’ஸ்மைல் மேன்’ திரைப்பட விமர்சனம்

’ஸ்மைல் மேன்’ திரைப்பட விமர்சனம்

நடித்தவர்கள் :- சரத்குமார், சிஜா ரோஸ், இனியாI, ஸ்ரீ குமார், சுரேஷ் மேனன், நடராஜன், ராஜ்குமார், மலர்ராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் : – சியாம் பிரவீன.

மியூசிக் : – காவஸ்கர் அவினாஷ்

தயாரிப்பாளர்கள் :- சோலைதாஸ் , அனிஷ், ஹரிதாஸன், ஆனந்தன்.டி

சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார், ஸ்மைல்

மேன் என்ற சைக்கோ கொலையாளியை தேடி கண்டுபிடித்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்

போது விபத்தில் சிக்கி உடல் நிலை

பாதிக்கப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தாலும்

அல்சைமர் என்ற மறதிநோயால் பாதிக்கப்படுகிறார்.

அதே சமயம், தொடர் கொலைகள் செய்த சைக்கோ

கொலையாளி தனக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கும் வகையில்

சரத்குமார், அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள மீண்டும்

சைக்கோ கொலையாளியை

பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார்.

தனது பழைய நினைவுகளை இழந்துக் கொண்டிருக்கும் ஞாபக மறதியால் அவதிப்படும்

சரத்குமார் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் இரண்டாவது

முயற்சியில் வெற்றி கிடைத்தா ? சைக்கோ

கொலையாளி சரத்குமாருக்கும் உள்ள தொடர்பு என்ன?

என்பதை ‘ஸ்மைல் மேன்’ படத்தின் கதைக்களம்.

சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படங்கள் வாரத்திற்கு

ஒன்று வெளியாகிறது. எல்லாவற்றிலும ஏதோ ஒரு சிறிய வித்தியாசம் இருக்கும். அந்த

வகையில், சிதம்பரம் நெடுமாறன் என்ற சிபிசிஐடி அதிகாரியாக நடித்திருக்கும்

சரத்குமார், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட

நிலையில், தன்னால் முடிக்க முடியாமல் போன வழக்கை முடிக்க போராடும் ஒரு

அதிகாரியாக அளவாக நடித்து படத்திற்கு பெரும் தூண் போல் நின்று இருக்கிறார்.

சிபிசிஐடி குழுவைச் சேர்ந்தவர்களாக

நடித்திருக்கும் சிஜா ரோஸ், ஸ்ரீகுமார் இருவரும்

கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருந்தது,

திரைக்கதையின் திருப்பங்களுக்கு

முக்கிய பங்கு உண்டு.

இனியா, சுரேஷ் மேனன், நட்ராஜன், ராஜ்குமார், மலைராஜன்

திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன்,

இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஸ்,

படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ்

ஆகியோர் பணி படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.

தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளிகளின்

பின்னணியில் சொல்லப்படுகிற கதை

தான், இதுபோல கிரைம் திரில்லர் படங்களின் உயிர்நாடி இருந்தாலும்

அதை சரியான கையாள்வது கதையாசிரியரின்
கடமை.

கதையாசிரியர் இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன், சைக்கோ கொலையாளிக்கும்,

சரத்குமாருக்கும் இடையே உள்ள தொடர்பை ஏற்படுத்தி,

எதிர்பார்த்த திருப்பங்களுடன் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்ல முயற்சித்திருக்கிறார்.

சைக்கோ கொலையாளியை எளிதாக பிடிக்க கூடிய அனைத்து

விஷயங்களும் படத்தில் இயக்குநர்கள், கொலை செய்யப்பட்டவர்களின் வாயை சிரிப்பது போல்

யோசித்தது போல், கிரைம் திரில்லர் ஜானர் என்றால் எப்படி இருக்க

வேண்டும்? என்பதை யோசித்திருக்கலாம்.

தொழில்நுட்ப
கலைஞர்களின் பணி, முக்கிய வேடங்களில்

நடித்திருக்கும் நடிகர்களின் திரை இருப்பு மற்றும் மேக்கிங்

ஆகியவை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.

ஸ்மைல் மேன்’ என்ற கதாபாத்திரத்தை சரியா விவரிக்கும் வகையில்,

சொல்ல வில்லை நாமே தெரிந்துககொள்ள வேண்டும்..