“கர” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
தனுஷ்,மமிதா பைஜூ, சுராஜ்வெஞ்சர
மோடு,கே.எஸ்.ரவிக்குமார்,
ஜெயராம்,எம்.எஸ்.
பாஸ்கர், ஸ்ரீஜா ரவி, கருணாஸ், ப்ருதிவி பாண்டியராஜன்,
வேலராமமூர்த்தி,
ஷரவணசக்தி. மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர்:-
விக்னேஷ் ராஜா.
மியூசிக்:-
ஜிவி. பிரகாஷ் குமார்.
ஒளிப்பதிவு:-
தேனி ஈஸ்வர்.
படத்தொகுப்பு:-
ஸ்ரீஜித் சாரங்.
கலை இயக்குனர்:-
மாயபாண்டி.
தயாரிப்பாளர்கள்:-
வேல்ஸ் இன்டர்நேஷனல்
டாக்டர் ஐசரி கணேஷ்.மற்றும் குஷ்மிதா கணேஷ்.
இந்த “கர”சாமி என்ற திரைப்படத்தை 1990-ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த
உண்மைச் சம்பவ வைத்து இந்த கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த கதைக்களத்தை
அமைத்துள்ளார்கள்.
அப்போது உலகப் போரில் தமிழக விவசாயிகள்
எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதை வலியுறுத்தி இதுல மிகத்தெளிவாக
எதார்த்தமாக கதையை மையப் படுத்திக்கதையை எழுதிருக்கிறார் இயக்குநர்.
விக்னேஷ்ராஜா
அந்த காலத்தில் விவசாயிகளை எப்படி ஏமாற்றி
வங்கிகளில் பணிபுரியும்…ஊழியர்கள் கொள்ளையடித்தனர்
விவசாயிகள் வாங்கிய கடனைகளை
அடைக்க முற்படுகிற கதாநாயகன் கர சாமி தனுஷ்.. தான்
எப்படியும் மனம் திருந்தி வாழ நினைத்தாலும்
தன்னை தானே நம்பி இருக்கும் மக்களுக்காக அந்த நாட்டுக்கும் நல்லது செய்ய வஞ்சித்த
வங்கியில் பணத்தை வசூல் செய்ய வேண்டிய சூழ்நிலை வசூல் கதாநாயகனாக தனுஷ் நடித்துள்ளார்கள்.
தனுஷ், மமிதா
பைஜூ, சுராஜ் வெஞ்சரமோடு, கே எஸ் ரவிக்குமார்,
ஜெயராம், எம் எஸ் பாஸ்கர், ஸ்ரீஜா ரவி, கருணாஸ், ப்ருதிவி
பாண்டியராஜன்.மற்றும் பலர் நடித்துள்ளனர்..
ரசிகர்களுக்காக தனிப்பட்ட இல்லாமல் காட்சிகளை வைக்காமல் ஒரு
கதையின் கதாநாயகனாகவே தனுஷை காட்டியுள்ளார்.
இயக்குனர்…
பேங்க் கொள்ளையடிக்க திட்டம் போடுவதும் தந்தையிடம் நிலத்தை விற்க சொல்லி
பேசுவதும். மருத்துவமனையில் தவிக்கிற காட்சிகளில்… காவல்நிலையத்தில்
கதறும் காட்சிகளில் என படம் முழுக்க கரசாமியாக மாற
கைத்தட்டல்களை பெறுகிறார்.தனுஷ்..
நிறைய படங்களில் இளமையான
பெண்ணாக பார்த்த
மமிதா இதுல கிராமத்து பெண்ணாக
நடித்திருக்கிறார்.. அவரும் இயல்பான நடிப்பின் மூலம் வரும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்..
போலீஸ் கேரக்டரில் மிரட்டி இருக்கிறார்
மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு.. மலையாளம் கலந்த தமிழ் குரலில் அசத்தல் நடிப்பில்..
எதார்த்தமான கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தார்.
பேங்க் மேனேஜராகவும்
ஜெயராம் நடித்திருக்கிறார்..
வயதான விவசாயி யாகவும் எம்.எஸ். பாஸ்கர் தனுஷின் நண்பராக
பிரித்வி அனைவரும் நடிப்பில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நடிப்பில் கருணாஸ் கொஞ்சம் காமெடி கொஞ்சம் கோபத்தை காட்டி நடித்திருக்கிறார்..
கே .எஸ். ரவிக்குமாரை சிறந்து இயக்குனராக
பார்த்திருக்கிறோம்… இந்த படத்தில் சிறந்த நடிகரான அவதாரமாக
காணமுடிகிறது.. அவர் இறந்த பிறகு அவரைச் சுற்றிய கதைக்களம் .
அமைக்கப்பட்டி
ருப்பது அவரது தனி நடிப்பு பச்சசிறப்பு…
ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்
கிறார்.. தனுஷ்
படங்கள் என்றால் தனி கவனம் எடுத்துக்
கொள்கிறார். “கண்ணம்மா கண்ணம்மா” பாடல்
கண்களை விட்டும் மனதை விட்டும் அது அகலவில்லை…
கே. எஸ். ரவிக்குமார் தனுஷ்…தந்தை மகன்) இருவரின் சென்டிமென்ட்
காட்சிகளில் இசை மூலம் இதயங்களை வருடி செல்கின்றன..
படத்தின் நீளத்தை எடிட்டர் குறைத்து
இருக்கலாம் . முதல் பாதி கொஞ்சம் நீளம்..
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. சில வருடங்களுக்கு
முன்பு நாம் வாழ்ந்த வாழ்க்கையை மலரும் நினைவுகளாக
தந்திருக்கிறார்.. காட்சிகளில் அப்படி ஒரு நேர்த்தி..
போர் தொழில் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா
இந்த படத்தை
இயக்கியிருக்கிறார் தரமான கர சாமியை கொடுத்திருக்கிறார்..
விவசாயிகள் பிரச்னை, பேங்க் கடன், ஜப்தி, திருடனை விரட்டும் போலீஸ் என
கமர்சியல் படங்களுக்கு உரிய அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார்..
மக்களின் பணம் வங்கியில் தான் பாதுகாப்பு
என்றாலும் அந்த வங்கியில் நடக்கும் அவலங்களை
மக்களுக்கு எடுத்து சொல்லி இருக்கிறார்..
வங்கிகளால்
மக்களின் பணம் மறைமுகமாக சூறையாடப்படுவ
தால் அதனை
தட்டிக் கேட்க ஒருவன் வந்தால் என்ன நிலைமை ஏற்படும் என்பதையும்
இந்த திரைக்கதை வடிவமாக கொடுத்திருக்கிறார்..
இயக்குனர்.
“கரசாமி” விமர்சனம்… ரேட்டிங் – 5/5.. மக்கள் பணத்தை வஞ்சித்த வங்கியை
வேட்டையாடுகிறார் வசூல் கதாநாயகன் தனுஷ்…
அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…
பிஆர்ஒ.சதீஷ் ,சிவா ,
ரியாஸ் அகமது.