தண்டகாரண்யம்.” திரைப்பட விமர்சனம்…

 

  • ” தண்டகாரண்யம்.” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:- தினேஷ், கலையரசன், நடனம் ரோஸ் ஷபீர், பாலசரவணன்,

ரித்விகா, வின்சு சாம், அருள் தாஸ், முத்துக்குமார் யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம்: அதியன் அதிரை.

இசை: ஜஸ்டின் பிரபாகரன்.

ஒளிப்பதிவு :-
பிரதீப் கலைராஜா.

படத்தொகுப்பு :- செல்வா ஆர்.கே.

தயாரிப்பு: நீலம் புரொடக்ஷன்ஸ் & கற்று மற்றும் கற்பித்தல் – பா.ரஞ்சித், சாய் தேவானந்த்.எஸ், சாய் வெங்கடேஸ்வரன்.

இராமாயணத்தில் தண்டைக்குரியவர்
கள் வசிக்கும்

வனப்பகுதியை தண்டகாரண்யம் என்று சொல்லபடுகின்ற இடமாகும்.

தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள சுமார் பல சதுர கிலோ மீட்டர் சுற்றளவு

கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரா

மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள

காட்டுப்பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை

தண்டகாரன்யம் என்று அழைக்கின்றனர்.

இந்தப்பகுதிகள் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில்.

தண்டனைக்குரிவர்
கள் என்று குறிப்பிட்டவர்கள். நிறைய நக்சலைட்டுகள்

தீவிரவாதிகள், போராளிகள் என்று சமூகத்தால் தெரிந்தவராலும்,

உண்மையில் அவர்கள் வலியோரால்

வஞ்சிக்கப்பட்ட சாதாரண பழங்குடியின மக்கள் என்பதையும், அவர்கள் பெயரில்

ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் நிகழ்த்திய மிகப்பெரிய

மோசடியால் அவர்கள் எப்படி பலி கொடுக்கப்பட்டார்கள்

என்ற உண்மையையும் உரக்கச் சொல்வது தான் “தண்டகாரண்யம்”.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த

தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், அப்பா, அம்மா என்று குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

கலையரசன் வனத்துறையில் தற்காலிக காவலராக பணியாற்றி வருகிறார்.

எப்படியாவது அரசு ஊழியராகி விட வேண்டும் என்று

கடுமையாக உழைக்கிறார். ஆனால், உயர்

அதிகாரிக்கும், தினேஷுக்கும் இடையே ஏற்பட்ட மோதலினால் கலையரசனின்

தற்காலிக பணி நீக்கம் பறிபோகிறது. இதனால் உறவினர்கள்

உதாசினப்படுத்த, குடும்பமே அவமானத்தில் தலை குணிகின்றன.

தம்பியை எப்படியாவது அரசு பணியில் சேர்த்து அழகு பார்க்க நினைக்கும்

அண்ணன் தினேஷ், ஒருவர் தகவல் பேரில், நக்சலைட்டுகளை

கட்டுப்படுத்துவதற்கு
மத்திய அரசு உருவாக்கிய சிறப்பு

பாதுகாப்பு படையில் பணிக்கு சேர்த்து விட முடிவு செய்கிறார். அதற்காக விவசாய

நிலத்தை விற்று பணம் கொடுத்து அனுப்புகிறார்.

அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும்

படைப்பிரிவில் இணைந்து பயிற்சி பெற்று வரும்

கலையரசன், பலவித கஷ்ட்டங்கள் வந்தாலும் அனுபவித்து வேலையோடு தான்

ஊர் திரும்ப வேண்டும் என்ற மனநிலையில்

இருக்கிறார், அந்த இடத்திற்கு வருபவர்கள் உயிரோடு எங்கும்

செல்ல முடியாது, என்ற உண்மையை தெரிந்துக்

கொள்கிறார். அங்கு அப்படி என்ன நடக்கிறது ?, என்பதை அவர்

அங்கிருந்து தப்பித்துவிட்டரா? இல்லையா ?

என்பதை காலப் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட ஒரு

கொடூர நிகழ்வை நம் கண் முன் நிறுத்தும் வகையில் சொல்வது தான். “தண்டகாரண்யம், ”

கதையின் நாயகர்களாக நடித்திருப்பவர் தினேஷ் மற்றும் கலையரசன்

பழங்குடியின மக்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களாக

மக்கள் மனதில் நிற்கும் வகையில் நடித்துள்ளார்கள்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞராக அமைதியான முறையில் அநியாயங்களை

எதிர்த்து குரல் கொடுக்கும் தினேஷ், பொங்கி எழுந்து தனது விஸ்வரூபத்தை

வெளிக்காட்டும் இடங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

வட இந்தியாவில் பரவலாக
அறியப்பட்டது.

நக்சலைட்டுகள் மக்களுக்கு எதிரானவர்கள் என்ற

முத்திரையை அழிக்கும் கதாபாத்திரத்தில்

அளவாக நடித்து, பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

தவறு செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் எலியோர்களை பிரதிபலிக்கும்

கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்துள்ளார்.

