நேசிப்பாயா’ திரைப்பட விமர்சனம்

 

‘நேசிப்பாயா’ திரைப்பட விமர்சனம்

 

நடித்தவர்கள் : – ஆகாஷ்முரளி, அதிதி சங்கர், குஷ்பு,

 

சரத்குமார், பிரபு, கல்கி கோச்சலின், ராஜா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

டைரக்டர்:- விஷ்ணுவர்தன்.

 

மியூசிக் : – யுவன் சங்கர் ராஜா,

 

ஒளிப்பதிவு:-எரிக்

பிரைசன்

 

படத்தொகுப்பு :-

ஏ. ஸ்ரீகர்பிரசாத்

 

எக்ஸ்.பி: பிலிம் கிரியேட்டர்ஸ் – ஜேவியர் ப்ரிட்டோ.

 

கதாநாயகன் ஆகாஷ் முரளி, கதாநாயகி அதிதி ஷங்கரை பார்த்ததும் காதல் செய்கிறார். அன்று

 

முதல் அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்துக்கொண்டே இருக்க ஒரு வழியாக தனது காதலில் வெற்றி பெற்று விட்டதாக‌ கற்பனை‌ கனவில்

 

காதல் வலையில் விழ வைத்து விடுகிறார். காதலர்களுக்குள் இடையே திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட

 

பிரிந்து விடுகிறார்கள் பிறகு அதிதி ஷங்கர் போர்ச்சுக்கல்

 

நாட்டில் வேலைக்கு சென்று விடுகிறார்.

 

ஆகாஷ் உள்ளூரில் வேலை செய்ய ஆரம்பிக்கிறார்.

 

இதற்கிடையே, போர்ச்சுக்கல் சென்ற இடத்தில் சண்டை எற்பட அதிதி ஷங்கர் ஒரு‌ கொலை

 

வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

 

தகவல் அறிந்த ஆகாஷ் முரளி, காதலியை காப்பாற்றுவதற்கு

 

போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார். அவர் கதாநாயகியை

காப்பாற்றினரா?, இல்லையா? என்ற

 

விபரத்தை கொண்டு

கொலைக்கு‌ என்ன

 

பின்னணி, அதில் கதாநாயகி அதிதி ஷங்கர் சிக்கியது

 

எப்படி? என்பதை இதுல காதலும், மோதலும் விபரிக்கும் கதைக்களம் தான் நேசிப்பாயா

 

இருவருக்கும்‌‌ உள்ள‌ நட்பின் உறவை இருப்பதை வைத்து கொண்டு

 

கலந்து சொல்வது தான் ‘நேசிப்பாயா’.என்ற கதைக்களம்

 

ஆக்‌ஷன், வயதுக்கு ஏற்ப சுறுசுறுப்பு என தனது முழு திறமையையும்

 

வெளிக்காட்டக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும்

 

கதாநாயகன் ஆகாஷ் முரளி சரியாக பயன்படுத்தியிருக்

கிறார்.

 

ஆறடி உயரத்தில் ஆக்‌ஷன் கதாநாயகனுக்கான அத்தனை அம்சங்களும் கொண்ட ஆகாஷ் முரளி

 

நிச்சயம் கோலிவுட்டின் வருங்காலத்தில்

 

தவிர்க்க முடியாத கதாநாயகனாக உருவெடுத்து ஜொலிப்பார்.

 

கதாநாயகியாக நடித்திருக்கும் அதிதி ஷங்கர் கல்லூரி மாணவி மற்றும்

 

வாழ்க்கையை உணர்ந்தும் பெண் என

 

ஒரே கதாபாத்திரத்தில் இரண்டு விதமான நடிப்பை

 

வெளிப்படுத்தியிருந்

தாலும்,சில காட்சிகளில் அவரது நடிப்பு இயல்பானதாக ‌எடுத்து‌ போவதோடு,

 

பார்வையாளர்களை சற்று சிந்திக்க செய்கிறது.

 

சரத்குமார், குஷ்பு, ராஜா, பிரபு, கல்கி கோச்சலின் என மற்ற வேடங்களில்

 

நடித்திருப்பவர்கள் தங்களது அனுபவமான

 

நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள்

 

சுமாரான ரகம் தான். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து இருக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் எரிக் பிரைசன் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார் .

 

சேசிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு

 

படங்களின் பாணியில் படமாக்கப்பட்டிருக்

கிறார்

 

திரைக்கதைக்கு சுவாரஸ்யம் சேர்க்கும் விதமாக காட்சிகளை

 

தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஏ.ஸ்ரீகர்பிரசாத்.

 

வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்லும் போது கதா நாயகிக்கு பிரச்சனை,

 

அதில் இருந்து அவரை காப்பாற்றும் கதாநாயகன், என்ற ஒன்லைனை

 

வைத்து, காதலில் ஈகோ ஏற்படும் வகையில் பிரிவுகள் வைத்து

 

கொஞ்சம் ஆக்‌ஷன், கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆகியவற்றை கலந்து

 

பிரமாண்டமான கமர்ஷியல் மற்றும் மென்மையான காதல் படமாக

 

கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு வர்தன்.

 

ஆகாஷ் முரளி என்பவருக்காக எழுதப்பட்ட கதை, மாதிரியான‌‌ இருந்தாலும் திரைக்கதை என்றால்,

 

இதுப்போல கதையை இவ்வளவு பிரமாண்டமாக எடுத்திருப்பது

 

பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.

 

மொத்தமா பார்க்கப் போனால், ‘நேசிப்பாயா’ திரைப்பட ரசிகர்களை நேசிக்க

 

வைக்கும்.பொங்கல் திருநாளில் காதல் விருந்து…