சான்றிதழ் பட விமர்சனம்

ஹரி குமார்’ ரோஷன் பஷீர்’ அருள்தாஸ், மனோபாலா. கௌசல்யா. ராதாரவி ரவி மரியா மற்றும் பலர் நடிப்பில் ஜெயச்சந்திரன் என்கிற ஜே வி ஆர் இயக்கத்தில் வெளிவந்துள்ள சான்றிதழ் திரைப்படத்தில் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

தறுதலை என்ற கிராமம் அந்த கிராமத்தில் வெள்ளைச்சாமியாக வாழ்ந்து வருபவர் நாயகன் ஹரிகுமார்

அந்த ஊரிலே எந்த தவறும் நடக்க கூடாது ஒரு முன்மாதிரியான கிராமமாக இருக்க வேண்டும் என்று அந்த ஊரின் பெயரை கருவறை என்று மாற்றம் செய்து அங்கு டாஸ்மார்க் கடை திறக்க கூடாது பெண்கள் தவறு செய்யக் கூடாது எந்த வகையிலும் ஊரில் தனிமனித ஒழுக்கமே கடவுள் என்ற சித்தாந்தத்தின் படி வாழ்ந்து வருகிறார்

ஆனால் அந்த ஊரிலேகுடித்து
விட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் ரவி மரியா மற்றும் மணோபாலா. பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளும் அபூஹான் போன்றவர்கள் அந்த கிராமத்தையே சின்னா பிண்ணமாக மாற்றுகிறார்கள்.

அதைத் தட்டி கேட்டு ஊரை திருத்த நினைக்கும் நாயகன் ஹரிகுமார் வாழ்க்கையில் என்ன நடந்தது.
வில்லன்கள் அவருக்கு என்ன கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டார்கள்
ரோஷன் பஷீர் என்ன செய்கிறார் அவர் அந்த ஊருக்காக அவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்ட பின்னணி என்ன இதுதான் படத்தின் கதை

: படம் ஆரம்பிக்கும் போது ஊர் கட்டுப்பாடு அமைச்சர் கூட ஊருக்குள் நுழைய முடியாது. ஆரவல்லி சூரவல்லி என்று இரண்டு பெண்கள் காவல்
ஊர் நிறைய கேமராக்கள் தவறு செய்து விட்டு யாரும் வெளியே போக முடியாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாட்டை காட்டுகிறார்கள் இது போல் எல்லாம் எந்த ஊரில்
கிராமம் இருக்கிறது என்று நினைத்தாலும் இப்படி ஒரு கிராமம் இருந்தால் எப்படி இருக்கும் என்று நமக்கு நாமே கேட்கத் தோன்றுகிறது இதுதான் ஐயா அப்துல் கலாம் கண்ட அற்புதமான கிராமம் போலும்

சரி அந்த கிராமத்துக்கு இந்தியாவிலேயே சிறந்த கிராமம் என்று விருது கொடுக்கிறார்கள் அந்த விருதை ஊர் மக்கள் வாங்க மறுக்கிறார்கள் அந்த ஊரைத் தேடி வந்து விருது கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் கண்ட்ரோல் கந்தசாமியாக வரும் ராதாரவி அமைச்சராக அங்கு வருகிறார் அவரையும் திருப்பி அனுப்பு ம் கிராமம்
அதனால் கோபம் அடைந்த ராதாரவி அந்த ஊருக்கு சில தொல்லைகளை கொடுக்க நினைக்கிறார் அதற்கு
அவர் கதிர் மற்றும் ஒரு இன்ஸ்பெக்டரை அனுப்புகிறார்.

அதன் பிறகு அந்த பேட்டி எடுக்க சென்ற மீடியாவைசேர்ந்த ஒரு இளம் பெண்ணையும் சிறை வைக்கிறது அந்த கிராமம் மற்றும் இரண்டு பேரை சிறை வைக்கிறது அந்த கிராமம் அப்படி என்னதான் அந்த கிராமத்தில் இருக்கிறது ஏன் இப்படி சிறை வைக்கிறார்கள் என்ற கேள்விக்கெல்லாம் இடைவேளைக்கு பிறகு அருள்தாஸ் மூலமாக பிளாஸ் பேக் காட்சியில் பதில் சொல்கிறார்கள் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் நடக்கும் கதை சிறப்பாக இருக்கிறது ஊருக்கு ஒருவன் வெள்ளைச்சாமியாக பிறந்து விட்டாள் அந்த ஊர் முன்னேற்றம் அடைந்துவிடும் தன்னுடைய 20 கோடி ரூபாய் சொத்தை பேங் கில்
அடகு வைத்து அந்த ஊருக்காக நண்மை செய்ய நினைக்கிறார்.

மகளிர் குழுக்கள் கடன் படக்கூடாது என்று வெள்ளைச்சாமி செய்யும் அந்த நல்ல காரியம் பாராட்ட வேண்டியது.

