‘TN 2026’ திரைப்பட விமர்சனம்…

 

‘TN 2026’ திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் : –
நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : –
உமாபதி எஸ். ராமையா.

மியூசிக்:-
தர்புகா சிவா.

ஒளிப்பதிவு:-
பி.ஜி.முத்தையா.

படத்தொகுப்பு:-
அருள்.ஆர்.தஙகம்.

தயாரிப்பாளர்கள் :- கண்ணன் ரவி குரூப்ஸ் – கண்ணன் ரவி

வட மாநிலத்தை சேர்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நட்டி நட்ராஜ், நடித்துள்ளார். அவர்

சென்னைக்கு பிழைப்பு தேடி வருகிறார் அவர் எதிர்பாரதவிதமாக

நடிகராகி விடுகிறார். அவரது முதல் படமே நல்ல மக்களிடம் வரவேற்பு பெறுகிறது, மக்கள் மனதில்

அடுத்த எம்.ஜி.ஆர் என்ற இடத்தை பிடித்து விடுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர

ரசிகரான ஜமீன்தார் தம்பி ராமையாவும், நட்டி எம்.ஜி.ஆர் இடத்தை பிடிப்பார்

என்பதை தணிப்பது, அவனுக்காக அனைத்து எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து

சினிமாவில் அவரை உச்ச நடிகராக்கிறார். அந்த பயணத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

தமிழ் சினிமாஉலகில் உச்ச நடிகராக உயரும் நட்டியை அரசியல் பேச வைப்பது,

புதிய அரசியல் கட்சியை தொடங்க வைக்கிறார் .
தம்பி ராமையா, 2026 ஆம் ஆண்டு அவர் தான் தமிழகத்தின் முதல்வர், என்ற

நம்பிக்கையை அவரது மனதில் பதிய வைத்திருந்த அரசியல் பயணிக்க வைக்க வேண்டும் என்ற நிலையில்,

நட்டி நட்ராஜ் எடுக்கும் ஒவ்வொரு திடீர் முடிவு அரசியல் உலகின் பெரும்

மாற்றத்தை, தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. அது என்ன ?

என்பதை அரசியல் நையாண்டியாக மட்டும் இன்றி திரையுலக

நட்சத்திரங்களின் அரசியல் பயணத்தையும்

நையாண்டி செய்கிற விதமாக சொல்வது தான் .TN.202600 – திரைப்பட கதைக்களம்.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை தொடர்ந்து தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர்

அரசியல் களத்தில் பயணித்தால், சினிமாவில் அவர்

இடத்தை பிடித்தது போல் அரசியலில் யாரும் பிடிக்கவில்லை,

என்ற உண்மையை நகைச்சுவையாகவும்நையாண்டியாக சொல்லியிருக்கிறார்

இயக்குநர் உமாபதி ராமையா, வேற்று மாநிலத்தைச் சேர்ந்த உச்ச நடிகர்

ஒருவரின் சினிமா பயணத்தின் மாபெரும் வெற்றி, காதல், திருமண

உறவில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றுடன் அவரது

ஆரம்பிக்காத அரசியல் பயணத்தின் முடிவையும் சேர்த்து

திரைக்கதையாகி
இருப்பதை, அதை தற்போதைய உச்ச

நடிகரின் அரசியல் பயணம் மற்றும் அவரது உருவ

தோற்றத்தில் பாதிப்புடன் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நட்டி நட்ராஜ்

குல்கந்த் குமார் என்ற தங்க நட்சத்திரமாக திரையில் ஜொலிக்கிறார்.

பிழைப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழை தவறாக உச்சரிப்பதால்

மக்கள் மனதில் ஒரு நடிகராக உச்சத்தை தொடும் அளவிற்கு அவரது நடிப்பு மற்றும் உடல்மொழி

அனைத்தும் அவரது கதாபாத்திரத்தில் நியாயம் சேர்த்திருக்கிறார்.

ஜமீனாக இருப்பினும் குல்கந்த் குமாரின் சேவகனாக, அரசியல்

வழிகாட்டியாக பயணிக்கும் தம்பி ராமையாவின் தோற்றம் மற்றும்

கெட்டப், உச்ச நடிகர் ஒருவரது ரசிகர் மன்ற தலைவரை நினைவுப்படுத்
துவதுடன்

அவரது நடிப்பில் மற்றும் திட்டங்கள், தற்போதைய தமிழக அரசியலின்

சூறாவளியாக வரும் கிற ஒரு நடிகரின் செயல் வீரரை நினைவுப்படுத்து
கின்றனது.

எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் தங்க நட்சத்திரத்துடன் பயணிக்கும் அரசியல்வாதியாக

வலம் வருவதால், அவர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை.

