“அந்தரன்” திரைப்பட விமர்சனம்…

“அந்தரன்”
திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
பிரஜின்,இவானா வருண்,எம்.கே.சாம்பசிவம், செந்தி

குமாரி,அனுபமா
குமார்,அதிரன், ரமேஷ்குமார்,கீதா,
பத்மன் பிரியங்கா

செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
சந்தோஷ் ராவணன்.

ஒளிப்பதிவு:-
கிஷோர் ராமச்சந்திரன்.

மியூசிக்:-
ஹரி.எஸ்.ஆர்.பி.

படத்தொகுப்பு:-
இக்னேஷியன்
அஸ்வின்.சதீஷ்குரோசாவா.

கலை இயக்குனர்:-
சசிகுமார்.

கதாநாயகி இவானா வருணை திவிரமாக காதலிக்கிறார்.
ஒரு நபரால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.

சில மாதங்களுக்குப் பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தலால்

அவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்படுகின்றன. நிச்சயம் முடிந்த நிலையில்

இவானாவின் வருங்கால கணவர் மாடியில் இருந்து

குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். அவரை தொடர்ந்து

இவானா வருணுக்கு மீண்டும் திருமண

ஏற்பாடு நடக்க, அவரும் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார்.

இந்த தொடர் மரணங்கள் திடீர் திடீரென நடக்கிற என்று இவானா குடும்பத்தார்.

நினைக்கும் போது, காவல்துறையின் விசாரணையில் இவை அனைத்தும்

இதை யாரோ ஒருவர் திட்டமிட்டு செய்கிற கொலைகள் என தெரிய வருகின்றது

இருப்பினும், குற்றவாளி குறித்தோ அல்லது

மரணங்களின் மர்மம் குறித்து எந்தவிதமான தடயங்களும்

கிடைக்காமல் போகிறது, இந்த வழக்கு காவல்துறை

அதிகாரியான நாயகன் பிரஜினிடம் ஒப்படைக்கப்படு
கிறது.

இவானா வருணிடம் இருந்து தனது விசாரணையை

தொடங்கிறார்.
பிரஜின், நாளடைவில் அவர் மீது காதல் கொண்டு, அவரை திருமணம் செய்துகொள்ள

முடிவு செய்கிறார். இவானா வருணை திருமணம் செய்ய

நினைப்பவர்களுக்கு ஏற்பட்ட நிலை பிரஜினுக்கும்

ஏற்பட்டதா ? இல்லையா? அல்லது கொலைகளின் பின்னணியில் இருக்கிற மர்மங்கள், கொலையாளியை

அவர் கண்டுபிடித்தாரா ? இல்லையா?என்பதை பல திடுக்கிடும் தகவலுடன் புதிய திருப்பத்துடன் சொல்வது தான் “அந்தரன்” திரைப்பட கதைக்களம்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். பிரஜின், கம்பீரமான நடிப்பின் மூலம்

தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். காவல்துறை

அதிகாரியாகவும், காதலராகவும் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பை கச்சிதமாக

வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கிறார் .
இவானா வருண், பலம் வாய்ந்த

கதாபாத்திரத்தை தன்னால் முடிந்தவரை குறையில்லாமல் கவனத்துடன் நடித்திருக்கிறார்.

நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். எம்.கே.சாம்பசிவம்,

அம்மாவாக நடித்திருக்கிறார். செந்தி குமாரி, அனுபமா குமார்,

அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என மற்ற கதாபாத்திரங்களில்

நடித்திருப்பவர்கள் தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், கிரைம் சஸ்பென்ஸ்

திரில்லருக்கான பரபரப்புடன் காட்சிகளை படமாக்கினாலும், காதல் காட்சிகள் மற்றும் பாடல்

காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.