விக்ரம் நடிப்புக்கு விருது நிச்சயம் முழு கதையும் தாங்கி நிற்கிறார் விக்ரம் அவருக்கு வாழ்த்துக்கள்
படத்தின் கேள்விகள்
ஆதித்த கரிகாலனை நந்தினி ஏன் கொல்ல நினைக்கிறாள்
நந்தினி சுந்தர சோழருக்கு பிறந்தவளா வீரபாண்டியருக்கு பிறந்தவளா
அருண்மொழிவர்மன் ஏன் தன் பதவியை விட்டுக் கொடுத்தார்
வந்திய தேவனும் குந்தவையும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா
பாண்டிய வம்சத்தை சேர்ந்தவர்கள் மூன்று சோழ புலிக்குட்டிகளை பௌர்ணமி தினத்தில் கொல்ல நினைத்த நந்தினி யின் திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா
மந்தாகினி ஏன் அருண்மொழிவர்மனை காப்பாற்றினாள்
நந்தினியின் சூதுவான பேச்சைக் கேட்டு கடம்பூர் மாளிகைக்கு ஏன் ஆதித்த கரிகாலன் சென்றார்
ஆதித்த கரிகாலனை கொன்றது நான்கு பிராமணர்கள் என்று சொல்லப்படுவதை ஏன் இயக்குனர் இப்படத்தில் மறைத்தார்
அருண்மொழிவர்மன் ஆதித்த கரிகாலன் வந்திய தேவன் மூவரில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் யார்
திரிஷா ஐஸ்வர்யா ராய் இருவர் நடிப்பில் சிறந்த நடிப்பை வழங்கியது யார்
பிரகாஷ் ராஜை தஞ்சையில் சிறை வைத்தது யார்? ஒரு அரசரை சிறை வைக்க முடியுமா
தன் கண் முன்னாலேயே ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவார் என்று தெரிந்தும் நந்தினி இடமிருந்து வந்தியத்தேவன் காப்பாற்றாமல் போனது ஏன்
இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த இரண்டாம் பாகம் அமைந்துள்ளது வாங்க விமர்சனத்தை பார்க்கலாம்
இலங்கையில் இருந்து தஞ்சை வரும் வழியில் அருண்மொழி வர்மனான பொன்னியின் செல்வனும் (ஜெயம் ரவி), வந்தியத்தேவனும் (கார்த்தி) கடலில் மூழ்க, ஊமை ராணியின் ஆச்சரிய அறிமுகத்துடன் முதல்பாகத்தை முடித்திருப்பார் இயக்குநர் மணிரத்னம்.
அங்கிருந்து இரண்டாம் பாகம் தொடங்கி இருக்க வேண்டாமா அந்த போர்க்கப்பலில் சண்டை போடும் காட்சியில் இருந்து விறுவிறுப்பாக ஆரம்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
இரண்டாம் பாகத்தில், பொன்னியின் செல்வனை ஊமை ராணி காப்பாற்றுகிறார். இன்னொரு பக்கம் சோழர் குலத்தை அழிக்க பாண்டிய ஆபத்துதவிகளோடு இணைந்து சூழ்ச்சியில் இறங்குகிறார் நந்தினி (ஐஸ்வர்யா ராய்). அச்சூழ்ச்சி அறிந்தும் நந்தினியைத் தேடிச் செல்லும் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), கொல்லப்படுகிறார்.
படத்தின் முக்கியமான ஹைலைட் விக்ரம் வரும் அந்த காட்சிகள் தான் ஐஸ்வர்யா ராய் இடம் காதலுக்காக உருகி தன்னையே தியாகம் செய்யும் அந்தக் கதாபாத்திரம் படத்தின் ப்ளஸ்
படம் முழுக்க தாங்கி நிற்கிறார் விக்ரம்
கண்களிலே சோகம் வார்த்தைகளை விரக்தி வீரம் பொதிந்த நெஞ்சில் வா ஓடிப் போகலாம் என்று அழைக்கும் காதல் இப்படி ஒவ்வொரு காட்சியிலும் விக்ரம் பல மடங்கு உயர்ந்து நிற்கிறார்
வந்தியதேவன் மீது குந்தவை (த்ரிஷா) கொண்ட காதல் என்னவானது? உண்மையில் நந்தினி யார்? பொன்னியின் செல்வனைக் காப்பாற்றிய ஊமை ராணி யார்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
. இரண்டாம் பாகம், அழுத்தமானக் கதையை ஆழமாகக் கொண்டிருப்பதால் அதற்கான, மணிரத்னம் டீமின் மெனக்கெடலையும் நடிகர், நடிகைகளின் உழைப்பையும் மொத்தமாகத் தாங்கி நிற்கிறது படம்.
படம் முழுக்க விளக்கம் சொல்வதற்கு நிறைய காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர்
மனிரத்தினம் அதை ஆழமாக சொல்லி இருக்கிறார்
விரிவாகவும் நிதானமாகவும் கதை சொல்லலாம் என்ற தீர்மானத்துடன் மணிரத்னம், ஜெயமோகன், இளங்கோ குமரவேல் கூட்டணி திரைக்கதை அமைத்திருப்பதாகத் தெரிகிறது. இதனால் சில இடங்களில் மெதுவாக நகரும் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் கதையையும் கதாபாத்திர உணர்வுகளையும் பார்வையாளர்கள் முழுமையாக உள்வாங்க வேண்டும் என்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் பாராட்டுக்குரியது
ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்கும் இடையிலான பதின்பருவக் காதலை, அழகான காட்சிகளாக்கி படத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
அந்த காட்சிகள் மனதில் இன்னும் வசந்தமாக இருக்கிறது
நந்தினி பிரிவதும் கரிகாலன் அழுவதும் படத்தின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது
சோழர் குலத்தைப் பழிவாங்குவதில் நந்தினிக்கு இருக்கும் வன்மமும், பிற்பகுதியில் கடம்பூர் அரண்மனையில் ஆதித்த கரிகாலனுக்கும், நந்தினிக்கும் இடையிலான உணர்ச்சிப் பரிமாற்றம் வலுவானத் தாக்கம் செலுத்துவதற்கும் இக்காட்சிகள் உதவியிருக்கின்றன.
அந்த காட்சியில் விக்ரம் நடிப்பு இமயமலை அளவுக்கு உயர்ந்து நிற்கிறது கலங்காத மனதையும் கலங்கடித்து விடுகிறார் விக்ரம்
வந்தியத்தேவன் – குந்தவை காதல் காட்சிகள் மணிரத்னத்தின் இளமை, துளியும் குறையவில்லை என்பதை அழகாக உணர்த்துகின்றன. வந்தியத்தேவன் சிறைபிடிக்கப்பட்டு கண்ணைக் கட்டி வைத்திருக்கும்போது, குந்தவை சந்திக்கும் காட்சியும் அதைத் தொடர்ந்து வரும் ‘அக நக’ பாடலும் மிகச்சிறந்த காதல் காட்சிகளில் ஒன்றாக இடம் பிடிக்கும். அது நிகழும் இடம், சூழல், கேமரா கோணம் என அனைத்தும் சிலிர்க்கும் அனுபவம்.
படத்தில் மிகவும் ஹைலைட்டான காட்சிகளை இதுவும் ஒன்று
கல்கி கதையில் இல்லாத பல விஷயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவர் சொல்லாமல் விட்ட தகவல்களை, சோழர் வரலாற்றுத் தகவல்களின் துணைகொண்டு நிரப்ப முயன்றிருக்கிறார்கள். கற்பனைக் காட்சிகளையும் சேர்த்திருக்கிறார்கள்.
கற்பனை காட்சிகள் நன்றாக தெரிகிறது துண்டாக நிற்கிறது
கதையின் தொடர்ச்சி விடுபடாமல் இருப்பதற்கு இந்த உத்தியைப் பயன்படுத்தியிருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அப்படியே எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு இந்த மாற்றங்கள் ஏமாற்றம் அளிக்கும் என்பது உண்மை
கதையில் கொஞ்சம் தொய்வை உணரும்போது வந்தியத்தேவன் – ஆழ்வார்க்கடியான் உரையாடல் வழியாக நகைச்சுவையைத் தூவியிருப்பதும் ஆதித்தகரிகாலன், அருண்மொழி வர்மன், நந்தினி ஆகியோரின் ஆளுமையை வெளிப்படுத்தும் மாஸ் காட்சிகளும் கைதட்டல்களைப் பெறுகின்றன.
ராஷ்ட்ரகூடர்களுடனான இறுதிப் போர்க்காட்சி, ‘பாகுபலி’ பாதிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவே உணர முடிகிறது.
ஆனால் அந்த அளவுக்கு எதிர்பார்ப்பில் ஏமாற்றியது இந்த போர்க்காட்சி
இயற்கை காட்சி என்பது ஏ ஆர் ரகுமான் பாட்டு போடுவது இப்போது வழக்கம் ஆகிவிட்டது விறுவிறுப்பான பரபரப்பான சண்டையின் போது பாட்டு போடுவது தவிர்க்க வேண்டும் இது ரசிகர்களின் கோரிக்கை
இறுதியில் யார் மணிமுடி ஏற்கிறார் என்பதையும் நாவலிலிருந்து சற்று மாறுபட்டும் வரலாற்றுக்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கிறார்கள்.
ஆதித்த கரிகாலனின் வீரத்தையும் விரக்தியையும் கண்களிலேயே அசாத்தியமாக வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம். நந்தினியுடன் உணர்ச்சிகரமான நீண்ட உரையாடலை நிகழ்த்தும் அந்தக் காட்சி, விக்ரம் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் என்று உணர வைக்கிறது.
