“போலீஸ் ஃபேமிலி” திரைப்பட விமர்சனம்…

“போலீஸ் ஃபேமிலி” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
ராஜா மலைசாமி, பருத்திவீரன்

சரவணன், நிஷா துபே, காதல் சுகுமார், ரோஜன் லியோன்,

ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா
மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் : –
பாலு .எம்.

மியூசிக் : –
ஜெயா கே. தாஸ்.

தயாரிப்பாளர்கள் :- ஆன் தி டேபிள் புரொடக்ஷன்ஸ் – மலைசாமி ஏ எம் ராஜா.

ஒளிப்பதிவு :-
ஜெயகுமார் தங்கவேல்.

படத்தொகுப்பு :-
எம்.எஸ்.செலவா.

மாநகர காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மயக்க நிலைக்கு செல்கிறார். அந்த

இளைஞரின் தந்தை சரவணன் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலம் மிக்கவர்

என்ற தகவல் தெரிந்ததும், பிரச்சனையில் இருந்து தப்பிக்க, போலீஸ் சப்

இன்ஸ்பெக்டர் ராஜா மலைசாமி தலைமையிலான காவலர்கள் குழு, மயக்க நிலையில்

இருக்கும் இளைஞரை நகரத்திற்கு வெளியே, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில்

விட்டுவிடுகிறார்கள். மறுநாள் அந்த இளைஞர் கழுத்து நெறித்து

கொல்லப்பட்டதாக தகவல் வருவதுடன், அவர் கொலை செய்யப்படுவதற்கு

முன்பு காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட

உண்மையும் அவரது தந்தைக்கு தெரிந்து விடுகின்றன.

தன் மகனை கொலை செய்த காவலர்களை

பழிவாங்க துடிக்கின்ற சரவணன், சம்மந்தப்பட்ட

காவலர்களின் குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ய தொடங்குகிறார்.

ஆனால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாமல்

காவல்துறை திட்டுவது, உண்மையான கொலை

குற்றவாளியையும், கொலைக்கான காரணத்தையும்

கண்டுபிடித்து, காவலர்கள் மீதான சரவணின் பழி வாங்கும் நடவடிக்கைகளை

தடுக்க முயற்சிக்கின்றன. அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா ?,

இல்லையா? சரவணனின் மகனை கொலை செய்தது யார் ?,

என்பதை காவல் நிலைய மரணத்தின் பின்னணியோடு சொல்வது தான் “போலீஸ் ஃபேமிலி”
திரைப்பட கதைக்களம்.

கதையின் கதாநாயகனாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக கதாபாத்திரத்தில்

நடித்திருக்கிறார். ராஜா மலைசாமி, காவல்துறையின்
எண்ணங்களையும்,

அவர்களது பழிவாங்கும் குணங்களையும் தன் நடிப்பின் மூலம்

பிரதிபலித்திருப்ப
துடன், ஒரு தந்தையாக தன் மகள்களுக்கு நேர்ந்த

கொடுமைகளை கண்டு கதறும் காட்சிகளில் கலங்கும்படி நடித்திருக்கிறார்.

புதுமுகம் என்பதால் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் நடித்திருக்கிறார்

தனது கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பு மூலம் பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

மகன் மீது பேரன்பு கொண்ட கதாபாத்திரத்தில் வில்லனாக

நடித்திருக்கிறார். சரவணனின், அனுபவம் வாய்ந்த நடிப்பில், அதிரடியானது. திரைக்கதையை வேகமாக நகர்த்திச் செல்ல பயன்பட்டிருக்
கின்றன.

சாதாரண வேடமாக அறிமுகமான திரைக்கதையின் திருப்பத்திற்கான

கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார் காதல் சுகுமார்.

கதாநாயகியாக நடித்திருக்கிறார். நிஷா தூபே கொடுத்த

வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்

கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.

ஜெயகுமார் தங்கவேலின் ஒளிப்பதிவு

எளிமையாக இருப்பினும், கதைக்கு ஏற்ப பயணித்திருப்ப
துடன், நடிகர்களின் நடிப்பின் திறனை சரியான முறையில் காட்சிப்படுத்தியிருக்கின்றன.

ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி

இசை இரண்டில் தனித்துவம் இல்லாமல். திரைக்கதையின் ஓட்டத்திற்கு

உயிரூட்டும் வகையில் பயணித்திருக்
கின்றன.

எம்.எஸ்.செல்வா
வின் படத்தொகுப்பு திரைக்கதையில் இருக்கும்

சஸ்பென்ஸையும், அதன் மூலம் ஏற்படும்

எதிர்பார்ப்பை கடைசி வரை பயணிக்க வைத்து படத்தை பயத்துடன் பார்க்க வைக்கின்றன.

காவல்நிலைய மரணங்களை பின்னணியாக கொண்டு, கிரைம் சஸ்பென்ஸ்

த்ரில்லர் ஜானர் கதையை நேர்த்தியாக

கொடுத்திருக்கிறார். இயக்குநர் பாலு.எம், எதிர்பார்க்காத திருப்பங்களை

யூகிக்க முடியாதபடி சொல்லி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

பொருளாதார ரீதியான கட்டுப்பாடுகளால் கதையை காட்சி

மொழியில் விவரித்ததில் சில குறைகள் இருப்பினும், தான்

எடுத்துக் கொண்ட கதையை தொய்வில்லாத திரைக்கதையோடு,

விறுவிறுப்பான காட்சியமைப்புகள் மூலம் ஒரு நிறைவான பொழுதுபோக்கு

படமாக கொடுத்து இயக்குநர் பாலு.எம் வெற்றி பெற்றிருக்கிறார்.

படம் பார்த்தத்தில், ‘போலீஸ் ஃபேமிலி’ பொழுது போக்கிற்கான திரைப்படம்

அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம்…