
நடித்தவர்கள்:-
சசிகுமார்,அனகா,
யஷ்வந்த், அபர்ணா தாஸ், ரேவதி, விவேக் பிரசன்னா,
டைரக்டர் :-
ஆண்ட்ரூ லூயிஸ்.
மியூசிக்:-
சைமன் கே.கிங்
ஒளிப்பதிவு:-
சரவணன் ராமசாமி.
படத்தொகுப்பு:-
ரிச்சர்ட் கெவின்.ஏ
கலை இயக்குனர்:-
மீவின்னன்.
இது மதுரை மாவட்டத்தில், நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றுக்காக பள்ளம் தோண்டுகிற
போது எலும்புக்கூடு ஒன்று
கிடைக்கின்றன அரசு நிகழ்ச்சியின் போது
கிடைத்ததால் ஒட்டுமொத்த ஊடகமும் அந்த சம்பவம் பற்றியே
பேசிக்கொண்டிருக்கிறார்கள், அந்த எலும்புக்கூட்டின்
முக்கிய பின்னணியை கண்டுபிடிக்கிற
பொறுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமாருக்கு கொடுக்கப்படு
கிறது.
இதுல எந்த ஆதாரமும் இல்லாமல், ஒரு கை இல்லாத சிதைந்து இருக்கிற அந்த
எலும்புக்கூட்டை வைத்துக்கொண்டு விசாரணையை தொடங்கிறார்
சசிகுமார், அதே இடத்தில் மேலும் ஒரு எலும்புக்கூடு புதைந்து இருக்கும். மற்றொரு கண்டுப்பிடிப்பதில்
இரண்டு எலும்புக்கூடுகளும் அதுபெண்கள் கூடு என்பதையும்,
அவர்கள் எப்படி கொலை செய்யப்பட்டார்கள் என்பதை கண்டுபிடிக்கிறார்.
இந்த எலும்புக்கூட்டின் பிரச்சனை முடிந்ததால் மதுரை மாவட்ட
காவல்துறை நிம்மதியடைய, சசிகுமார் அதன் பின்னணியில் இருக்கும் மர்மங்களையும்,
இரண்டு பெண்களை கொலை செய்தவன் உண்மையான குற்றவாளி யார் ?
என்பதையும் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். அவரது புலன்
விசாரணை மூலம், பல புதிய மர்மங்கள் பூதாகரமாக உருவெடுக்கிறது,
அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்த்து உண்மையான
கொலையாளியை சசிகுமார் எப்படி கண்டுபிடித்தாரா?, இல்லையா என்பதை கொலைக்கான காரணம் என்ன ?
என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் “வதந்தி”– சீசன் 2’.
கிரைம் திரில்லர் இணையத் தொடர் என்றால், ஒரு விஷயத்தை
நேரடியாக சொல்லாமல் பல
கிளைக்கதை
களுடன் சொல்வது தான் வழக்கமான பாணி. அதே பாணியில் இந்த
தொடரும் பயணிப்பதால், கொலைக்கான காரணத்தை யூகிக்க
முடியாதபடியும், கொலையாளி யார் ? என்ற விபரம் பார்வையாளர்
களின் யூகங்களை பொய்யாக்கும் விதத்திலும்
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் திரைக்கதை எழுதியிருக்கிறார்.
முதல் அத்தியாசத்தில் பார்வையாளர்
களை கதைக்குள் இழுத்துக்கொண்டு இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்,
எலும்புக்கூடு தொடர்பான விசாரணையை மிக சுவாரஸ்யமாக நகர்த்தி
செல்வதுடன் அதற்கான தீர்வு தெரிந்த பிறகு, கொலையாளி யார் ? மற்றும்
கொலைக்கான காரணத்தை மையமாக கொண்டு நகர்த்தியிருக்
கிறார்
திரைக்கதை கிரைம் திரில்லர் ஜானரை கடந்து, காதல், கணவன் –
மனைவி உறவு, மதுரை இளைஞர்களின் ஜல்லிக்கட்டு மீதான பேரார்வம் ஆகியவற்றுடன்
உலகளவில் பேசுப்பொருளாக இருக்கிற ஒரு விஷயத்தையும்
மிக நேர்த்தியாக கையாண்டிருப்ப
துடன் தொடரின் தனிசிறப்பாகும்.
கதையின் நாயகனாக மூசா ராசா என்ற சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில்
நடித்திருக்கிறார். சசிகுமார், முதல் முறையாக காவல்துறை காக்கி உடை
அணிந்திருப்பதால், தனது உருவம் மற்றும் நடிப்பில் எந்தவித
மாற்றத்தையும் வெளிக்காட்ட
வில்லை.
பல படங்களில் பார்த்த அதே சசிகுமாரை தான் பார்க்க முடிகிறது.
அதிலும் இதுல அளவான நடிப்பை கொடுத்திருக்
கிறார் சசிகுமார்,
உடலில் எந்தவிதமான அசைவுகளையும்
தெரியாமல் ரொம்பவே அளவாக நடித்திருக்கிறார்.
மதுரை மாவட்ட எஸ்.பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனகா, காவல்துறை உயர் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்
கிறார்.
காவல்துறை சீருடை அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியிருப்பதால், மிக
சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் யஷ்வந்த், மதுரை
மாவட்ட இளைஞராக மிரட்டியிருக்கிறார். மாடு பிடிப்பதில் காட்டும் ஆர்வம்,
அதில் வெற்றி பெற்றதை நண்பர்களிடம் விளக்குவது, காதல் காட்சிகள் என்று
மதுரை இளைஞராக வலம் வருபவர், தனது ஒவ்வொரு அசைவுகள் மூலமாகவும் கனவம் ஈர்க்கிறார்.
’டாடா’ என்ற வெற்றி படத்தில் நடித்த தமிழ் நடித்த அபர்ணா தாஸ், இந்த தொடர் மூலம் மிக சாதாரண கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சசிகுமாரின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
முடக்கத்தான் மணியின் காதலியாக நடித்திருக்கிறார்.
ரேவதி, ‘வதந்தி’ முதல் சீசனில் விவேக் பிரசன்னா ஆகியோர்
தங்களது பணியை மீண்டும் செய்திருக்கிறார்
கள்.
ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி, கிரைம் திரில்லர் என்பதால் இயற்கையின் வெளிச்சத்தில்
ரம்மியமான வண்ணத்தில் காட்சிகளை படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்கள் இயல்பாக காண்பித்து கவனம் ஈர்க்கிறார்.
இசையமைப்பாளர் சைமன் கே.கிங் இசையில் பின்னணி இசை தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
பார்வையாளர்
களின் முழு கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.
இணையத் தொடர்களில் படத்தொகுப்பாளர்
களின் பணி மிக முக்கியமானது, அதிலும் கிரைம் திரில்லர் என்றால்
படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ, சஸ்பென்ஸ் காட்சிகளுடன்
மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையும் ரசிக்கும்படி தொகுத்திருக்
கிறார்.
கலை இயக்குநர் மீவின்னின் பணியும் கவனம் ஈர்க்கிறது.
ஜல்லிக்கட்டு போட்டியை காட்சிப்படுத்திய விதம் மற்றும்
எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ், வதந்தி முதல் சீசனில்
கொலையாளி யார் ? என்பதை தேடும் பயணத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றது
போல், இந்த இரண்டாம் சீசனில், கொலையாளியாக தண்டனைப் பெற்றவரை நிரபராதி என்பதை
நிரூபிக்கிற பயணத்தை விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார்.
அனைத்து அத்தியாயங்களும் எதாவது ஒரு விசயத்தின் மூலம் அடுத்தது என்ன நடக்கும் ? , கொலையாளி யார் ? ஆகிய கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்புவதுடன்
இரத்தம், முகம் சுழிக்க வைக்கும் ஆபாசம், நெருட வைக்கும் கொடூரமான காட்சிகள் என கிரைம் திரில்லர் இணையத்
தொடரில
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் பார்க்க
கூடிய மிக அமைதியான சுவாரஸ்யமான கிரைம் திரில்லர்
தொடராக இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸை பாராட்டி வரவேற்க வேண்டும்.
படம் பார்த்தத்தில், “வதந்தி” – சீசன் 2’ அனைத்து தரப்பு
பார்வையாளர்களையும் கவரும் கிரைம் திரில்லர்
தொடர். அனைவரும் பார்க்க வேண்டிய “வதந்தி” -2
இணையத்தொடர்