என்னை நேருக்கு நேர் பார்த்து கத்தியால் குத்த முடியவில்லை நானே விளக்கை அணைத்து விடுகிறேன் என்று அவர் ஒவ்வொரு விளக்கும்
அணைக்கும் பொழுது படம் பார்க்கும் அனைவருக்கும் மனதில் திக்திக்கென்று இருக்கிறது எப்படியாவது அவரைக் காப்பாற்றி விட மாட்டார்களா என்று ஒவ்வொருவரையும் நினைக்க வைப்பதில் அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
யாரையும் மயக்கிவிடும் நந்தினியின் அழகையும் மனதின் ஆழத்தில் அவள் தேக்கி வைத்திருக்கும் வன்மத்தையும் அதைத் தாண்டி அவளுக்குள் இருக்கும் காதலையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.மற்றும்
கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ரகுமான், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஜெயமோகனின் வசனங்கள் கதைக்குப் பொருத்தமாக இருக்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் அளவாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முதல் பாகத்துக்கு மாறாக கூடுதல் இந்திய செவ்வியல் தன்மையுடன் அமைந்திருக்கிறது பின்னணி இசை. ஒளிப்பதிவாளர் ரவி வர்மாவின் ஓவியம் மற்றும் படப்பிடிப்பு அற்புதமாக வந்துள்ளது
கலை இயக்குநர் தோட்டா தரணி இருவரும் மணிரத்னத்தின் கனவை நனவாக்க இரு கரங்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள்.
மெதுவாக நகரும் இரண்டாம் பாதியை மட்டும் பொறுத்துக்கொண்டால் மிகச் சிறந்த காட்சி அனுபவத்துடன் கூடிய வரலாற்றுப் புனைவுத்திரும்ப அசைபோடலாம்
மூவேந்தர்களின் கட்டுக்கடங்காத வீரமா ,அவர்களின் கள்ள காமமா ?
ஆதித்ய கரிகாலன் இளவரசன் என்பதை மறந்து அடுத்தவர் மனைவி நந்தினியிடம் கண்காணாத இடத்திற்கு வா ஓடிப்போய் பிழைத்துக்கலாம் என்று கூப்பிடுவது ,அடுத்தவர் மனைவி நந்தினியை பார்த்த உடன் பார்த்திபேந்திர பல்லவ இளவரசன் உனக்காக என்ன வேணாலும் செய்கிறேன் சொல் என்று நெருங்குவது ,நந்தினி அம்மா ஊமை ராணியுடன் சில நாள் சுந்தரசோழன்வாழ்ந்தாலும் அவரோ வீரபாண்டியனுக்கு நந்தினியை பெற்றெடுப்பது என இந்த படத்தில் வீரத்தை விட காமத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் மணிரத்னம்
.
அது மட்டுமல்லாமல் சுந்தர சோழன் வைணவர் கூட்டம் ,இவர்களை எதிர்க்கும் கூட்டம் சைவ கூட்டம் என்றும் அதிக நேரம் வரும் நீண்ட வசனங்கள் ,பாண்டிய ஆபத்து உதவிகளை திருடர்கள் போல காட்டியிருப்பது திரைக்கதையின் போக்கை நீர்த்து போக செய்ய வைக்கிறது .
வீரத்தை விட மதமும் ,காமமும் பிரதானப்படுத்துகிறார் இயக்குனர் இது போல நாவலில் கல்கி அவர்கள் விவரித்து இருந்தாலும் சினிமா என்கிற விசுவல் மீடியாவில் இயக்குனர் மூவேந்தர்களின் வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்
சண்டைக் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழன் வீரன் என்பதை இன்னும் ஓங்கி சொல்லி இருக்கலாம்
.
சரி இந்த படத்தில் பாசிட்டிவான விசயமே இல்லையா என்றால் நாற்பது வருட சினிமா அனுபவம் உள்ள மணிரத்னம் ,நடிகர்களான பிரபு ,சரத்குமார் ,விக்ரம்,பிரகாஷ்ராஜ் ,மற்றும் கார்த்தி ,த்ரிஷா ,ஐஸ்வர்யா ,விக்ரம்பிரபு மற்ற நடிகர்கள் அதிக பொறுப்புடன் நடித்ததே பாசிட்டிவாக படத்தை பார்க்க வைத்திருக்கிறது
குந்தவை அழகும் அவர் தோற்றமும் நடிப்பும் அறிவு அழகு
,எல்லா எதிரிகளையும் அழித்து வெற்றி அடைகிறார் அருள்மொழிவர்மன் ,பெருமைகொண்ட சுந்தர சோழன் அருள்மொழி வர்மனுக்கு பட்டம் சூட்டும் வேளையில் தன் சித்தப்பா மதுராந்தக சோழனுக்கு மகுடம் சூட்டி படத்தை முடிக்க பொன்னியின் செல்வன் 1ல் தோன்றிய வால் நட்சத்திரமும் மறைகிறது .
கிளைமாக்ஸ் போர்காட்சிகளை தவிர மற்ற காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் .
என்பதை தவிர படத்தில் வேறு குறைகள் அதிகமாக இல்லை என்பதால் இந்த படம் மீண்டும் உலகமெங்கும் வாழும் தமிழர்களின் கவனத்தை ஈர்க்கிறது