சத்யா என்ற கதாபாத்திரத்தில் கார்ட்டுனீஸ்ட் வேலைக்காக போராடிக்கொண்டிருக்கும் சத்யாவுக்கு சப் எடிட்டர் நிலா மூலமாக அந்த வேலையே கிடைக்கிறது. அதே சமயம், சத்யா வாழும் குடியிருப்புப் பகுதியை காலி செய்யும் மாநகராட்சி அவரின் குடும்பத்தையும், அந்த ஏரியா மக்களையும் அடுக்குமாடி குடியிருப்பில் அமர்த்துகிறது. அங்கு எல்லாமே பிரச்னையாய் இருக்க, அதையே கன்டென்ட்டாக மாற்றி கார்ட்டூன் ஆக்குகிறார் சத்யா. புதிய குடியிருப்பின் பிரச்னைகள் அதிகமாக, பிரச்னையே வேண்டாம் என எல்லாவற்றுக்கும் ஒதுங்கிப் போகிறார் எ திரிகளுடன் மோதினால். தன் அம்மாவும் தங்கையும் பாதிக்கப்படுவார்கள் என்பதாலே ஒதுங்கிப் போக நினைக்கிறார் ஆட்ஜஸ்செய்து கொண்டு வாழ வேண்டும் என்று நினைக்கிறார் சிவா.ஆனாலும் எதிரிகள் அவரை துரத்துகிறார்கள் அவர் வாழ்க்கையே வேண்டாம் என்று முடிவு செய்து மாடியில் இருந்து விழும் பொழுது கோழை சத்யாவுக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. அந்த சக்தி என்ன, கோழை எப்படி மாவீரன் ஆனான் என்பதே மடோன் அஷ்வின் இயக்கியிருக்கும் மாவீரன். படம் முழுக்க சிவா யோகி பாபு காமெடிகள் கலக்கி இருக்கிறார்கள் அதிதி அமைதியான ஜர்னலிஸ்டாக. மனதில் இடம் பிடிக்கிறார் சரிதா பழைய சரிதாவை ஞாபகப்படுத்துகிறார் மௌன கீதம் படத்தில் பாக்யராஜிடம் கோபத்தில் பொங்கி வெடிப்பது போல் இந்த படத்திலும் அநீதியை கண்டு நன்றாகவே பொங்கி வெடிக்கிறார்.
சத்யாவாக சிவகார்த்திகேயன். தன் உடல்மொழியில் இருந்து எல்லாவற்றையும் இந்தப் படத்துக்காக மாற்றியிருக்கிறார். சத்யா கதாபாத்திரத்தில் அட்டகாசமாக பொருந்திப்போகிறார் சிவா. தன் வித்தையை மொத்தமாய் காட்டிவிட்டு, மீண்டும் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு பவ்யமாக முட்டி போட்டும் அமரும் காட்சியாகட்டும்; ” நீ இங்க இருப்பியாடா” என கர்ஜிக்கும் காட்சியாகட்டும் சிவா மாவீரனாக உயர்ந்து நிற்கிறார். நிலாவாக அதிதி ஷங்கர். சப் எடிட்டர் கதாபாத்திரம் என்றாலும் பெரிய வேலையில்லை. ஜாலியாய் வந்துவிட்டு செல்கிறார். சத்யாவின் அம்மாவாக சரிதா, தங்கையாக மோனிஷா, அதே குடியிருப்பில் வாழும் ஆட்டோ டிரைவராக திலீபன் என ஒவ்வொருவரும் அவர்களுக்கான பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் பெரும்பலம் யோகிபாபுவின் காமெடி. பேட்ச் வொர்க் செய்யும் நபராக வரும் குமார் கதாபாத்திரத்தில் பல படங்களுக்குப் பிறகு நிஜமாகவே சிரிக்க வைத்திருக்கிறார். வழக்கமான உருவகேலி ஜோக்குகளாக இல்லாமல், ஒவ்வொரு வசனத்திலும் காமெடிகளை அள்ளிவீசியிருக்கிறார் மிஷ்கினிடம். சிவகார்த்திகேயன் மாட்டிக் கொள்ள அவர் யோகி பாபு வையும் மாட்ட வைத்து அடி வாங்கும் இடம் குபீர் சிரிப்பு. யோகிபாபு. அமைச்சர் ஜெயக்கொடியாக மிஷ்கின். அவரின் உற்றதுணையாக சுனில். இறுதிக்காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார் மிஷ்கின்.
