சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
அண்ணாத்தே படத்துக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் கதை இதுதான்
சிலைகடத்தல் கும்பல் நெட்வொர்க்கை துரத்தும் நேர்மையான காவல்துறை அதிகார வசந்த் ரவி இவர் திடீரென ஒருநாள் இறந்துவிட்டார் எனத் தகவல் வர, மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்க கிளம்பும தந்தை இதுதான் ஒன்லைன்
கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வெளியாகி இருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர்’ எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து ரசிகர்களை சிறைப் பிடித்திருக்கிறதா?
இல்லை சொதப்பி இருக்கிறதா
ரஜினிகாந்த்
மனைவி ரம்யாகிருஷ்ணன், மகன் வசந்த் ரவி, மருமகள் மிர்ணா, பேரன் ரித்து என தன் குடும்பம் சகிதமாக அமைதியான, பொறுப்பான குடும்பஸ்தனாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
ஓய்வு பெற்ற ஜெயிலரான இவரின் மகன் வசந்த் ரவி நேர்மையான அசிஸ்டெண்ட் கமிஷனர். இவரது நேர்மையே இவருக்குப் பல பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது.
சட்ட விரோதமான சிலை கடத்தல் கும்பல் நெட்வொர்க்கைப் பிடிக்கத் தீவிரம் காட்டும் வசந்த் ரவி ஒரு நாள் கொல்லப்பட்டார். என சொல்கிறது காவல்துறை.
பல இடங்களில் மகனை தேடி அலைகிறார் சூப்பர் சார் காவல் நிலையத்துக்கும் சென்று கண்டுபிடிக்க கேட்கிறார் காவல்துறை மெத்தனம் காட்டுகிறது. எதையும் ஆராயாமல் வசந்த ரவி மரணத்தை உறுதி செய்கிறது இப்படியாஒரு காவல்துறை நடந்து கொள்ளும் அதுவும் ஒரு ஜெயலரின் மகனுக்கு நம்பவே முடியாத காட்சி அமைப்புகள் இது
இதன் பிறகு, தன் மகனைக் கொன்றவர்களைப் பழிவாங்க கிளம்புகிறார் ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன்.
’ஜெயிலர்’ திரைப்படத்தில்…
படம் முழுக்க ரஜினி மட்டுமே திரை முழுக்க வருகிறார். குறிப்பாக முதல் பாதியில் இருந்து இடைவேளை வரை ‘பூனையாக இருந்து புலி’யாக மாறுவது என மாஸ் காட்சிகளால் நிறைத்திருக்கிறார்கள்.
நெல்சனின் படங்களில் வரும் டார்க் காமெடி முதல் பாதியில் ஓரளவிற்கு வொர்க்கவுட் ஆகி இருக்கிறது. ஆனால் அதுவே சில இடங்களில் மைனஸாக படத்தின் பொறுமையை சோதிக்கிறது வழக்கமான சுறுசுறுப்பை பாதிக்கிறது டார்க் காமெடி
திரையில் ரஜினி சோர்ந்து போய் காட்சியளிக்கிறார். ரஜினியின் வழக்கமான உற்சாகமும் துடிப்பும் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.
ஜெயிலராக. வரும்
அந்த பத்து நிமிடம் காட்சியில் பழைய ரஜினியை பார்த்து உற்சாகம் அதையே இன்னும் கொஞ்சம் நீட்டித்திருக்கக் கூடாதா என்று ஏங்கும் அளவுக்கு
அனிருத்தின் பின்னணி இசை அலப்பறை
. ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த்ரவி, மிர்ணா என முதல் பாதியில் வருபவர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் அதிர்ச்சி அடைவது சாக் கொடுப்பது கணவனிடம் அதிர்ந்து பேசாமல் இருப்பது நீலாம்பரி ரம்யா வா என்று கேட்க வைக்கிறது யோகி பாபு ரஜினியை கலாய்க்கும் இடங்களில் பழைய யோகி யாக தெரிகிறார்.
’’ முழுக்க ரஜினியைச் சுற்றியே நடக்க, இரண்டாம் பாதியில் ரெடின்னில் ஆரம்பித்து சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், தமன்னா என ஒவ்வொரு காட்சியிலும் ’போதும்டா சாமி’ என சொல்லும் அளவுக்கு யாராவது ஒருவர் கேமியோவில் வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கான மாஸ் காட்சிகள், பின்னணி இசை பில்டப் என அலறிக் கொண்டே இருக்கிறது
நேர்மையான அசிஸ்டெண்ட் கமிஷனர் இறந்திருக்கிறார் எனும் போது காவல்துறையில் எந்த பிரஷரும் இல்லாமல் கேஸை இழுத்து மூடுகிறார்கள், குடும்பம் ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக இருக்கிறது.
ஹீரோ என்றால் வில்லனும் கதையில் வேண்டும் தானே? விநாயகன் வில்லனாக நடிப்பில் மிரட்டி இருக்கிறார். நேர்மையான ஜெயிலராக அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாக இருக்கும் ரஜினி எதற்காக பல மாஃபியா கும்பல் தலைவர்களுடன் நட்பு பாராட்டுகிறார் என்பது படத்தில் தெளிவில்லை.
அவர்களால் பின்னாளில் உதவி கிடைக்கும் என்று அப்படி நடந்து கொண்டாரா என்றும் புரியவில்லை. அவருக்கு உதவி செய்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள் போலீஸ் டிபார்ட்மெண்டில் அவர்களை ஏன் பயன்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுகிறது
அவர்கள் உதவியோடு மட்டுமே கதை முழுக்க தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டு எதிரிகளையும் பந்தாடுகிறார்.
போலீஸ் என்ன தான் செய்கிறது
மகனுக்காக பழிவாங்க செல்லும் தந்தை எனும் போது, ரஜினிக்கும் வசந்த் ரவிக்கும் இடையேயான எமோஷன் காட்சிகள் அழுத்தமாக இருக்கிறது. ஆனால், அது பெரிதாக கைக்கொடுக்காமல் போனது சோகம்!
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், ஸ்டண்ட் சிவாவின் சண்டைக் காட்சிகளும் படத்தில் ரஜினிக்கான மாஸ் காட்சிகளுக்கு மேலும் பலம் கூட்டுகிறது. அனிருத்தின் இசையில் ‘காவாலா’, ‘ஹூகும்’ பாடல்களுக்கு தியேட்டர் தெறிக்கிறது.
இன்னொரு மைனஸ் பொறுமையை சோதிக்கும் அதன் நீளம். முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் ஏராளமான காட்சிகளை வெட்டியிருக்கலாம். குறிப்பாக, தமன்னாவின் கதாபாத்திரம் எல்லாம் படத்தில் அபத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
’ஜெயிலர்
மொத்தத்தில், காமெடி கலந்த முதல் பாதி இரண்டாம் பாதி ரஜினி யின் மாஸ் ரஜினிக்கும் இயக்குநர் நெல்சனுக்கும் வெற்றி படமாக அமைந்துள்ளது ஜெயிலர் ஜெயித்து விட்டதாக சொல்லலாம்
ரஜினிக்காக கதை இல்லாமல் கதைக்குள் ரஜினி இருப்பது பொருத்தமாக இருக்கிறது மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப் கிஷோர் எல்லோரும் வரும் கடைசி காட்சிகள் விக்ரம் படத்தை ஞாபகப்படுத்துகிறார் கள்