ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் ‘வேற மாறி ஆபிஸ்’.

ஆஹா ஓடிடி இணையதளத்தில் ‘டெய்லி சீரிஸ்’ வரிசையில் வெளியாகி இருக்கும் தொடர் ‘வேற மாறி ஆபிஸ்’. ஆறு எபிசோடுகள் வெளியான நிலையில் பதினைந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இந்தத் தொடர் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் ஒரு நிகழ்வு சென்னை யில் வடபழனி இதைக் கொண்டாடும் வகையிலும் இன்னும் அதிகமான மக்களுக்கு இந்தத் தொடரை கொண்டு சேர்க்கும் வகையிலும் சென்னை வடபழனியில் உள்ள நெக்சஸ் விஜயா மாலில் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் விஷ்ணு விஜய், ஆர்.ஜே. விஜய், விக்கல்ஸ் விக்ரம், வி.ஜே. பார்வதி, ஷியாமா, லாவண்யா உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர். சின்னத்திரை நடிகையான லாவண்யா பேசும்போது, “வேற மாறி ஆபிஸ் தொடரில் என் கதாபாத்திரத்தின் பெயர் ரம்யா . இந்த படப்பிடிப்பு தளம் மிகவும் ஜாலியாக இருந்தது. இந்த ஸ்டோரிஸ் பார்ப்பவர்களுக்கு அது ஏற்கனவே எல்லாமே தெரிந்திருக்கும். இருந்தாலும் இந்த தொடர் பார்ப்பவர்களை கலகலப்பை தரக் கூடிய டெய்லி சீரிஸ்.

ஆர்.ஜே. மிர்ச்சி விஜய் பேசும்போது, எங்களோடசீரிஸ் நடித்த நடிகர்கள் கற்பனை கலந்த குழுவினர்கள். நான் இந்த ஈவென்ட்ல முதலில் நான் பேசிவிடுகிறேன் . என்றேன் இல்லை கடைசியாகப் பேசு என்று இருக்கைகள் காலியான பிறகு என்னை பேச சொன்னார்கள். படப்பிடிப்பு தளத்தில் என்னோடு நடித்த சக நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு மேடையில் எல்லாரும் சிறப்பாக நடிக்கிறார்கள். என்னை தேர்வு செய்யும் போது நீங்கள் தான் முக்கியமான கதாபாத்திரம், உங்களை வைத்துத் தான் மொத்த கதையும் நகர்கிறது என்று சொன்னார்கள். விக்கல் விக்ரம் என்னிடம் வந்து இதே டயலாக்கை கூறினான். அப்பொழுது தான் எல்லோரையும் ஒரே டயலாக் பேசி ஓகே செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இந்த தொடரில் நடித்ததன் மூலம் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். எங்கள் இயக்குநர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அவருக்கு நன்றி. நண்பரும் தயாரிப்பாளருமான சிவகாந்த் அவர்களுக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் நன்றி. நானும் ஐ.டி துறையில் சில ஆண்டுகள் வேலை செய்தவன் என்பதால் இந்தக் கதையை என் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடிந்தது. நீங்களும் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள்.” என்று பேசினார்.

இசையமைப்பாளர் சரண் ராகவன் -:நான் இதற்கு முன்பு நவம்பர் ஸ்டோரிஸ் சீரிஸ்க்கு இசையமைப்பு . இப்பொழுது வேற மாறி ஆபிஸ்க்கு பண்ணியிருக்கிறேன். எனக்கும் இதுதான் முதல் மேடை. இந்த வெஃப் தொடர் எல்லாருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஒருவித ஜாலியான இசைக் கலவையை இந்த தொடரில் அமைத்திருக்கிறேன்;

எமர்ஜென்ஸி’, ‘வல்லமை தாராயோ’ ‘கனா காணும் காலங்கள்’ போன்ற வெப் தொடர்களின் இயக்குநரும் ’வேற மாறி ஆபிஸ்’ தொடரின் இயக்குநருமான சிதம்பரம் மணிவண்ணன்-:
, ஆஹா ஓடிடி இணையதள நிர்வாகிகளுக்கும்,. நான் இதற்கு முன் மூன்று வெப் தொடர்கள் இயக்கி இருந்தாலும் இது போல் ஒரு விழா மேடை இதுவே முதல் முறை, இந்த வெஃப் தொடரைப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் பொதுமக்களிடம் கொண்டு போய் சேருங்கள். என் மனமார்ந்த நன்றி