பூமணி’, ‘கிழக்கும் மேற்கும்’, ‘மிட்டாமிராசு’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். ‘கருங்காலி’ படத்தை இயக்கி அதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மு.களஞ்சியம். கடந்த ஆண்டு வெளியான ‘களவுதொழிற்சாலை’ படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தற்போது ‘முந்திரிக்காடு’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படம் பற்றி மு.களஞ்சியம் கூறுகையில், ‘‘முந்திரிக்காடு வைத்திருக்கும் மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதை. விலை உயர்ந்த பொருளாக மாறிப்போனது முந்திரி. அதனை விளைவிக்க உழைக்கும் ஏழைகளின் வலியும் வேதனையும் எப்படிபட்டது என்பதை யதார்த்தமாக இப்படம் சொல்கிறது.
இந்தப் படத்தில் ஹீரோவாக புகழ் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக சுபபிரியா நடிக்கிறார். மேலும் படத்தில் சீமான், ஜெயராவ், சோமு, சக்திவேல் உட்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.கே.பிரியன் இசையமைக்கிறார்.
சாதி ஒழிந்தசமூகத்தை உருவாக்க, தன்னை உருக்கித் திரைப்படம் செய்திருக்கிறார் மு.களஞ்சியம். ‘முந்திரிக்காடு’ வெறும் திரைப்படம் அல்ல. அது சாதி என்ற …
அரக்கனை ஒழிக்கும் காட்டுத்தீ
கிராமங்களில் தான் மேல் சாதி கீழ் சாதி என்று பேசி மனிதர்களை பிரிகிறார்கள் நகரத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் 100 குடும்பங்கள் இருந்தால் கூட யார் எந்த சாதி என்று தெரியாது பிள்ளைகளை படிக்க வைக்கலாம் கம்பீரமாக நடந்து போகலாம் என்ற கருத்தை சொல்கிறது முந்திரிக்காடு
படத்தில் நாயகன் புகழ் இவர் செல்லா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் அதுவும் போலீஸ் ட்ரைனிங் முடித்துவிட்டு இந்த கிராமத்துக்கு திரும்பி வரும் பொழுது எதிரிகள் முன்னால் பறையடித்து தனது சிறுகை காட்டுவதும் தனது காதலிக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் எதிரிகளை பந்தாடுவதும் செல்லாகவும் எடுத்திருக்கும் புகழுக்கு புகழ் சேர்க்கிறது
நாயகி சுபப்பிரியா
அருமையான தேர்வு சாதி ஒழிக்கத்தான் காதலிக்கிறேன் என்று செல்லாவை துரத்தி துரத்தி காதலித்து நாம் காதலில் ஜெயிப்போம் என்று நம்பிக்கையூட்டி செல்லாவின் குழந்தையை பெற்றுக் கொடுப்பேன் என்று சொல்லி மேல் சாதி பெண்ணாக 100% பொருந்தி போகிறார் சுகப்பிரியா அவர்களது ஜாதிக்காரர்களை அடித்து நொறுக்கும் பொழுதும் அவரது தலைமுடி அறுக்கும் பொழுதும் அப்பாவே விஷம் வைத்துக் கொள்ள வரும்போது அதை விரும்பி சாப்பிடுவதும் முந்திரி காட்டுக்குள் நடனமாடுவதும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார். சுபப்பிரியா
சினிமா தியேட்டரில் காதலன் படம் பார்த்ததற்காக தன் சாதிக்காரர்களை தன்னை அடித்து நொறுக்கும் பொழுது கல்லை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரையும் விலாசம் போது சபாஷ் வாங்குகிறார் சுபப்பிரியா
நாயகியின் அப்பா வரும் அவர் கதாபாத்திரம் சிறப்பாக இருக்குது அற்புதமாக நடித்திருக்கிறார் தனது இயலாமையோடு மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை காட்டும் அந்த கதாபாத்திரம் சிறப்பாக நடத்தி இருக்கிறது
ரவுடிகளாக வரும் ஒவ்வொருவரும் சாதிய வண்ணம் கொண்டு அடித்து துவைக்கும் நாயகியே இவ்வளவு கொலை வெறுப்பு தேட முடியுமோ அந்த அளவுக்கு தேடி கொள்கிறார்கள்
படத்தின் மைய புள்ளியாக சீமான் அவர்கள் ஆரம்பத்தில் முந்திரிக்காடு என்ற கதை எழுதுவது அதை தர்மபடி முடித்து வைப்பது வெண்ணிலா என்ற குழந்தைக்கு பெயர் சூட்டுவது ஊருக்குள் சென்று மேல் சாதி கீழ் சாதி என்று யாரும் இல்லை எல்லோரும் ஒன்றாக கலந்து உட்கார்ந்தது என்று சொல்வதும் குழந்தைகள் அப்படி உட்காரும்போது அவர்களை பாராட்டி பேசி சமாதானத்தை நிறுவுவது எல்லா வகையிலும் சீமான் அவர்கள் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது
ஏகே பிரியனின் இசை படத்திற்கு பலம் தேவையான இடத்தில் தேவையான செய்ய கொடுத்து கிளைமாக்ஸ் கட்சியில் பரபரப்பு ஊட்டி இருக்கிறார் பைத்தியம் ஆனேன் என்ற பாடல் சாவே உனக்கு சாவு வராது என்ற பாடலும் மனதை தொடுகிறது
இயக்குனர் மு களஞ்சியம் சமூகத்துக்கு தேவையான நல்லதொரு கருத்து மிக்க படப்பை கொடுத்திருக்கிறார் பரியேறும் பெருமாள் அசுரன் படங்களுக்கு முதலிலேயே வந்திருக்க வேண்டிய படம் காலதாமதமாகிவிட்டதால் அது போன்ற படங்கள் முந்திவிட்டது இந்த படத்திற்கு சென்சார் 86 கட்டு கொடுத்திருக்கிறார்கள் எல்லாவற்றையும் மாற்றி அமைத்து எந்த இடத்திலுமே அந்த கட்டு தெரியாத அளவுக்கு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அவர்கள் ஒரு சமூக சிந்தனை அவருக்கு மனதில் இருக்கும் சாதி ஒழிப்பு சிந்தனை எல்லாமே இந்த படத்தில் அற்புதமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மு களஞ்சியம் பாராட்ட வேண்டியவர்