“யூத்” (Youth) திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

 

“யூத்” (Youth) திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான “யூத்” திரைப்படம்.

ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பலத்த பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.

மக்களின் வரவேற்பில் திரையரங்குகளில் திருவிழாக்கோலமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

இந்நிகழ்வினில்…,

தயாரிப்பாளர் கருப்பையா சி. ராம் பேசியதாவது..,

“‘யூத்’ படம் எனக்கு முதல் படம் தான். ஆனாலும், அந்த முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ₹50 கோடி வசூல் என்பது ஒரு சாதனை தான். ஆனால் அதைவிட பெரிய சாதனை என்னவென்றால் — இந்த படத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு சென்று சேர்த்ததே. இன்று இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது இன்னும் பெருமையாக இருக்கிறது.

இந்த படத்தின் பயணம் மிகவும் வேகமாக நடந்தது. நாங்கள் அதிகமாக யோசிக்காமல், தைரியமாக முடிவெடுத்தோம். பல சமயங்களில் அதிகமாக யோசித்தால் முடிவு எடுக்க முடியாது. ஆனால் தைரியமாக எடுத்த முடிவுகள் தான் இந்த வெற்றிக்கு காரணம்.

ஒரு காலத்தில் என்னிடம் இரண்டு ரூபாய் கூட இல்லாத நிலை இருந்தது. தேவையான போது அம்மாவிடம் ₹1000, ₹2000 கேட்டுக் கொண்டு வாழ்க்கையை நடத்தினேன். அந்த நிலையிலிருந்து இன்று இவ்வளவு பெரிய மேடையில் நிற்பது — இது என்னுடைய முயற்சி மட்டும் அல்ல, பலரின் ஆதரவு.

இந்த படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் உருவாக பலர் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அந்த ஒவ்வொருவரின் ஆதரவும் இந்த வெற்றியின் காரணம்.

இந்த படத்தை பார்த்தவர்கள் மூன்று முறை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்கள். அந்த உணர்ச்சி தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, தெலுங்கு ஆகிய பகுதிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குறிப்பாக தெலுங்கில் நம்மை யாரும் அறியாத நிலையில் கூட, நல்ல மார்க்கெட்டிங் மூலம் இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் — நம்பிக்கை. நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைத்தது எல்லாம் கடவுளின் அருள்.

பலர் கேட்கிறார்கள் — ‘இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்த பிறகு அடுத்தது என்ன?’
எனக்கு வெற்றி என்பது தற்காலிகம். ஆனால் நன்றி உணர்வு என்றைக்கும் நிலைத்தது. அதனால் தான் இந்த நன்றி கூறும் விழாவை நடத்த வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த படம் வெளியான போது பெரிய படங்களுடன் போட்டி இருந்தது. இருந்தாலும், நல்ல படம் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நானும் கென்னும் உறுதியாக இருந்தோம். அந்த நம்பிக்கை தான் இந்த வெற்றியை கொடுத்தது. கென் என்னுடன் ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்படி இருக்கிறார். அவருக்கு நானும் ரசிகன் இன்று எல்லோரும் அவரை கொண்டாடுவது மகிழ்ச்சி.

இந்த சினிமா உலகில் புதிய இயக்குநர்கள் சந்திக்கும் சிரமங்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநர் நல்ல மனநிலையுடன் இருந்தால் தான் நல்ல படம் உருவாகும். இயக்குநர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இனிமேல் எங்கள் நிறுவனத்தில் வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் தயாரிப்பாளர் பதவி (Producer Credit) வழங்கப்படும். “ஒரு இயக்குநரின் கனவை நனவாக்க உதவும் தயாரிப்பாளராக இருக்க வேண்டும் — அதுதான் என் ஆசை. எங்கள் நிறுவனத்தில் தொடர்ந்து நல்ல படங்கள் செய்வோம் நன்றி.

 

நடிகை நளினி பேசியதாவது..,

எல்லாருக்கும் வணக்கம்.
இந்த வெற்றி விழாவில் உங்களை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எங்களை இங்கே கொண்டு வந்த தயாரிப்பாளர் கருப்பையா அவர்களுக்கு என் நன்றி. அவர் ஒருவரையும் மறக்காமல் நன்றி சொன்னது உண்மையிலேயே அவரது அர்ப்பணிப்பு. இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் இருந்தால் இந்த நிறுவனம் பெரிய உயரம் அடையும்.

சூரஜ் சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்பும் தொழில்முறை அணுகுமுறையும் எனக்கு பெரிய பாடம். ஒரு சிறிய தவறும் விட்டுவைக்காமல் மீண்டும் மீண்டும் செய்வது அசத்தல். இந்த படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் வேறு லெவல். அவரை தவிர யாராலும் இப்படிச் செய்ய முடியாது.
தேவதர்ஷினி அம்மா இந்த படத்தில் …