“பகலறியான்” டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது…

“பகலறியான்” டீசர் வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது…

தொகுப்பு :-‌‌ சினிமாடிக்‌ யூனிவர்சல் நியூஸ்..,

‘எட்டு தோட்டாக்கள்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம்

பிரபலமான நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும்

‘பகலறியான்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்
பட்டிருக்கிறது.

இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு,

படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும்

‘பகலறியான்’ எனும் திரைப்படத்தில் வெற்றி, அக்ஷயா காத்தமுத்து, சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன் உள்ளிட்ட பலர்

நடித்திருக்கிறார்கள்.
அபிலாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த

திரைப்படத்திற்கு விவேக் சரோ இசையமைத்திருக்
கிறார். கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி

இருக்கும் இந்த திரைப்படத்தை ரிஷிகேஷ் எண்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம்

சார்பில் தயாரிப்பாளர் லதா முருகன் தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள்

விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்
கிறது.

டீசரில் கதையின் நாயகன் வெற்றி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் பெயர்

வுல்ஃப் என்பதும், அவர் ஒரு இரவு நேர பயணத்தில் தன்னை

நம்பி வந்த பெண்ணை காப்பாற்றும் பொறுப்பினையும்,

தன்னுடைய தங்கையை தேடும் பணியையும் மேற்கொள்கிறார் என்பதும், இதற்கு

இடையூறாக வில்லன்கள் குறுக்கிடுகிறார்கள் என்பதும், இவர்களிடமிருந்து

விடிவதற்குள் நாயகன் என்ன செய்தார்?
என்பது தான்

இப்படத்தின் கதையாக இருக்கும் என டீசர் சொல்கிறது. இதனால்

இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.