கலையரசன், தன் உயிர்
போகப்போகின்றன.

என்பதை தெரிந்து பயம் அடையும் போதும், அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கும் போதும், நடிப்பின்

மூலம் படம் பார்ப்பவர்களை பதற்றமடைய செய்துள்ளார்.

சபீர் கல்லரக்கல், பாலசரவணன், ரித்விகா, வின்சு சாம், அருள்தாஸ்,

முத்துகுமார், யுவன் மயில்சாமி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு

பொருத்தமான கதாபாத்திரத் தேர்வாக இருப்பதால், கதாபாத்திர வடிவமைப்புகள் ஏற்பே உடல் மொழி மற்றும்

நடிப்பின் மூலம், அந்த கதாபாத்திரங்களாக மாறி பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருக்கிறார்.

டைடில் போடும் போது, பீஜியம் மூலம் கவனம் ஈர்க்கின்றன.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், “காவக்காடே…” பாடல் மூலம் கதைக்களம் மற்றும் கதை

மாந்தர்களின் உணர்வுகளை பார்வையாளர்கள். முன்பு கடத்தி சென்று விடுகின்றன.
ஜஸ்டின் பிரபாகரன்,

பின்னணி இசை மூலம், கவர்ந்து இருந்தீங்க…” என்று கேட்க வைத்திருக்கிறார்.

நிச்சயம் அவருக்கு பல விருதுகள் காத்திருக்கின்றன.

ஒளிப்பதிவு பிரதீப் கலைராஜா, அடர்ந்த

வனப்பகுதிகள் அந்தபகுதிகள் ஒட்டி வாழுகின்ற பழங்குடி

மக்களின் வாழ்வியலையும் அழகியோடு மட்டும் இல்லாமல், அவர்கள்

அனுபவிக்கும் வலியையும் பார்வையாளர்கள் மூலம் நேர்த்தியாக கடத்திசென்று இருக்கிறார்.

இரண்டு பாகங்களாக சொல்லும் அளவுக்கு விஷயங்கள் இருப்பதால், அதை

அளவான காட்சிகளை தொகுதி யுள்ளார். படத்தொகுப்பாளர் செல்வா.ஆர்.கே,

இயக்குநர் சொல்ல நினைத்த

தகவலையும், மக்களிடம் கடத்த முயன்ற

உணர்வுகளை மிக சரியாக கைப்பற்றி பாராட்டுப் பெறுகிறார்.

எழுதி இயக்கியுள்ளார். அதியன் ஆதிரை, இதுவரை திரையுலகில்

சொல்லப்படாத ஒரு கதையை மிக தெளிவாகவும் அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமா
கவும் சொல்லியிருக்கிறார்.
இயக்குனர்.

வலியோரை மோசடி செய்யக்கூடியவர்கள்.

வஞ்சிக்கப்படுகிறவர்கள் அவர்கள் தட்டிக் கேட்டாலும், திருப்பி அடித்தால்

அவர்களுக்கு தீவிரவாதி என்ற

முத்திரைக் குத்தும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார

வர்கள். போலியான முகத்திரையை கிழிக்கின்ற வகையில் மிகப்பெரிய

உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார்.

கலையரசனின் பயணம் வலி மிகுந்தது, எளிய மக்களின் அவங்க

ஏமாற்றம் நிறைந்த பயணமாக இருப்பது

இதயத்தை கனக்கச் செய்யும் வகையில் இருப்பதால்

தினேஷின் பயணம், திடீர் விஸ்வரூபம்

பார்வையாளர்கள் இருந்து சற்று விலகி இருப்பது
போல் தெரிகிறது. இருந்தாலும்,

வஞ்சிக்கப்படுகிறார்கள். எளியவர்கள் மூலம் தான் போராளிகள்

உருவெடுக்கிறார்கள், என்பதை தினேஷ்

கதாபாத்திரம் மூலம் மிக எளிமையாக சொல்லி, அந்த

கதாபாத்திரத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் வெற்றி

பெற்றிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதைக்கரு என்றாலும், நாட்டில் நடந்த ஒரு மிகப்பெரிய

மோசடியை மிக துணிச்சலோடு சொல்வது தான்,
அனைத்து தரப்பினரையும்

தொடர்புபடுத்திக் கொள்ள ஒரு வலிமையான

படைப்பாக கொடுத்ததும்

இயக்குநர் அதியன் ஆதிரைக்கு தமிழ் திரையுலகம் மட்டும்

அல்ல இந்திய திரையுலகமே சிவப்பு கம்பளம் விரித்து பாராட்ட வேண்டும் அதை உறுதிபடுத்தும்

படம் பார்த்தத்தில்
“தண்டகாரண்யம்”, சொல்லாத கதை,

இது உண்மையில் நடந்த சம்பவத்தை நிகழ்ச்சியை சொல்லியிருக்கிறார்

இயக்குனர். இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டிய

படம். வெண்த்திரையில் கண்டு களியலாம்.