ரிபெல் திரைப்பட விமர்சனம். தொகுப்பு ஆர்.சந்திரசேகர்.ரிபெல் திரைப்பட விமர்சனம். தொகுப்பு ஆர்.சந்திரசேகர்.
80-ல் கேரளாவை மையமா வைத்து, மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பாலக்காடு கல்லூரியில்
போராடும் அவல நிலையை இப்படத்தில் காட்டியுள்ள உண்மையான நிகழ்வுகள்.
கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ் புரட்சிகரமான கல்லூரி மாணவராக அசத்தியுள்ளார்.
கதாநாயகி மமிதா பைஜூ அழகாவும் போதுமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை சூப்பர்.
ரிபெல் என்ற படம்
மலையாளிகள் அதிகம் உள்ள கல்லூரியில் தமிழர்களுக்காக தனியாயிருந்து தங்கிப் படிக்க சம உரிமை வேண்டுமென்று வில்லனுடன் எதித்துப் போராடுக் கிறார் .கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார்..
நடிகர் சசிகுமாரின் உதவியாளரான அறிமுக இயக்குனர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கியுள்ளப் படம்
ஜிவி பிரகாஷ் குமாரின் வரவிருக்கும் அரசியலை மையமா வைத்து வெளிவந்துள்ள அதிரடியான எமோஷனலான படம் ரிபெல்.
ஒரு இடத்தில் உன்னை தான் இந்த கல்லூரியில பெரிசா நம்பிக்கையா நெச்சிட்டு இருந்தேன் . எல்லாமே விண்ணாப் போச்சினு ஆதங்கமா சொல்லுமிடத்தில் மெய் சிலிக்கும் இடம் ..
நிகேஷ் படத்தின் கதையின் மூலம் பாலக்காட்டின் சித்தூரில் உள்ள ஒரு கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம்,
மலையாளிகள் அதிகம் வசிக்கும் கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்களில் ஒருவரான பிரகாஷ் நடிக்கிறார் .
எல்லாம் சரியாக நடப்பதாகத் தோன்றினாலும், மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கும் இடையே ஒரு வன்முறை மோதல் திடீரென வெடிக்கிறது, மேலும்
அரசியல்வாதிகள் வாக்குகளைப் பெறுவதற்கு இரு பிரிவினரிடையே வெறுப்பை எவ்வாறு தூண்டுகிறார்கள்.
என்பதைப் பற்றிய காட்சிகள் நமக்குக் காட்டப்படுகின்றன.
பதற்றம் உச்சத்தைத் தொடும் போது, தமிழர்களுக்கு ஆதரவாக நின்று நீதி கேட்க வேண்டிய கிளர்ச்சியை ஜி.வி.பிரகாஷ் மாறுகிறார்.
கல்லூரியில் நடக்கும் தேர்தல் மூன்றில் ஒன்று தனித்து நின்று தமிழ் மாணவர்களுக்காக போராடத்தில் வில்லனால் தமிழ் மாணவர்கள் இருந்த இடம் தீயா எரிகிறது .
இது ஒரு எதிர்ப்புகிளர்ச்சிப் போராட்டமா மாறுகிறது.
ரிபெலின் நடிகர்களில் வெங்கடேஷ் வி.பி., ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத் மற்றும் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பும் செய்துள்ளார். ஜிவி .பிரகாஷ் நடித்தது மட்டுமின்றி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இவர்களின் உழைப்புப் படத்திற்கு மிக பலம்
படத்திற்கு மிகப்பெரிய பலம்.
அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இளைஞர்களை கவரும் வண்ணம் சுவாரஸ்யமாக
இயக்கியுள்ளார்
இயக்குனர் நிகேஷ்.
கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்து, நேஹா ஞானவேல்ராஜா இணைந்து தங்களின் ஸ்டுடியோ கிரீன் பேனரில் தயாரித்துள்ள படம் ரிபெல்
பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு பாடல்களில் அழகாக வந்து போகிறார்..
நடிகர் கருணாஸ் கல்லூரியில் வார்டனா வருகிறார் பொறுமையா நடிச்சிருக்கிறார்.
96 படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆதித்யா பாஸ்கருக்கும் இந்த படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் அவருடைய கேரக்டர் சோகமாக இருக்கிறது .
ரிபெல் மாணவர்களின் போராட்டத்தில் இது ஒரு உச்சம்.