கதாநாயகியாக நடித்திருக்கிறார்
ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன்,

யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்

திரைக்கதையில் பயணத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா பழைய காலக்கட்டங்களுக்கான காட்சிகள்

மற்றும் பாடல் காட்சிகளை வண்ணங்கள் மூலம் வித்தியாசப்படுத்தி

காட்டியிருப்பதுடன், தற்போதைய காலக்கட்டத்தினை அதிகப்படியான வண்ணங்களை

பயன்படுத்தாமல் அரசியல் களங்களுடன் ஒத்துப்போகும் விதத்தில் மிக

எளிமையாக, இயல்பாகவும் காட்சிகளை படமாக்கியிருக்
கிறார்.

தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்

ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்தை

கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

உச்ச நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை மையக்கருவாக

கொண்டு எழுதப்பட்டிருக்
கின்றன

திரைக்கதையை ஒரு கோர்வையாக தொகுத்து சுவாரஸ்யமான படமாக

கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அருள் ஆர்.தங்கம்.

தம்பி ராமையாவின் கதை அரசியல்வாதிகளை மேலோட்டமாக

நையாண்டி செய்தாலும், அரசியல் ஆசையில் வலம் வந்த, வலம்

வந்துக் கொண்டிருக்கிற திரை நட்சத்திரங்களை நையாண்டி செய்வதுடன், அவர்களின் அரசியல் சிந்தனை மற்றும் அவர்கள்

எதிர்பார்க்கப்படுகிறமாற்றத்தில் பின்னணியில் இருக்கும்

நியாயத்தை தொட்டு சென்றிருக்கிறார்.
தந்தையின் கதைக்கு திரைக்கதை அமைத்து

இயக்கியிருக்கிறார். உமாபதி ராமையா, தனக்கு முந்தைய காலக்கட்டத்தில்

தொடங்கிற கதையை தற்போதைய காலக்கட்டத்தின் அரசியல்

சம்பவங்கள் மற்றும் திரை நட்சத்திரங்களில் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை

கலகலப்பாக, சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் காட்சியமைப்புகள் பல

நட்சத்திரங்களை நினைவுப்படுத்தி யாரையும் புன்படுத்தாமல்

அவர்களது அரசியல் பாணியில் அவரது எண்ணங்களுக்கு பின்னணியில் இருக்கிற சம்பவங்களை,

அதற்கு காரணமானவர்
களை கற்பனையுடன்

சொல்லியிருப்பதால்படம் முழுவதும் பார்ப்பவர்களை, சம்மந்தப்பட்ட நடிகர்களின் நலன்

விரும்பி ரசிகர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.

அரசியல் நையாண்டி படம் என்று சொல்லிவிட்டு, அரசியல் களத்தில் பயணிக்க விரும்பிய

மற்றும் பயணிக்கும் திரை நட்சத்திரங்களை மட்டுமே அதிகம்

நையாண்டி செய்திருக்கிறார். இயக்குநர் உமாபதி ராமையா, குல்கந்த் குமார் என்ற

கதாபாத்திரத்தின் மூலம் பல அரசியல் கேள்விகளை எழுப்புபாமல்,

சம்பவங்களை மட்டுமே தொகுத்திருப்பது கதையை ஒரே

இடத்தில் திரும்ப வைத்து கொஞ்சம் சலிப்பு செய்கின்றனது. இருப்பினும், காட்சிகள் மற்றும்

வசனங்களில் இருக்கிற நகைச்சுவை கலந்த அரசியல் கிண்டல்கள்

குறைகளை மறந்து பார்வையாளர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கின்னறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருந்த ஏக்கத்தை போக்கும் விதத்தில் மட்டும் இன்றி, தற்போதைய நடிகர்களின்

அரசியல் மற்றும் பதவி ஆசைக்குப் பின்னால் இருக்கின்றன பல சுயநலவாதிகளின் சூட்சிகளை கலகலப்பாக சொல்லி ரசிக்க

வைத்திருக்கிறார். இயக்குநர் உமாபதி ராமையா, தேர்தல் நேரத்தில் ஒரு

நேர்மையான அரசியல் படத்தை கொடுத்து தமிழக

அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்
கிறார்.

படம்‌ பார்த்தத்தில், ’TN 2026’ அரசியலை மையமாக வைத்து நையாண்டியாக,

நுணுக்கமாக நகைச்சுவையுடன் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார்கள்.

அனைவரும் இந்த தேர்தலில் இதுவும் காமெடி கலந்த அரசியல் ட்ராமா

குடும்பத்தோடு திரையரங்குகளில் கண்டு களியலாம்.மகிழ்ச்சியோடு வெளியே வரலாம்.