நடிப்பு எப்படி இருக்கு

ஹரிகுமார் வழக்கமான ஆக்ரோஷமான அடிதடி எல்லாம் விட்டுவிட்டு அமைதியான முறையில் சாந்தமாக அந்த ஊரின் எல்லைச்சாமியாக காவல் காத்து பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார் அவருடன் இருக்கும் அருள்தாஸ் நாயகன் படத்தில் கமலுடன்வரும் ஜனகராஜ் போல் இந்த படத்தில் அவருக்கு வலதுகரமாக வருகிறார்

இருவர்
நடிப்பும் நன்றாக உள்ளது

ஹரிகுமாரின் அக்கா மகளான கௌசல்யா நடிப்பு நன்றாக இருக்கிறது

தன் மாமனுக்கு ஒரு பிரச்சனை என்றால் கணவனை கூட விட்டு விட மாட்டேன் என்று சூழ் உரைக்கும் அந்த நடிப்பு நன்றாக இருக்கிறது

ஹரி குமாரின் மனைவியாக வரும் அந்த நாயகியின் நடிப்பு நன்றாக இருக்கிறது கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம்.

மனோபாலா ரவி மரியா இருவரும் செய்யும் கலாட்டா செம காமெடி

அமைச்சராக வரும் ராதாரவி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அந்த கிராமத்தை தகர்த்து எரிய நினைக்கிறார் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது

ரவி மாறன் சிவன் ஒளிப்பதிவு பளிச்சென்று இருக்கிறது கிராமத்து அழகு அற்புதமாக காட்டியுள்ளது கடைசி சண்டை காட்சியில் கேமரா புகுந்து விளையாடி உள்ளது

ஹரிகுமார் மனைவியுடன் செய்யும் அந்த ஊடல் காட்சியிலும் நன்றாக இருக்கிறது
[

படத்தொகுப்பாளர் கேஸ்ட்ரோ படத்தைக் கச்சிதமாக இரண்டு மணி நேரத்தில் நறுக் சுருக்கு என்று எடிட்டிங் செய்துள்ளார் எல்லா காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளது
பட தொகுப்பாளருக்கு பாராட்டுக்கள்

: பிஜூ ஜேக்கப் இசையில் பாடல்கள் பிரமாதம் பின்னணி இசை நன்றாக வந்துள்ளது வில்லனைகாட்டும் போதெல்லாம் அதற்கு தனி ஒரு பிஜிஎம் நாயகன் வெள்ளைச்சாமி காட்டும்போது அதற்கு ஒரு பிஜிஎம் என்று பல புதுமைகளை செய்துள்ளார் இசையமைப்பாளர்.

கிராமத்து இசையை அழகாக கண் முன்னிறுத்தி உள்ளார் ஜேக்கப்

ஆர்ட் டைரக்டர் நாஞ்சில் ராபர்ட் அந்த ஊருக்காக போடப்பட்ட செட்டிங் காவல் காக்கும் ஆரவல்லி சூரவல்லி கெட்டப் மற்றும் பல இடங்களில் கைவண்ணம் தெரிகிறது

சண்டை பயிற்சி டேஞ்சர் மணி கிளைமாக்ஸ் சண்டை காட்சிஅனல் பறக்கிறது

: நான்கு கோடி பட்ஜெட்டில் உருவானது படம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான படம் தனிமனித ஒழுக்கமே உயர்வை கொடுக்கும் அதை மறந்தால் உன் உயிரை எடுக்கும் என்ற அற்புதமான தத்துவத்தை சொல்லி இருக்கும் இப்படம்
நிச்சயமாக குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் குடும்பத்தில் உள்ள பெண்கள் எப்படி கண்ணியமாக நடக்க வேண்டும் மகளிர் குழுக்கள் மூலம் கடன் வாங்கி சிக்கலில் மாட்டக்கூடாது என்பதை நன்றாக சொல்லியிருப்பது இப்படம்

ஆரம்பக் காட்சியில் காதில் பூ சுற்றுகிறார்கள் ஒரு அமைச்சரை ஊருக்குள் உள்ளே விடாமல் இருந்தால் என்ன நடக்கும் போலீசை சிறை வைத்தால் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதெல்லாம் அறியாமல் இப்படி படம் எடுத்து வைத்திருக்கிறார்களே

என்று நாம் அங்கலாயக்கப்பட்டாலும். இடைவேளைக்கு பிறகு வரும் காட்சியும் கதை அமைப்பு ஆரம்பத்தில் வரும் காட்சிகளுக்கு சரியான விளக்கமாக அமைக்கப்பட்டிருக்கிறது மொத்தத்தில் இந்த சான்றிதழ் ஒரு நற்சான்றிதழ் கிராமம் இப்படி இருந்தால் இந்தியா விரைவில் வல்லரசாகும் என்பதை சொல்லும் இப்படம் நிச்சயம் அனைவரையும் கவரும்

நல்லதொரு சிந்தனையை நல்ல கருத்தாக நல்ல தரமான படமாக கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள்