ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்

ரோபோ சங்கர் நடித்த
ஈகோ ராமன்
——————————————
(ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தப் போராட்டம்)

ஒரு மாணவன் தன் அம்மாவின் கனவை நிறைவேற்ற அரசு வேலைக்கு தேர்வு எழுதுகிறான். எதிர்பாராவிதமாக அவன் வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகளால் ஆசிரியருக்கும் அவனுக்கும் இடையேயான இணக்கம் தடைபடுகிறது. அதனால் மிகவும் பாதிப்படைகிறான். இதில் மாணவருக்கும் ஆசிரியருக்கும் மனதளவில் ஒரு யுத்தம் நடக்கிறது. இறுதியில் வென்றது ஆசிரியரா ? மாணவனா ? என்பதை விறுவிறுப்புடன் சொல்லும் கதையே
ஈகோ ராமன்.

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில்
கதையின் முதன்மை பாத்திரமாக ரோபோ சங்கர் நடிக்க கதாநாயகன் நாயகியாக
சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா நடித்திருக்கின்றனர்.
கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர்.

பாடல்கள் & இசை —
ரெய்மன் ராட்ரிக்ஸ்
மக்கள் தொடர்பு- வெங்கட்

தயாரிப்பு- சுதா.ஜி

கதை திரைக்கதை
வசனம் இயக்கம் –
கணேசன் நாச்சிமுத்து

இப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவை, பொள்ளாட்சி மற்றும் கோவை புறநகர் பகுதிகளிலும் 45 நாட்களில் இருகட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது

இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து விட்டது. இம்(மே)மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் உத்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது