பைரி திரைப்பட விமர்சனம் . தொகுப்பு. ஆர்.சந்திரசேகர்

பைரி திரைப்பட விமர்சனம் . தொகுப்பு. ஆர்.சந்திரசேகர்

 

நாகர்கோவில் நடக்கும் பைரி கதைக்களம். அந்த ஊரை சுற்றி இருக்கும் மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் புறா மேல ரேஸ் விடுவதை ஆர்வமா கொண்டவர்கள் . அந்த பகுதி மக்கள்

 

அவர்களின் அதுவே முழு மூச்சான வேலையா இருப்பார்கள்.

புறாவை வளர்ப்பதில் தனது உயிராக நினைத்து வளர்த்து வருகின்றனர்.

 

அதுல என்னென்ன ஜாதியை சேர்ந்த புறாகள் அதுக்களை எப்படி வளர்த்து, பாதுகாத்து ரேஸூக்கு ரெடி செய்வது விடுவது என்பதை கவனமா செய்து வருகிறார்கள் .

 

விஜி சேகருக்கு மகனாக வரும் நாயகன் லிங்கம், அவர் இஞ்சினியரிங் படித்துவிட்டு புறா வளர்ப்பதில் மிக ஆர்வமா இருக்கிறான் .

 

அம்மாவின் எதிர்ப்பையும் மீறி, தனது வீட்டு மொட்டை மாடியில் புறா வளர்த்து வருகிறான்.

 

புறாவை பறக்க விடுவதில் இவருக்கும் எதிர் வீட்டுக்காரருக்கும் அடிக்கடி சண்டை வரும் . தனது புறாவை கொலை செய்யும் அளவு கோபமா

படுகிறான் . லிங்கம்

 

அந்த ஏரியா இளைஞர்களை யாரும் சண்டை போடக்கூடாது என்று நல்வழிப்படுத்தும் தலைவனாக வருகிறார் ரமேஷ் . என்ற இளைஞர்.

 

அப்பகுதியில் புறா ரேஸ் விடுவதற்கான காலம் நெருங்கி வருகிறது. இதனை ரமேஷ் மெற்ப்பார்வை நடத்துகிறார்.

 

நாகர் கோயில் பகுதியில் சில கொலைகளை செய்து வரும் ரெளடியாக வருகிறார்

 

வினு லாரன்ஸ். புறா ரேஸ் விடும் சமயத்தில் வினு லாரன்ஸுக்கும் லிங்கத்திற்கும் இருவருக்கும் கடுமையான மோதல் எற்படுகிறது வெட்டு குத்து வரை நடக்கிறது.

 

கிளைமாக்ஸ் சீன்னில் படத்தில் என்ன நடந்தது மீதிக் கதை என்ன?

 

நாயகன் லிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அந்த கேரக்டரா மாறி நடித்திருக்கிறார்.

 

வேகம், சுறுசுறுப்பு, எமோஷன்ஸ், காதல், செண்டிமெண்ட் என எல்லா விதத்திலும் களமிறங்கி அறிமுக நாயகனாக வந்து அசத்திலான நடிப்பை கொடுத்திருக்கிறார் .

 

படத்தின் ஆரம்பத்தில் இருந்த வேகத்தை, இறுதி வரைக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார் லிங்கம்

 

அடுத்த கேரக்டராக கதையின் பெரும் பீல்லராக படத்தை தாங்கி லிங்கத்தின் அம்மாவாக வரும் விஜி சேகர்.தன் மகனை தவறான வழியில் செல்ல க்கூடாது என்பதை

ஒரு காக்கை குஞ்சு போல கண்ணும் கருத்தும் பாதுகாத்து அவனை கரை சேர்க்க போராடும் ஒரு தாயாக நடித்து செமையாக நடிப்பில் மெருக்கேற்றி நடித்திருக்கிறார்படத்தின்.

 

வசனத்தை உணர்ச்சி பொங்க பேசி பல இடங்களில் க்ளாப்ஸ் வாங்கிறார் .

 

அடுத்த லிங்கத்தின் நண்பனாக வரும் இயக்குனர் ஜான் கிளாடி. தான் ஒரு சிறந்த இயக்குனர் மட்டும் இல்லாமல் தன் ஒரு சிறந்த நடிகன் என்று நிரூப்பித்துக்காட்டி உள்ளார்.

 

அடுத்து, ரமேஷ் மாதிரி மனிதர் ஊரில் இருந்தால் எந்வித பிரச்சனையும் வராது. என்பதற்கு ரமேஷ் போன்ற ஒரு ஆள் வேண்டும் என்பதை நடிப்பில் நிரூப்பித்துகாட்டி உள்ளார்.

 

நாயகியாக வரும் மேக்னா எலன், ஒரு சில சீன்ல அழகாக நடித்திருக்கிறார்.

 

மற்றொரு நாயகியான சரண்யா, கதைக்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார்.

 

சுயம்பு என்ற வில்லன் வேடத்தில் தோன்றிய வினு லாரன்ஸ் படத்திற்கு பெரிய பலம். அவரது உடல் மொழி, பேச்சு மொழி என அனைத்தும் படத்திற்கு பெரும் துணையான பலம்

 

ஊரில் இருக்கும் ரெளடிகள் இப்படி தான் இருப்பான் என்று ஆக்ரோஷமா பேசும் அளவிற்கு தனது கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார்.

 

படம் எடுக்கப்பட்டவிதம் மண் சார்ந்த இடம் மக்கள்சார்ந்த இடம் இந்த கதைக்களம், அனைத்தும் படத்திற்கு பலமாக இருக்கு .

அந்த ஊரின் மண் வாசனையின் சுவாசம் அதிகம் இருப்பதால் அந்த பகுதி மக்களுடன் எளிதில் மகிழ்ச்சியா தொடர்பு கொள்ளும் விதமாக அமைந்துள்ளது. கூடுதல் மகிழ்ச்சி.தருகிறது

 

ஒளிப்பதிவு படத்தில் பெரும் பங்கு பலமா அமைந்துள்ளது.