மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் “சம்பராலா ஏடிகட்டு (Sambarala Yetigattu) (SYG)” படத்தின் ஒரு புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், “அசுர ஆகமனா ” (Asura Aagamana) சிறு முன்னோட்டம் !
மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் “சம்பராலா ஏடிகட்டு (Sambarala Yetigattu) (SYG)” படத்தின் ஒரு புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், “அசுர ஆகமனா ” (Asura Aagamana) சிறு முன்னோட்டம் !
பான் இந்திய அளவில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படமான “சம்பராலா ஏடிகட்டு (SYG)” படத்தின் “அசுர ஆகமனா” (Asura Aagamana)எனும் சிறப்பு முன்னோட்டம், மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜின் பிறந்தநாளை (புதன்கிழமை, அக்டோபர் 15) முன்னிட்டு வெளியிடப்பட்டது. சாய் துர்கா தேஜின் நடிப்பில், இதுவரை உருவாகியுள்ள திரைப்படங்களில் மிக உயர்ந்ததாக ₹125 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இத்திரைப்படம், அதிரடியும் ஆழமும் நிறைந்த ஒரு மாபெரும் உலகத்தை பார்வையாளர்களுக்குக் காட்டுகிறது.
இந்த “அசுர ஆகமனா” முன்னோட்டம், இருள், ரகசியங்கள் மற்றும் மாபெரும் பிரம்மாண்ட காட்சிகளால் நிரம்பிய ஒரு புதிய சினிமா பிரபஞ்சத்தின் கதவுகளைத் திறக்கிறது. அதில் சாய் துர்கா தேஜ் கடுமையான, வீர உணர்வுடன் நிறைந்த போர்வீரராக களமிறங்குகிறார். போருக்கான தயாரிப்பில் இருக்கும் அசுரர்கள், எழுச்சியையும் புரட்சியையும் ஏற்படுத்தும் அதிர்ச்சியான தருணங்களை இந்த காட்சி வெளிப்படுத்துகிறது.
இயக்குநர் ரோஹித் KP இயக்கத்தில், முற்றிலும் பிரம்மாண்டமான இப்படத்தை தயாரிப்பாளர்கள் K. நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் (Primeshow Entertainment) சார்பில், தயாரித்துள்ளனர்.
இந்த முன்னோட்டத்தின் முக்கிய சிறப்பு, இப்படத்திற்காக உணர்வுரீதியாகவும், உடல்ரீதியாகவும் முற்றிலும் மாறியுள்ள சாய் துர்கா தேஜின் பிரம்மாண்ட தோற்றம் தான். பலம் நிறைந்த கட்டுடலும், கண்களில் எரியும் ஆவேசமும் அவரை உண்மையான போர்வீரனாக காட்டுகின்றன. தன்னம்பிக்கையான வசன உச்சரிப்பும் மற்றும் தனித்துவமான நடிப்பும் இக்காட்சிக்கு மேலும் உயிரூட்டுகின்றன.
“அசுர ஆகமனா” ஒரு உண்மையான பான் இந்திய அனுபவமாக திகழ்கிறது. ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பழனிசாமி , இருள், மாயம், ஆழம் கொண்ட ஒரு சினிமா உலகத்தை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் துள்ளும் ஆற்றலுடன், நிஜமான அதிரடி அனுபவத்தை அளிக்கும் ஸ்டண்ட் வடிவமைப்புகள் சிறப்பாக அமைந்துள்ளன. கந்தாரா படத்தின் இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத் வழங்கியுள்ள பின்னணி இசை ஒவ்வொரு போர்க்களத்தையும் அதிரவைக்கிறது. எடிட்டர் நவீன் விஜயகிருஷ்ணா மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் காந்தி நடிகுடிகர் ஆகியோரின் பங்களிப்பு படத்தின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளது.
மொத்தத்தில், “சம்பராலா ஏடிகட்டு (SYG)” ஒரு ஆழமான உணர்ச்சி, அதிரடி, மற்றும் அற்புத காட்சிகள் நிரம்பிய மாபெரும் வரலாற்று படைப்பாக உருவாகி வருகிறது. சாய் துர்கா தேஜ் மற்றும் இயக்குநர் ரோகித் KP ஆகியோரின் துணிச்சலான முயற்சி, தெலுங்கு சினிமாவின் புராண-அதிரடி வகையில் புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னட, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
“அசுரன் வந்துட்டான்… யுத்தத்தையும் கூட்டிக்கிட்டான்!”
சாய் துர்கா தேஜின் “சம்பரலா யெட்டிகட்டு” பட உலகின் ஒரு சிறிய முன்னோட்டம் தான் இது