும்பவும் அனைவரையும் சிரிக்க வைக்க வந்து

விட்டார்கள் அனைவரும் திரையரங்குகளில் கண்டு களியலாம் …