வில்”. திரைப்பட விமர்சனம்…

 

வில்”. திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- சோனியா அகர்வால், அழகியா, விக்ராந்த்

டைரக்டர் :- எஸ்.சிவராமன்

மியூசிக் :- சௌரப் அகர்வால்

ஒளிப்பதிவு:- டி.எஸ் .
பிரசன்னா.

படத்தொகுப்பு:- தி.தினேஷ்.

தயாரிப்பாளர்கள் :- ஃபுட் ஸ்டெப்ஸ் தயாரிப்பு.

தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை தனது இரண்டு மகன்களுக்கு

சரிசமமாக பிரித்து உழில் எழுதி வைக்கிறார். அதே சமயம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றை மட்டும்

அலக்கியா பெயரில் எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார்.

யார் என்றே தெரியாத ஒரு பெண்ணுக்கு தந்தை எழுதி வைத்த அந்த வீட்டை

அபகறிப்பதற்காக வேறு ஒரு பெண்ணை அலக்கியா என்று

கூறி தொழிலதிபரின் மகன் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள்.

அதனால், அந்த பெண் மீது சந்தேகமடையும் நீதிபதி சோனியா

அகர்வால், இந்த வழக்கின் உண்மையை விசாரிக்கும் பொறுப்பை நீதிமன்ற போலீஸ் சப்

இன்ஸ்பெக்டரான (பழனிச்சாமி) விக்ராந்திடம் ஒப்படைக்கிறார்.

அதன்படி பிறகு விசாரணையை மேற்கொள்ளும் சப் இன்ஸ்பெக்டர்

விக்ராந்த் உண்மையான (அசல்) அலக்கியாவை

கண்டுபிடித்தாரா ?, இல்லையா ? அவர் யார் ?, என்பதை முழுவதும் விபரம் தெரிந்து அவருக்கு தொழிலதிபர் தன்

வீட்டை எழுதி வைத்தது ஏன் ? ஆகிய விபரம் தெரிந்துக் கொள்ள

கேள்விகளுக்கான விடைகள் தான்
“வில் ” திரைப்பட கதைக்களம்.

நீதிபதியாக நடித்துள்ளார் சோனியா அகர்வால், தனது

கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில்
நடித்திருக்கிறார்.

இதுவரை சினிமாவில் அவரது பார்த்திரத்தில் நடிக்காத நீதிமன்ற

காட்சிகள் என்பதால், சோனியா
அகர்வாலின்

ஒவ்வொரு அசைவுகளும் உண்மையான

நீதிபதியை பிரதிபலிப்பது போன்ற உள்ளது.

கதையின் மையப்புள்ளியாக நடித்திருக்கும்

அலக்கியா, சாதாரண முகமாக இருப்பதால் பலவித

உணர்வுகளை தனது கண்கள் மூலமாக நடிப்பில் வெளிப்படுத்தி‌ நடித்து கவனம் எல்லா மனதை ஈர்த்திருக்கிறார்.

தந்தையை மன கெளரவத்தை காப்பாற்ற போராடும் அவரது வாழ்க்கை கடுமையான

திசை மாறுவது, அதை எதிர்கொள்வது தான் அழுத்தமான கதாபாத்திரத்திற்கு

தனது அளவான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார் விக்ராந்த், சிறப்பு தோற்றம் போல்

இருப்பினும், படம் முழுவதும் பயணித்து தனது

கதாபாத்திரத்திற்கும், திரைக்கதைக்கும் உயிர் கொடுத்து பலம் சேர்த்திருக்கிறார்.

தொழிலதிபர், அவரது மகன்கள் என மற்ற வேடங்களில்

நடித்திருப்பவர்கள் புதியவர்களாக இருப்பதால் கதாபாத்திரங்களுக்

கு பொருத்தமான தேர்வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கிறார்கள்.

செளரப் அகர்வால் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை

தனித்து நிற்கவில்லை என்பதால் கதைக்கு ஏற்பே பயணித்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஒளிப்பதிவு டி.எஸ்.பிரசன்னா
வின் கேமரா

காட்சிகளை தரமாக படமாக்கியிருக்கிறதுநீதிமன்ற காட்சிகளை

எதார்த்தமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர்

பாடல் காட்சியை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்

விறுவிறுப்பாக பயணிக்க வேண்டிய கதை என்றாலும், கதை மாந்தர்களின்

உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்துவது

அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர். ஜி.தினேஷ்.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சிவராமன், உண்மை சம்பவத்தை அடிப்படையாக

வைத்துக்கொண்டு, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை

உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.

நீதிமன்ற காட்சிகள் இதுவரை நாம் பார்த்திராத வகையில் உண்மை தன்மையோடு

இருப்பது இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

பொய்யான வழக்கின் பின்னணியை கண்டறிய முயற்சிக்கும் நீதிபதி,

அந்த வழக்கின் விசாரணையில் மற்றொரு மோசடி

வழக்கு என்று திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்ந்து, செல்கின்ற

தொழிலதிபர் இளம் பெண்ணுக்கு தனது சொத்தை எழுதி வைத்தது ஏன்?

என்பதை காரணம் பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்பே

அமைந்திருப்பது படத்தை கொஞ்சம் யோசிச்சு செய்கிறது.

இருந்தாலும், நீதிமன்ற காட்சிகள், ஒரு வழக்கை நீதிபதி

கையாளும் விதம் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது.

படம் பார்த்தத்தில், “வில்” வெல்லும். ஒரு பெண்ணின் மனதை காப்பாற்றி மன

நிறைவு தந்து மகிழ்ச்சியை மாற்றியது இந்த திரைப்படம்

அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம்.