“அந்த 7 நாட்கள்” திரைப்பட விமர்சனம்…

“அந்த 7 நாட்கள்” திரைப்பட விமர்சனம்…

 

நடத்தவர்கள் :- அஜிதேஜ், ஸ்ரீ ஸ்ரீஸ்வேதா, கே.பாக்ய்ராஜ், நமோ நாராயணன், மற்றும் பலர் நடித்துள்ளனர்…

 

டைரக்டர் : – எம்.சுந்தர்.

 

மியூசிக் : –

சச்சின் சுந்தர்.

ஒளிப்பதிவு:-

கோபிநாத் துரை

 

படத்தொகுப்பு:-

முத்தமிழன்ராமு

 

தயாரிப்பாளர்கள் :- பெஸ்ட் காஸ்ட் ஸ்டுடியோ – முரளி கபிர்தாஸ்.

 

வானியற்பியல் ஆராய்ச்சி மாணவரான நாயகன் அஜிதேஜ், சூரியகிரகண ஆய்வில் ஈடுபடும்

 

போது, ஏற்படும் பாதிப்பால் அதிசய திறன் ஒன்றை அடைகிறார். அதன் மூலம் பிறருக்கு

 

நடக்க இருக்கும் கெட்ட விஷயங்களை முன் கூட்டியே அறிந்துக் கொள்கிறார்.

 

இதற்கிடையே, 7 நாட்களில் தனது காதலி ஸ்ரீஸ்வேதாவுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட போவதை

 

தனது அதிசய ஆற்றல் மூலம் அறிந்துக் கொள்ளும்

 

நாயகன், அதில் இருந்து அவரை காப்பாற்ற

முயற்சிக்கிறார்.

அவரது முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பதை தான் ‘அந்த 7 நாட்கள்’.என்ற கதைக்களம்.

 

நாயகனாக நடித்திருக்கும் அஜிதேஜ் அறிமுக நடிகராக இருப்பதால் அதற்கான அடையாளமே தெரியாத வகையில் நடித்திருக்கிறார்.

இளையராஜா பாடல் மூலம் காதல் வளர்ப்பது,

 

காதலிக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை நினைத்து

 

கலங்குவது, அவரை காப்பாற்றுவதற்காக போராடுவது, என்று படம் முழுவதும் உணர்வுப்பூர்வமாக நடித்து பாராட்டு பெறுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீஸ்வேதா, பார்த்ததும் கவர்ந்திழுக்கும் அழகியாக இல்லை என்றாலும், தனது

 

கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு

 

நாட்களிலும் தனது பாதிப்பால் ஏற்படும் வலியை தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்

கிறார்.

 

குறிப்பாக இறுதிக் காட்சியின் போது, அவரது உடல் மாற்றம் மற்றும் உடல் மொழி

 

ஆகியவற்றின் மூலம் பார்வையாளர்களை கலங்க வைத்துவிடுகிறார்.

 

அமைச்சராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் நமோ

 

நாராயணன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர் ஆகியோர்

 

திரைக்கதையில் பெரும் பங்கு ஏற்க்கவில்லை

 

என்றாலும், திரை இருப்பு மற்றும் நடிப்பு மூலம் திரைக்கதைக்கு

 

பலமாக பயணித்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர் சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் காதல் கதைக்கு

 

ஏற்கவும், பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாகவும் பயணித்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரை காட்சிகளை தரமாக படமாக்கியிருப்பது.

 

கதாபாத்திரங்களின் உணர்வுகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக

 

நாயகியின் உருவ மாற்றம் மற்றும் நடிப்பு ஆகியவற்றை

 

படமாக்கிய விதம் பாராட்டும்படி இருக்கிறது.

 

நாயகன் மற்றும் நாயகி இருவரை சுற்றி மட்டுமே

 

 

நடக்கும் கதையாக இருப்பதால், அதை சற்று சுவாரஸ்யமாக நகர்த்த பெரும்

 

கொண்டுள்ளார் படத்தொகுப்பாளர் முத்தமிழன் ராமு.

எழுதி இயக்கியிருக்கும் எம்.சுந்தர், காதல் கதையை ஃபேண்டஸி மற்றும்

 

அறிவியல் அதிசயம் மூலம் சொல்ல முயற்சித்துடன் சமீபத்திய தெருநாய்கள்

 

கடிப்பது பிரச்சனை மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோய் தாக்கத்தை

 

திரைக்கதையுடன் பயணிக்க வைத்து அதிர்ச்சியளித்திருக்கிறார்.

 

வானியற்பியல் பின்னனியில் ஒரு காதல் கதை, அதில்

 

ஏற்படும் பிரச்சனை என்ற கதைக்கரு சுவாரஸ்யமாக இருந்தாலும்,

 

அதற்கான திரைக்கதை மற்றும் படமாகிய விதம், சுவாரஸ்யம் இல்லாத இருப்பது படத்திற்கு

 

சற்று பலவீனமாக இருந்தாலும், அந்த பலவீனத்தை மறக்கடிக்கும்

 

விதத்தில் இரண்டாம் பாதியில் ரேபிஸ் நோய் பற்றிய

 

காட்சிகள் பார்வையாளர்களை பீதியடைய செய்கிறது.

 

படம் பார்த்தத்தில், ‘அந்த 7 நாட்கள்’ அந்த படத்தில் காதல்,ஃபேண்டஸி

 

மற்றும் ரேபிஸ் நோய், தாக்கத்தை பற்றிய படம் முழுவதும்

 

வருகிறது.மக்கள் மிக ஜாக்கிரதை இருக்க வேண்டும் என்பதை

 

படத்தில் சொல்வது நன்மையே அனைவரும் பார்க்க வேண்டிய படம்.