கொலை விமர்சனம்

விடியும் முன் என்ற அற்புதமான படைப்பை கொடுத்த. பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் எனப் பலரும் நடித்துள்ள படம் ’கொலை’. கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் கொலை படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம். உலக தரமான படம் முழுக்க முழுக்க வித்தியாசமான பாணி ரசிக்க வைக்கிறது

படத்தின் கதை, க்ரைம் த்ரில்லர் கதைகளை எடுத்துக் கொண்டால் ஒரு கொலை.. அதற்கான விசாரணை.. கொலையாளியைக் கண்டுபிடிக்கும் படலம்… கொலைக்கான காரணம்… கொலையாளியின் முடிவு… என இது தான் பேட்டர்னாக இருக்கும். ஆனால் திரைக்கதை மேஜிக் தான் ரசிகர்களின் ஈர்ப்புக்கு காரணமாக இருக்கும். அப்படி ஒரு க்ரைம் த்ரில்லர் பாணி கதையாக தான் ‘கொலை’ படமும் அமைந்துள்ளது. திரைக்கதை படத்தில் சொன்ன விதம் படமாக்கிய விதம் அற்புதமாக இருக்கிறது

பாடகி மற்றும் மாடல் அழகியாக மீனாட்சி சௌத்ரி கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கு ஐபிஎஸ் அதிகாரியான ரித்திகா சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு காவல் துறையில் இருந்து ஒதுங்கி இருக்கும், அதீத துப்பறிவு திறமை கொண்ட விஜய் ஆண்டனி உதவுகிறார். அவருக்கு தன் மகளின் மரணப்படுக்கையில் கிடக்கும் நிலைக்கு தான் தான் என்ற குற்ற உணர்வோடு இருக்கிறார் ஒரு கட்டத்தில் இந்த கொலை வழக்கை ஏற்கிறார் . அவரது பார்வையில் காதலன், மேனேஜர், மாடலிங் உலகுக்கு அறிமுகம் செய்தவர், மாடலிங் கம்பெனி நிர்வாகி, கொலை செய்யப்பட்ட மீனாட்சி என அனைவரது பார்வை வழியாகவும் விவரிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவுக்கு புதுமை இதுவரை சொல்லப்படாத மேக்கிங் இறுதியில் உண்மை குற்றவாளி எப்படி சிக்கினான் என்பதை ஹாலிவுட் மேக்கிங் திரைக்கதையால் ரசிகருக்கு கொடுத்துள்ளார் பாலாஜி குமார்.

நடிகர் நடிகைகள் நடிப்பு எப்படி

விஜய் ஆண்டனி தனக்கான கேரக்டரில் அடக்கி வாசித்துள்ளார் என்றே சொல்லலாம். விசாரணையில் அதிர்ந்து பேசாமல் அமைதியான முறையில் ஒவ்வொன்றையும் டீல் செய்வது ஒரு புறம், மறுபுறம் தன்னுடைய தவறால் மரணப்படுக்கையில் கிடக்கும் மகளுக்காக உருகும் தந்தை என இருவிதமான கேரக்டரை ஓரளவு சரியாக செய்துள்ளார். அவரின் முகபாவம் குற்றவாளியை அணுகும் விதம் மேலதிகா ரவியிடம் இடம் துணிந்து பேசும் போது கிளாப்ஸ். யார் அந்த யாமினி என மெனக்கெட்டு கண்டுபிடிப்பது பலே

ரித்திகா சிங், படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும், மனசாட்சிக்கு உறுத்தாமல் வேலை செய்ய வேண்டும் என நினைக்கும் ‘நல்ல’ போலீஸ் கேரக்டர். ஆனால் அவரது கேரக்டரை இன்னும் அழுத்தமாக கொண்டு போயிருக்கலாம். இருந்தாலும் அவரை பார்க்கும் போது அச்சு அசலாக ஐபிஎஸ் போலீஸ் பார்ப்பது போல இருக்கு பாராட்டுக்கள்.

இவர்களை விட மீனாட்சி சௌத்ரி கேரக்டர் தான் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடகியாக அறிமுகமாகி, மாடல் உலகுக்கு சென்று பிரபலமாகி, போலியான வாழ்க்கை வாழ்வதாக உணரும் நபராக வருகிறார். அந்த பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலுக்கு அவர் வாயசைக்கும் நடனமும் நளினமும் உற்சாகம் கொள்ள வைக்கிறது ரசிகர்களுக்கு கவர்ச்சி திணியும் நடிப்பு திணீயும் வழங்கி உள்ளார் அடுத்து மகேஷ்பாபு படத்தில் கதாநாயகியாமே உச்சம் தொட்டு விடுவார் மீனாட்சி

மற்றபடி அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் கேரக்டர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்கள். அவரை சரியான இடத்தில் சரியான கோணத்தில் இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறார் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதாபாத்திரமாக வந்து நம் கண் முன்னே கதை சொல்கிறார்கள் வித்தியாசமாக இருக்கிறது

