“இந்திரா” திரைப்பட விமர்சனம்…

“இந்திரா” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்: – வசந்த் ரவி, சுனில், மெஹ்ரீன் பிர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண் குமார், ராஜ்குமார்.மற்றும் பலர் நடித்துள்ளனர்…

இயக்கம்: சபரிஷ் நந்தா.

இசை: அஜ்மல் தஹ்சீன்.

ஒளிப்பதிவு:-

பிரபு ராகவ்.

படத்தொகுப்பு:-

பிரவீன்.கே.எல்.

தயாரிப்பு: ஜேஎஸ்எம் திரைப்படத் தயாரிப்பு, எம்பரர் என்டர்டெயின்மென்ட் – அஃபர் சாதிக், இர்பான் மாலிக்…

தமிழ் நாடு போலீஸ் இன்ஸ்பெக்டரான நாயகன் வசந்த் ரவி, நடித்துள்ளார்.

அவர் அதிக மதுப்பழக்கம் கொண்டவர். அதனால், அவர்

தனது பணியில் இருக்கும் போது

பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார், அதனால் இன்னமும் அவரது

மதுப்பழக்கம் அதிகமாகிறது.

இதனால் பிடிக்காத அவரது மனைவி மெஹ்ரீன் பிர்சாடா, அவர் மீது கோபம் கொள்கிறார்.

இதற்கிடையே, வசந்த் ரவியின் பார்வை திடீரென்று

பறிபோகிறது. இதனால் அவரது மனைவி எல்லாருடன்

இருக்கிறார்.

இந்த நிலையில், சென்னையில் ஒரே பாணியிலான தொடர் கொலைகள் நடக்கின்றது.

கொலையாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர் காவல்துறை

சரியான துப்பு கிடைக்காமல் தடுமாற, திடீரென்று அதே பாணியில்

வசந்த் ரவியின் மனைவி மெஹ்ரீன் பிர்சாடாவும், தனது வீட்டில் உள்பக்கம்

தாளிட்ட வீட்டுக்குள் கொலை

செய்யப்படுகிறார்.

அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை, வெளியாட்கள் யாரும் அடுக்குமாடி

குடியிருப்பில் யாருமே வரவில்லை என்பதை உறுதிப்படுத்தப் படுகிறது,

உள்பக்கமாக தாளிட்ட வீட்டுக்குள் யார் வந்து எப்படி நடந்து இந்த கொலையை யார் வந்தது செய்தது.

மெஹ்ரீன் பிர்சாடாவை கொலையில்

குழப்பமடைய

செய்கிறது.அதே சமயத்தில், கண் பார்வை

இல்லாத வசந்த் ரவி மீதும் போலீஸின் சந்தேகப்பார்வை அவர் மேல்

திரும்புகிறது.

ஆனால், வசந்த் ரவியோ தனது மனைவியை எப்படி கொலை செய்து

சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க, தனது

போலீஸ் நண்பரின் உதவியோடு களத்தில் இறங்குகிறார்.

வசந்த் ரவி கொலையாளியை கண்டுபிடித்தாரா?, இல்லையா? உண்மையான

கொலையாளி யார் ?, உள்பக்கம் தாளிட்ட வீட்டுக்குள்,

வெளியாட்கள் யாருமே வராத நிலையில் இருந்த வசந்த் ரவியின்

மனைவி எப்படி கொல்லப்பட்டார் ? ஆகிய

கேள்விகளுக்கு பதில்களை விறுவிறுப்பாக திருப்பங்களுடன் சொல்வது தான் “இந்திரா” கதைக்களம்.

தொடர் மர்ம கொலைகள், அதன் பின்னணியில்

இருக்கும் சைக்கோ கொலையாளி, அவருக்கான பின்னணி கதையின்,

என்ற பாணியில் சீரியல் கில்லரை மையப்படுத்திய

கதைகள் இருக்கும். ஆனால், இந்த படம்

அந்த ரெகுலர் பார்மட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, மாற்றுப்பாதையில்

பயணிக்கிறது, நாம் யூகிக்க முடியாத திருப்பங்களுடன்

திகைக்க வைக்கின்றது.

நாயகனாக நடித்துள்ளார். வசந்த் ரவி, அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறப்பாக அளவாக நடித்துள்ளார்.

படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்திருக்கிறார். கண் பார்வை

இழந்தவராக மிக கனகச்சிதமாக நடித்திருப்பவர்,

மனைவி இறந்தப் பிறகு உணர்ச்சிப்பூர்வமாக

நடித்து நடிப்பில் மிக பெரிய பலத்தை

செய்துள்ளார். பல இடங்களில் அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்

வகையில் அந்த சூழல் இருந்ததால், அதை சரியான முறையில்

கையாண்டு, இயல்பாக நடித்துள்ளார் அவருக்கு பாராட்டுக்குரியது.

நாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரீன் பிர்சாடா கணவரின்

சரியில்லாத போக்கைப் பார்த்து கோபம் கொள்வதும், பிறகு அவருக்காக

கலங்குவதும் என்று கதாபாத்திரத்தை உணர்ந்து நம்பாக தன்மையோடு நடித்திருக்கிறார்.

சீரியல் கில்லராக நடித்திருக்கும் சுனில், தான் செய்யும்

கொலைகளை கொண்டாடும் வகையில், மகிழ்ச்சியில் அவர் சிரிக்கும் விதமும்

பார்வையாளர்களை பயமடைய செய்து பிரமிக்கசெய்கிறது.

அனிகா சுரேந்தர் அழகு மற்றும் நடிப்பில் பார்வையாளர்களை கவர்ந்து ஈரக்கிறார் கிறார்.

வசந்த் ரவியின் நண்பராக நடித்துள்ளார்

நாகேந்திரா, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். நடன

இயக்குநர் கல்யாண் இருவரும் இயல்பாக நடித்துள்ளார்கள்.

திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் கேமரா லைட்டிங்

மற்றும் பிரேம்களில் மூலம் கிரைம் திரில்லர் ஜானரில் இருக்கும்

பதற்றத்தையும் பயத்தையும் அதிகரிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியுள்ளார்.

இதுல குறிப்பான கடைசியில் ஒரு வீட்டுக்குள் நடக்கும் சண்டைக்காட்சியை

படமாக்கிய விதம் மிரட்டல். காட்சியில் மிரளச்செய்திருக்

கிறார்.

இசையமைப்பு அஜ்மல் தஷீன் இசையில் பாடலும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப

பயணிக்க செய்திருக்கிறார்.

படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல், ஆரம்பத்திலேயே

சைக்கோ கொலையாளி யார் ? என்பதை காண்பித்து

விட்டாலும், அதன் பிறகு இருக்கும் திருப்பத்தை படம் முடியும் வரை யூகிக்க முடியாதபடி

காட்சிகளை மிக நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும்

சபரிஷ் நந்தா, சைக்கோ கொலையை கதைக்களமாக

கொண்டு திரைக்கதை அமைத்திருந்தாலும், அதன் பின்னணியில்

ஒரு மிகப்பெரிய மர்ம ஜாலத்தால் படத்தை மிக சுவாரஸ்யமாக

நகர்த்தி சென்று இருக்கிறார்.

உள்பக்கம் தாளிட்ட வீட்டுக்குள் நடக்கும் கொலை எப்படி நடந்தது ? என்ற விடை கேள்வியின் மூலம் பார்வையாளர்கள் மனதில் பல

யூகங்களை எழுப்பிய இயக்குநர், சைக்கோ கொலையாளி

போலீஸிடம் பிடிபட்ட

வுடன்,

நாயகியின்

கொலையில் மேலும் ஒரு மர்ம மாயங்கள்ப் போட்டு பார்வையாளர்களில் யூகத்தை பொய்யாக,

கடைசி வரை பதற்றத்துடன், ஆச்சரியத்துடன் பிரமிப்புடன் பயணிக்க வைத்துவிடுகிறார்.

இயக்குநர்.

இந்திரா படம் பார்த்ததில், “இந்திரா” நம்ம எதிர்பாராத திருப்பங்களுடன் நிறைந்த சூப்பர்

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படம். கொடுத்திருக்கிறார் இயக்குநர்.அவருக்கு பாராட்டுக்கள்.அனை

வரும் பார்க்க வேண்டிய திரைப்படம்

திரையரங்குகளில் 22.8.2025.முதல் கண்டு களியலாம்…