“சட்டென்று மாறுது வானிலை”திரைப்பட விமர்சனம்…
நடித்தவர்கள்:-
ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன்,யோகிபாபு, கருடா ராம், சத்யன் சரவண சுப்பையா, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர்:-
பாபு விஜய்.
மியூசிக்:-
கிரிஷ் கோபாலகிருஷ்ணன்
ஒளிப்பதிவு:-
ரிச்சர்ட் எம்.நாதன்.
படதொகுப்பு:-
டார்லிங் ரிச்சர்ட்சன்.
தயாரிப்பாளர்கள்:-
ஐடி கம்பெனியில் ஊழியரான ஜெய் மீனாட்சியை பார்த்ததும் இருவரும் காதல் செய்கிறார்.
அடுத்த நாளே தனது
காதலை சொல்லி ஜெய்யை திருமணம் செய்து கொள்கிறார்.
இருவரும் தேன்நிலவுக்காக கொடைக்கானல் செல்லும் ஜெய் –
மீனாட்சி தம்பதிகள், இருவரும் வில்லன் கருடா ராம் நடத்தும் ஊட்டியில் உள்ள சொகுசு ரெஸ்டாரண்ட் விடுதியில் தங்குகிறார்கள்.
அங்கு அவர்களுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகின்றன.
மறுபக்கம், ஜெய் – மீனாட்சி தம்பதியை பிரித்து, மீனாட்சிக்கு மறுமணம் செய்து
வைக்க அவரது அப்பா அமைச்சர் தந்தை முயற்சிக்கிறார்.
சொகுசு விடுதியின் சிக்கல் மற்றும் மனைவியை
தன்னிடம் இருந்து தனது காதலியை பிரிக்க நடக்கும் பெரிய சதியில் இருந்து ஜெய் சிக்கி தவிக்கின்றனர்,
திடீரென்று மீனாட்சி காணாமல் போய் விடுகிறார். அதற்கு
ஜெய் தான் காரணம் என்று சந்தேகிக்கப்படு
கிறது போலீஸ்
ஜெய்யை கைது செய்கிறார்.நல்ல மகிழ்ச்சியில்
தொடங்கிய தனது திருமண வாழ்க்கை, சட்டென்று
உருவெடுத்த பல சிக்கல்களில் சிக்கிக்கொள்ள,
அத்தனை சிக்கல்களையும் ஜெய் தீர்த்து மீண்டும் தன்
மனைவியுடன் சேர்ந்தாரா? வாழ்ந்தாரா இல்லையா ? என்பதை தான் இந்த படத்தின் மீதிக்கதைக்களம்.
என்ன சொல்கிறது
நாயகனாக நடித்திருக்கிறார். ஜெய், வழக்கம் போல் தன் துள்ளல்
நடிப்பை வெளிப்படுத்தியிருப்பினும், விஜய் ரசிகர்களின் என்ற அடையாளத்துடன்,
விஜய் போல் வெளிப்படையாக நடித்திருக்கிறார்.
அது சில காட்சிகளில் அவருக்கு கை கொடுத்தாலும், பல காட்சிகளில் அவரை பலவீனப்படுத்தி
இருக்கின்றன. காதல் காட்சிகளிலும், கண்கலங்க வைக்கும் காட்சிகளில்
முதிர்ச்சியான தனது நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கிறார் மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும், நடிப்பிலும்
கவர்கிறார். தந்தை மீதான கோபம், நண்பர் மீதான வெறுப்பு, கணவர் மீதான காதல் என்று பல்வேறு உணர்வுகளை அளவாக கையாண்டு பாராட்டும்படி நல்ல ஸ்கோர் செய்ந்திருக்கிறார்.
ஜெயின் நண்பராக நடித்திருக்கிறார் யோகி பாபு, வழக்கமான தனது டைமிங் வசனங்கள்
மூலம் சிரிக்க வைக்க முயற்சித்திருப்ப
துடன், டபுள் மீனிங் வசனங்களையும்
பேசி மகிழ்வது வழங்கியிருக்கிறார். ஆனால், அவரது எந்த முயற்சியும்
பார்வையாளர்களை சிரிக்க வைக்க முடியவில்லை யோகி பாபுவிடம் அடி வாங்கும் கதாபாத்திரத்தில்
நடித்திருக்கிறார். ஆதித்யா கதிர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கிறார் கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா என மற்ற கதாபாத்திரங்களில்
நடித்திருப்பவர்கள் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், படத்தை கலர்புல்லாக
காட்சிப்படுத்தியிருக்கிறார். நாயகன், நாயகி இருவரையும் அழகாக
காட்டியிருக்கிறார், காட்சிகளை தரமாக படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையில்
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள்
அனைத்தும் துள்ளலுடன் கூடியரகம். குறை இல்லாத பின்னணி இசை காட்சிகளின்
விறுவிறுப்புக்கிற, திரைக்கதை வேகத்திற்கும் கைகொடுத்திருக்
கிறது.
படத்தொகுப்பாளர் டார்லிங் ரிச்சர்ட்சன், காட்சிகளை
தொகுப்பில், கதை நகர்வதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க
லாம்.
எழுதி இயக்கியிருக்கிறார். பாபு விஜய், தொழில்நுட்பம்
மற்றும் இணையம் மூலம் மனிதர்களின் அந்தரங்கங்கள் எப்படி
திருடப்படுகின்றன, என்ற உண்மையை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.
இளமை ததும்பும் காதல், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை, அதிர்ச்சிகரமான சம்பவங்கள்
ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை
படத்துடன் ஒன்றிவிட செய்கிறார். இயக்குநர் பாபு விஜய், கதை சொல்லிய விதம்
இன்னமும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.
படம் பார்த்தத்தில் “சட்டென்று மாறுது வானிலை”
படம் பார்த்தவர்கள் இந்த காதலர்கள்.உண்மையான காதல் தருணம்
அனைவரும் பாராட்டி வேண்டிய திரைப்படம் பார்க்க
வேண்டிய திரைப்படம். காதல்களின்
சட்டென்று மாறுது மனநிலை.