சரி படம் என்னதான் சொல்கிறது

1923ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பு துலங்காத ஒரு கொலையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்படுள்ளதாக டைட்டில் கார்டில் சொல்லப்படுகிறது. டீசர், இரண்டு ட்ரெய்லர்களை பார்த்து ரசிகர்கள் சிலாகித்தது படத்தின் மேக்கிங்கில் தான். ஹாலிவுட் தரத்திலான அந்த மேக்கிங் தமிழ் சினிமாவுக்கே புதிதாகத் தோன்றியது

கதையின் ஓட்டம் காட்சிகள் நடப்பது சென்னையா, அல்லது வெளிநாடா என்னும் அளவுக்கு இருக்கிறது. கேமரா கோணம் படப்பிடிப்பு லைட்டிங்ஸ் அரங்க அமைப்பு எல்லாமே கச்சிதமாக பொருந்தியிருக்கிறது ஆனால் குற்றவாளியை இவர் தான் என ரசிகர்கள் முடிவெடுக்காதபடி காட்சிகளை நகர்த்துவது சாமர்த்தியம் என்றால், குற்றவாளையைக் கண்டுபிடிக்கிறேன் என மெதுவான கோணத்தில் நகரும் விசாரணை திரைக்கதை பொறுமையை சோதிக்கிறது. சில லாஜிக் மீறல்களும் ‘இருக்கிறது’.

கிரீஷ் கோபால கிருஷ்ணனின் பின்னணி இசையும், சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் அழகாக கைக்கொடுத்திருக்கிறது. பார்த்த நியாபகம் இல்லையோ பாடல் கேட்கும்படி உள்ளது, மற்ற பாடல்கள் கதைக்காக வைக்கப்படிருந்தாலும் பொருந்திப் போகவில்லை. மொத்தத்தில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை படத்தை அதன் மேக்கிங்கிற்காக தியேட்டரில் பார்க்கலாம்.

படத்தில் 5 ஹீரோக்கள் என்னங்க விஜய் ஆண்டனி மட்டும் தானே ஹீரோ நீங்க எப்படி ஐந்து ஹீரோ க்கள்என்று சொல்கிறீர்கள். என்று கேட்பது எங்க மைண்ட் வாய்ஸ்க்கு. கேட்கிறது. முதல் ஹீரோ படத்தில் விஜய் ஆண்டனி தான் அவரின் நரைத்த முடியும் அமைதியான பார்வையும் சாந்தமான பேச்சும் நுட்பமான அறிவும் என முதல் ஹீரோ அவர்தான். அடுத்த ஹீரோ படத்தின் இயக்குனர் நாலு வருட உழைப்பு அற்புதமான சிந்தனை அற்புதமான மேக்கிங் அற்புதமான திரைக்கதை படத்தை முடித்து இருக்கும் விதம் ஒவ்வொரு கேரக்டரையும் கொண்டு சேர்த்த விதம் மாடல் அழகி மீது நமக்கு அனுதாபத்தை ஏற்படுத்திய விதம் இப்படி இரண்டாவது ஹீரோவாக. ஜொலிக்கிறார் இயக்குனர். வெல்டன். அடுத்த படத்தின் ஒளிப்பதிவாளர் படத்திற்காக அவர் மெனக்கெட்டு இருப்பது. இது சென்னையா. அல்லது வெளிநாடா என்று கேட்கும் வண்ணம் படத்தின் படப்பிடிப்பு இருக்கிறது ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் உயர்ந்து நிற்கிறார். அடுத்த ஹீரோ நம்ம இசையமைப்பாளர் தான் படத்தை தூக்கி நிறுத்துவது அவரின் ஹாலிவுட் தரமான இசை தான் இப்படி ஒரு இசை தமிழ் சினிமாவில் இதுவரை கேட்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது உயிர் துடிப்பாக இருக்கும் அந்த இசை படத்திற்கு மூன்றாவது ஹீரோவாக உயர்ந்து நிற்கிறது. நான்காவது ஹீரோ படத்தின் படத்தொகுப்பும் எடிட்டரும் தான் இரண்டு மணி நேரம் மட்டும் ஷார்ப்பாக படத்தை கொண்டு சென்று இருப்பது படத்தின் வெற்றிக்கு உதவி உள்ளது. சரி ஐந்தாவது ஹீரோ யார் என்று கேட்கிறீர்களா படத்தின் தயாரிப்பாளர்கள் தான் இப்படி ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் துணிந்து செலவு செய்து மக்களுக்கு ஹாலிவுட் படம் போல கொடுக்க வேண்டும் என்று படத்தை கொடுத்த தயாரிப்பாளர்கள் ஐந்தாவது ஹீரோக்களாக உயர்ந்து இருக்கிறார்கள் மொத்தத்தில் இந்த கொலை திரைப்படம் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் படம் ஹாலிவுட் மேக்கங்கில். அசத்தும் படம் திரைக்கதை யில். ஒரு மாடல் அழகின் மூலம் கதை சொல்லப்படுவது புதுமையான பாணி வசனங்கள் கச்சிதமாக இருக்கிறது நடிகர்களுக்கும் டெக்னீஷண்களுக்கும் திரைக்குப் பின்னால் வேலை செய்து இந்த படத்தின் வெற்றிக்கு உதவிய அத்தனை பேரையும் பாராட்டி மகிழ்கிறது. கிளாசிக் சினிமா