ஜென்ம நட்சத்திரம் விமர்சனம்…

 

ஜென்ம நட்சத்திரம் விமர்சனம்…

நடித்தவர்கள் :- தமன்,
மால்வி மல்ஹோத்ரா,
சிவம்,அருண்
கார்த்திக்,ரக்ஷா,மைத்ரேயன், மகாகணேஷ், மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர்:-மணி வாசன்.

மியூசிக் :- சஞ்சய் மாணிக்கம்.

ஒளிப்பதிவு :-
கே.ஜி.

தயாரிப்பாளர்கள் :- அமோஹம் ஸ்டுடியோஸ் மற்றும்

வைட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் சுபாஷினி மற்றும் விஜயன்.

கிறிஸ்தவ வேதாகமப்படி , இயேசுவை எதிர்க்கும் சக்தியாக,

உலகம் அழிவதற்குள் பிறக்கும் என்று பைபிளில் கூறப்படும்

ஆண்டி க்ரைஸ்ட் பிறந்து சாத்தான் ஆகி இருக்கிறது

வியாபாரத்தில் பெரிதாக சாதிக்க விரும்பும் ஓர் இளைஞன் ,

சினிமாவில் சாதிக்க விரும்பும் ஓர் இளைஞன்

அவர்களின் காதலிகள் மற்றும் சில நண்பர்கள்

தமன், மால்வி மல்ஹோத்ரா, அருண் கார்த்தி, ரக்ஷா, மகா

கணேஷ். எல்லோருக்குமே

பணம் முக்கியத்
தேவையாக இருக்கிறது .

சினிமா இளைஞனின் காதலி அடிக்கடி தீய

சக்திகளை கனவில் வருகிறது, நேரிலும் காண்பதாக உணர்பவள்.

அரசியல்வாதியாக வேல ராமமூர்த்தி.

நேர்மையான உதவியாளரின் காளி வெங்கட மகளான சிறுமியின்

மருத்துவ செலவுக்கு நாற்பது லட்சம் பணம் தேவைப்பட, அதை உதவியாளர் கேட்க,

அரசியல்வாதி மறுப்பதோடு
இரக்கமில்லாதவன் போல பேசுகிறார்.

எனவே ஓட்டுப் போடும் வாக்களர்களுக்கு கொடுக்க இருந்த

ஐம்பத்தி ஏழு கோடி ரூபாயை திருடுகிறார் உதவியாளர். அரசியல்வாதி

ஆட்கள் கண்டு பிடித்து தாக்க, நண்பர்கள் குடி

இருக்கும் மாடிக்கு வந்து உண்மைகளை சொல்லி விட்டு ,பணம்

இருக்கும் இடத்தை சொல்லி விட்டு மொத்த பணத்தையும் எடுத்துக்
கொள்ளுங்கள் ;

மகளை மட்டும் காப்பாற்றுங்கள் என்று சொல்லி

விட்டு செத்துப் போகிறார் அந்த உதவியாளர்.

பணம் இருக்கும் பாழடைந்த பங்களா உள்ள பகுதியில் அவர்கள்

நுழைய , உள்ளே ஆன்டி கிரைஸ்ட் சக்திகளின்

சடங்குகள் நடந்து கொண்டிருக்க , நடந்தது என்ன என்பதே படம் .

1976 ஆம் ஆண்டு வெளிவந்து உலகையே அலற வைத்த பிரிட்டிஷ் அமெரிக்க சூப்பர்

படமான ஓமனை அப்படியே வைத்து 1991 இல் வந்த தமிழ்ப்படம் ஜென்ம நட்சத்திரம்.

இரண்டிலும் உள்ள குழந்தை , தீய சக்திகள் என்ற விஷயம் இந்தப் படத்திலும் அப்படியே வருகிறது.

படம் ஆரம்பிக்கும் போது கொடுத்த சாத்தான் பிறந்த கதை , அடுத்து சில

காட்சிகளில் பேயைப் பார்த்து அலறும் மால்வி மல்ஹோத்ரா என்று சில காட்சிகள்

அதிர வைத்தன. ஒரு நல்ல பேய்ப்படம் பார்க்கப் போகிறோம் என்று நம்பி அமர்ந்த நம்மை போகப் போக

பேயடித்த நிலைக்கு ஆளாக்குகிறார்கள் . அந்த வகையில்

இதை சிறந்த பேய்ப்படம் என்று ஒத்துக் கொள்ளலாம்.

தமன் நடிப்பு , ஈர்க்கும் குரல் என்று கவனிக்க வைக்கிறார் .

நடிகைகள் இருவரும் ஓகே.
சஞ்சய் மாணிக்கத்தின் இசை கவனிக்க வைக்கிறது.

கே ஜி யின் ஒளிப்பதிவும் .

ஆன்ட்டி கிரைஸ்ட் சக்திகள் பூஜைசெய்கிற – பல கோடி பணம் இருக்கும் அந்த பங்களா அல்லது

கட்டிடம் ரொம்ப பெரிதாகப் பறந்து விரிந்துதான் இருக்கிறது . ஆனால்

பாருங்கள் … அங்கே போனதும் திரைக்கதை முட்டு சந்துக்குள் சிக்கிக் கொண்டது

”நீங்க ரெண்டு பெரும் இந்தப் பக்கம் ஓடி இப்படி திரும்பி அப்படி வாங்க. நீங்க

ரெண்டு பேரும் அந்தப் பக்கம் நடந்து அப்படி திரும்பி இப்படி போங்க . பின்னால

எல்லாத்தையும் எடிட்டிங் டேபிள் ல போட்டு ஓட்டி கோத்து என்னமாச்சும்

பண்ணிடலாம் ”என்ற ரீதியில் காட்சிகள் இருக்கின்றன .

பேயா மனிதர்களா இரண்டும் என்றால் எப்படி? எந்த வகையில்? என்று

பேலன்ஸ் செய்ய முடியாமல் திரைக்கதை மயக்கமாகி விட்டது

போர்வாளை வைத்துக் கொண்டு புடலங்காய் நறுக்குவது போல

ஓமன் என்ற பெரிய விஷயத்தை வைத்துக் கொண்டு ஒரு ஒப்புக்கு

சப்பாணி எழுத்தை எழுதி இருக்கிறார்கள்

இப்படித்தான் நடக்கும் என்றால் முனீஸ்காந்த், அப்சர் காட்சிகள் எதுக்கு இந்தப் படத்துக்கு?

அரசியல் காட்சிகளை எந்த அளவுக்கு எப்படி

சொல்ல வேண்டும் என்பதில் தெளிவு இல்லை.

இப்படி ஒரு கேள்வி வருதா? இப்படி ஒரு விஷயம் வை … அப்படி ஒரு லாஜிக்

இடிக்குதா .இப்படி ஒன்னு சொல்லி சரி செய் என்ற ரீதியில்

திரைக்கதை எழுதப்பட்டு இருக்கிறது . எந்த

பகுதியும் இயல்பாக வளரவில்லை என்பது பெரும் குறை .

எனவே புதுசா வந்திருக்கும் பேய்ப்படம் என்பது மட்டுமே இதன் பலம்,

அது பலன்தருமா? பொறுத்திருந்து பாப்போம்

– என்று சொல்லி விட்டு பூஜை செய்யப்

போய்விடுகின்றன ஆன்ட்டி கிரைஸ்ட் சக்திகள்

“ஜென்ம நட்சத்திரம்”
படம் பார்த்தத்தில் த்தத்தில் …