தன் முதல் படமான மண்டேலாவைப் போலவே இதிலும் சமூகப் பிரச்னைகளை ஃபேண்டஸி ஜேனருக்குள் நுழைத்து சுவாரஸ்யமான ஒன்லைன் பிடித்திருக்கிறார். சென்னையில் பூர்வகுடிகளுக்கு புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு என்னும் வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் சோதனைகளை காமெடிகளின் வழி பார்வையாளர்களுக்குக் காட்சிபடுத்தி இருக்கிறார். இயக்குநர். அடுத்து நடப்பதை சொல்லும் குரல் என்னும் ஃபேன்டஸி மூலம் சமூக பிரச்னையை பேசினாலும், நமக்கான பிரச்னைகளுக்கான தீர்வு நம் கேள்விகள் தான் என்பதையும் அழுத்தமாக முன்வைத்திருக்கிறார். ஆரம்பித்த இடம் நோக்கி சில காட்சிகளை முடித்ததும் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறது. மடோன் அஷ்வின் ஒரு நல்ல படத்தை கொடுத்த துள்ளார் சில காட்சிகளைத் தவிர்த்ததன் மூலம் உணர முடிகிறது. பரத் ஷங்கர் இசையில் பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. வீட்டுக்குள் நுழையும் போதும் வரும் பிஜிஎம்மும்,. மாஸ் காட்சிகளின் போது பிஜிஎம்மும் அட்டகாசம். யானிக் பென் சண்டைக் காட்சிகளும், விது அய்யனாவின் ஒளிப்பதிவும் பெரும்பலம்.
க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்க பரபரப்பு !
தன்னுடைய எல்லா படங்களிலும் ஒரு புது முயற்சியை கையில் எடுக்கும் சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் ஒரு பரிசார்த்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
அது நன்றாகவே கை கொடுத்திருக்கிறது தனக்கு என்ன வரும் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்
சிக்கலான அந்த கேரக்டரின் ஆர்க்கின் மையப்புள்ளியை கனக்கச்சிதமாக பிடித்த சிவா சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அத்துடன் வழக்கம் போல எமோஷன், காமெடி என எல்லா ஏரி யாவிலு ம் ஸ்கோர் செய்கிறார். யோகி பாபுவின் காமெடி ஒவ்வொன்றும் அதகளம்.. தியேட்டரில் சிரிப்பு பட்டாசுதான்.
பெரும்பலம். சிவகார்த்திகேயனும் யோகி பாபு வும்
படம் முழுக்க மக்கள் மாளிகை ‘ யில் தான் என்றாலும் விறு விறு ப்பு சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பும் சரிதாவின் உணர்ச்சிபூர்வமான நடிக்கும் மிஷ்கினின் உருட்டல் மிரட்டல் நடிப்பும் அதிதியின் அமைதியான நடிப்பு படத்திற்கு பலம் சேர்க்கிறது விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் படத்துக்கு பலமாக இருக்கிறது மொத்தத்தில் இயக்குனர் குழந்தைகள் இரசிக்கும் படி பெரியவர்கள் சிந்திக்கும் படி ஒரு தரமான படத்தை கொடுத்திருக்கிறார் மாவீரன் ஜெயித்திருக்கிறார். இயக்குனருக்கு வாழ்த்துக்கள் இந்த படத்தை துணிச்சலாக வாங்கி வெளியிட்ட. ரெட் ஜெயண்ட்க்கு வாழ்த்துக்கள்