வேடுவன்” இணையத் தொடர் விமர்சனம்…

நடித்தவர்கள் :- கண்ணா ரவி, சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :-
பவன் குமார்.

மியூசிக் : – விபின் பாஸ்கர்.

ஒளிப்பதிவு:-
ஸ்ரீனிவாசன்.

படத்தொகுப்பு :-
சூரஜ்கவி

தயாரிப்பாளர்கள்:- ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் – சாகர் பென்டேலா

பிரபல நடிகரான கண்ணா ரவி, தான் நடிக்கும் எல்லா

கதாபாத்திரங்களில் அதீத ஈடுபாடு காட்டி எதார்த்தமாக
நடிக்க கூடியவர்.

இதற்கிடையே உண்மை சம்பவம் ஒன்றை படமாக எடுக்கும் முயற்சியில்

இயக்குநர் ஒருவர் அவரிடம் கதை சொல்கிறார்.

கதைப்படி, கண்ணா ரவி ரகசிய போலீஸாக

பயணித்து முன்னாள் ரவுடி ஒருவரை என்கவுண்டர் செய்ய வேண்டும்.

அதற்கான முயற்சியில் கண்ணா ரவி ஈடுபடும் போது, அவர் என்கவுண்டர்

செய்ய உள்ள சஞ்சீவ், தனது முன்னாள் காதலி வினுஷா

தேவியின் கணவர் என்பது தெரிய வருகிறது.

அதே சமயம், சஞ்சீவ் ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தாலும், தற்போது அனைத்தையும்

விட்டுவிட்டு தனது ஊர் மக்களுக்கு நல்லது

செய்யவேண்டும் என்று நல்ல மனிதராக வலம் வருவதையும்

கண்ணா ரவி அறிந்துக் கொள்கிறார்.

ஆனால், தனது மேலதிகாரி தனக்கு அளித்த பணியை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்கும்

கண்ணா ரவி, திட்டமிட்டபடி சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா ? ,

இல்லையா? சினிமா கதையாக இருப்பினும், இந்த சம்பவம் கண்ணா

ரவியை எந்த வகையில் பாதித்தது, அதனால் என்ன

நடந்தது ? என்பதை அடுத்தடுத்த ஒவ்வொரு எப்பிசோட்களின் மூலம்

விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்வது.தான் ‘வேடுவன்’.என்ற இணையத் தொடர்.

நடிகர் என்பதால் பலவித வேடங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு இந்த தொடரில்

கண்ணா ரவிக்கு கிடைத்திருக்கிறது. போலீஸ், பிச்சைக்காரர், சமையல்காரர்,

உள்ளிட்ட அனைத்து கெட்டப்புகளிலும் கச்சிதமாக தன்னை

பொறுப்போற்றிக்கொள்ளும் கண்ணா ரவி, நடிப்பிலும் அசத்தியுள்ளார்.

கடமையா ? இல்லை மனசாட்சியா ? என்று இரண்டு விதமான குழம்பும் இடத்தில்

தனது தடுமாற்றத்தில் இந்த நேர்த்தியாக நடிப்புடன் வெளிப்படுத்தியுடன், காதலை வெளிப்படுத்தும்

இடத்திலும் நடிப்பில் மிக தேர்ச்சி பெற்றிவராக
திகழ்க்கிறார்.

ஆதிநாதன் என்ற தாதா வேடத்தில் நடித்திருக்கும் சஞ்சீவ், தனது

அனுபவமானமிக நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு

மிக பலத்தை பெற்று தந்து நேர்த்தியாக நடித்துள்ளார்.

மிகஅழுத்தமான கதாபாத்திரம் என்பதால் தனது அளவான நடிப்பு மூலம் தன்

கதாபாத்திரம் மீது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ஷ்ரவனிதா ஸ்ரீகாந்த், வினுஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா என பெண்

கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும்

தங்களது பணியை சிறப்பாகவும் நேர்த்தியாச் செய்து எல்லாருடைய மனதை கவர்ந்திருக்கிறார்
கள்.

ஸ்ரீனிவாசன் தேவராஜின் ஒளிப்பதிவு, விபின் பாஸ்கரின் பின்னனி இசை மற்றும் சூரஜ்

கவியின் படத்தொகுப்பு என தொழில்நுட்ப

கலைஞர்களின் பணி தொடருக்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

எழுதி இயக்கியுள்ளார் பவன் குமார்,

வித்தியாசமான கதை சொல்லல் மூலம் புதுவிதமான

ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் இந்த தொடரை கொடுத்திருக்கிறார்.

திரைப்பட நடிகர் என்ற கருவை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு எபிசோட் முடியும் போதும்,

அடுத்தது என்ன நடக்கும் ? போது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலான

சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் தொடரை கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் பவன் குமார், காட்சிகளை அவர் சொல்லுகிறார்

கையாளும் விதத்தை மட்டும் தொலைக்காட்சி தொடர் போல் கையாண்டிருப்பது

சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது. இருப்பினும் நட்சத்திரங்களின்

நடிப்பு மற்றும் திருப்பங்கள் மூலம் அந்த பலவீனம்

மறக்கடிக்க தொடருக்கு பதிலாக விறுவிறுப்பாக கொடுத்து விடுகிறது.

இந்த இணையத் தொடர் பார்த்தத்தின், மூலம் “வேடுவன்”

இணையத் தொடர் காண விரும்பி பார்க்கும் மக்களின் விருப்பத்திற்கு எற்பே மகிழ்ச்சியாகத் தொடரட்டும்…