“வட்டக்கானல்” திரைப்பட விமர்சனம்.

நடித்தவர்கள் :- துருவன் மனோ , மீனாட்சிகோவிந்த்,
ஆர்.கே. சுரேஷ், , வித்யாபிரிதீப் , விஜய் டிவி சரத், கபாலி விஸ்வநாத், முருகானந்தம், பாத்திமா பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டைரக்டர் :-பித்தாக் புகழேந்தி.
மியூசிக் : மாரிஸ்விஜய்.
ஒளிப்பதிவு:-எம்.ஏ.
ஆனந்த்.
தயாரிப்பாளர்கள் :- எம் பி ஆர் பிலிம்ஸ் ஸ்கை லையின் சினிமாஸ்- ஏ.
மதியழகன், வீரம்மாள், ஆர்.எம். ராஜேஷ்.
கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் என்ற பகுதியில் போதை தரும்
காளான் அதிகம் விளைகின்றன. அதை வைத்து பேரும் வியாபாரம் செய்ய
ஆர்.கே.சுரேஷ், அந்த பகுதியில் காளான் அதிகம் இங்கு
விளையும் செடிகளை இருநூறு ஏக்கர் முழுவதும் நிலத்தை அடைய தனக்கு வேண்டுமென்று
நினைக்கிறார். அந்த நிலத்தின் உரிமையாளரான நாயகி மீனாட்சி
கோவிந்த், அந்த நிலத்தை தனது எஸ்டேட்டில்
பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என
முடிவு செய்கிறார். இதற்கிடையே, ஆர்.கே.சுரேஷின்
வளர்ப்பு மகனான நாயகன் துருவன் மனோவுக்கும்,
மீனாட்சி கோவிந்தும் இடையே காதல் மலர்கிறது. தன் மகன்
காதலிக்கும் பெண் என்பதால், நிலத்திற்காக மீனாட்சி கோவிந்தை
ஆர்.கே.சுரேஷ் மிரட்டுவதோடு, நிலத்தை கைப்பற்ற பல்வேறு வழிகளில்
சதிவேலைகளிலும் ஈடுபடுகிறார்.
இதனால், யார் யாருக்கு எப்படிப்பட்ட பாதிப்புகள் அதனால் ஏற்படுகின்றனது என்பது தான் படத்தின் கதைக்களம்.
நாயகனாக நடித்திருக்கும் துருவன் மனோ முதல் படம் போல்
இல்லாமல் தனது இயல்பாக நடித்துள்ளார். ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து
அம்சங்களையும் கொண்டவர் கதை தேர்விலும், கதாபாத்திர
தேர்விலும் கவனம் செலுத்தினால் நிச்சயம் தமிழ்
சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பார்.
நாயகியாக நடித்துள்ளார் மீனாட்சி கோவிந்த், அழகாக இருக்கிறார்.
அளவான நடிப்பின் மூலம் படத்திற்கு மிக பெரிய பலமாக வலம் வருவார் .
வில்லனாக நடித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ் வழக்கம் போல் தனது
மிரட்டலான நடிப்பின் மூலம் மிகப்பெரிய கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.
ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், வினோதினி, ஆர்.கே.வரதராஜ், கபாலி விஷ்வந்த், விஜய் டிவி சரத், ஜார்ஜ் விஜய், பாத்திமா பாபு, முருகானந்தம் என
மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை நியாயமாக குறையின்றி செய்திருக்கிறார்கள்.
இசையமைப்பு மாரிஸ் விஜயின் இசையில் பாடல்கள் ஓரளவு கேட்கும்படி இருக்கிறது.,
பின்னணி இசை காட்சிகளுடன் சேராமல் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எம்.ஏ.ஆனந்த் கொடைக்கானலை அழகாக
காட்சிப்படுத்தியிருப்பதுடன், படம் முழுவதையும் பளிச்சென்று துள்ளியமாக
படமாக்கி காட்சிகளை ரசிக்க வைத்துள்ளார்.
கதையைஎழுதி இயக்கியுள்ளார். பித்தாக் புகழேந்தி, கொடைக்கானல் போதை காளானை
மையமாக கதையை வைத்து முழுமையான
ஆக்ஷன் கமர்ஷியல் படத்தை கொடுத்துள்ளார்.
இந்த போதை காளான் எவ்வளவு ஆபத்தானது என்பதை காட்சி
மொழியில் மிக நேர்த்தியாக விவரித்திருக்கிறார்.
ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தையும் அளவாக கையாண்டு
பார்வையாளர்களை ரசிக்கவும் ஈர்க்கும் வகையில் கதையை கொடுத்திருக்கிறார்.
படம் பார்த்தத்தில் , “வட்டக்கானல்” குடும்ப சொத்தை அடைய நினைக்கும் ஒரு கள்வனின் கதை இதுல திகில், த்ரில்லர், சஸ்பென்ஸ், இருக்கும் திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்…