“சிங் கீதம்”திரைப்பட விமர்சனம்…

 

நடித்தவர்கள்:-
ஷாலினி கொண்டே பூடி,நிவேதா அயான், அஹல்யா பம்ரூ பெத்துராஜ், ராகுல்

ரவீந்திரன், சிவநாரணா, பெனர்ஜி, விஜய்

தேவரகொண்டா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர்:-
சிங்கீதம் சீனிவாசராவ்.94 வயதில் மியூசிக்கல் பேண்டசி ட்ராமா வை இயக்கியுள்ளார்.

மியூசிக்:‌ -தேவி ஸ்ரீ பிரசாத்.

தயாரிப்பாளர்:-
நாக்அஸ்வின்

மோசடி குற்றத்திற்காக போபால் சிறையில் தண்டனை

அனுபவித்து விடுதலையாகிறார்
நாயகன் அயானுக்கு அவரது குடும்ப

சொத்தின் பத்திரம் கிடைக்கின்றன. அதுல அவரது குடும்பத்துக்கு சொந்தமான சுமார்

100 ஏக்கர் நிலம் இருப்பது தெரிய வருகின்றது. அந்த நிலத்தை தேடி

குபேரபுரம் என்ற ஊருக்கு செல்கிறார். பாலைவனம் போல் காட்சியளிக்கும்

அந்த ஊர் மக்கள், தோண்டப்பட்டு இருக்கிற இரண்டு தங்க சுரங்கங்களை

நம்பி வாழ்கிறார்கள். அந்த ஊருக்கு அயான் சென்றதும்,

அந்த தங்க சுரங்கத்தின் மற்றொரு உரிமையாளர் தனது தந்தை தான் என்பதை தெரிந்துக் கொள்கிறார்.

எனவே, கிடைத்த வரை லாபம் என்று நினைத்து, தனது நிலத்திற்கான

பணம் கிடைத்தவுடன் அங்கிருந்து ஓடிவிட திட்டம் போடுகிறார்.

ஆனால், அவரது திட்டம் நிறைவேறாதபடியும், அவரால் அங்கிருந்து வெளியேறாதபடியும்

அங்கு ஒரு சம்பவம் நடக்கின்றன. அதன் மூலம் அந்த ஊரில்

உள்ள அனைவரும் சாதாரணமாக பேசும் வார்த்தைகளை கூட

பாடலாக பாடும் விநோதமான பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்கள்.

மக்கள் மட்டும் அல்ல, அந்த ஊரில் இருக்கும் கோழி கூட அதிகாலை கூவலை சங்கீத பாணியில்

வெளிப்படுத்து
கின்றனது. மக்களும் தங்களது சாதாரண வார்த்தைகளை கூட

பாடலாக பாடுவதை, குபேர கடவுள் கொடுத்த சாபம் என்று கருத, அந்த சாபத்தில் இருந்து

விடுபட்டார்களா?, பணத்துடன் ஓடிவிட நினைத்த நாயகன் அயானின் திட்டம்

நிறைவேறியதா ? என்பதை வித்தியாசமான

முயற்சியுடன் சொல்வது தான்
“சிங் கீதம்” திரைப்பட கதைக்களம்.

’பேசும் படம்’ மூலம் உரையாடல்களை இல்லாத ஒரு

படத்தை இயக்கி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய

இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், உரையாடல்கள் அனைத்தும்

பாடல்களாக ஒலித்தால் எப்படி இருக்கும்? என்ற மற்றொரு புதிய மற்றும்

வித்தியாசமான கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

புதிய மற்றும் வித்தியாசமான முயற்சி இருக்கும் அதை சரியான

முறையில் திரையில் கொண்டு வருவதற்கு எத்தகைய

கடுமையான பணிகளை செய்த் திருப்பார்கள்,

என்பதை ஒவ்வொரு காட்சியிலும் பார்க்க முடிகின்றது வித்தியாசமான ஃபேண்டஸி

பாணியில் திரைக்கதையை எடுத்திருக்கிறார்,

மனிதர்கள் தங்களது பேராசை மூலம் இயற்கை அழிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்

கொண்டு, எதிர்காலத்தில் அதை இயற்கையால் பெரிதும்

பாதிக்கப்படுவார்கள்என்ற தகவலை திரையில் மொழிகளால் அழகுடன் சொல்லி பார்வையாளர்களை யோசிக்க

வைத்திருக்கிறார் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ்.

கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அயான், கலகலப்பான

கதாபாத்திரத்தில் ஜாலியாக வலம் வந்து அம்மா

செண்டிமெண்ட் மற்றும் தனது தவறை உணர்ந்து

மனம் மாறும் காட்சிகளில் நடிப்பில் மார்க்
எடுத்திருக்கிறார்.

மரங்களையும், இயற்கையையும் காப்பதற்கு போராடும் கெளரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

அஹல்யா பம்ரூ துறுதுறு நடிப்பின் மூலம் பார்வையாளர்கள்

மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார்.

தங்க சுரங்கத்தின் உரிமையாளராக நடித்திருக்கிறார். ஷாலினி கொண்டேபூடி, தனது

அளவான நடிப்பு மற்றும் அழகான முக பாவத்துடன் மூலம் கவர்கிறார்.

சைலஜம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நிவேதா பெத்துராஜ், நாயகனின் தந்தையாக நடித்திருக்கிறார். ராகுல் ரவீந்திரன், நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார் .
சிவ நாராயணா, பெனர்ஜி, வாம்சி ஆகியோருடன்

சிறப்பு தோற்றத்தில் தோன்றும் விஜய் தேவரகொண்டா என அனைவரும் தங்களது திரை இருப்பின் மூலம்

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள்.

படம் பார்த்தத்தில் பழமையான கதையில் உரையாடல் மூலம்

பாடல்களை சங்கீதமாக வடிவமைப்புடன் புதுமையான அவரது ரசிகர்களுக்கு

கொடுத்து மகிழ்ச்சி கடலில் மிதக்க விட்டது கோடான கோடி நாமஸ்காரம்

இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் ஐயாவுக்கு வணக்கம்.

அனைவரும் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய திரைப்படம். பாடவேண்டிய படம்