ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரித்து இருக்கும் படம் “ரேசர்”.
சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி ( ரெடால் மீடியா ஒர்க்ஸ்) இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.
இப்படத்தை “ஆக்ஷன் ரியாக்ஷன்” வழியாக ஜெனீஷ் வெளியிடுகிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்து இருக்கிறார் சதீஷ் (எ) Satz Rex.
பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் பைக் ரேஸில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்
பரத் இசை அமைத்திருக்கிறார்.
பின்னணி இசை பாடல்கள் படத்திற்கு நன்றாக இருக்கிறது
கனியமுதன் அரங்கம் நிர்மாணித்திருக்கிறார்.
சண்டை காட்சிகளை சீனு அமைத்திருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ்.
அவர் கண்களில் தெரியும் உறுதி பைக்பார்த்தவுடன் விரியும் கண்கள்
அப்பாவை கண்டவுடன் பணியும் நேசம்
காதலியுடன் காட்டும் பணிவு என நன்றாக இயல்பாக நடித்திருக்கிறார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநாயகியாக நடித்துள்ளார்
அழகான விழிகள் அழகான முகம் இயல்பான நடிப்பு
. மேலும் ஆறுபாலா, ‘”திரௌபதி” சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் நன்றாக இருக்கிறது
தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனையை மையமாக கொண்டு இதன் கதை அமைந்துள்ளது. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக் ரேசர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் அகில் சந்தோஷ். ஆனால் அவர் கேட்கும் விலை உயர்ந்த ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கி தர முடியவில்லை. ஆனாலும் தனது லட்சியத்தில் பின்வாங்காத அகில் தானே கஷ்டப்பட்டு பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயல்கிறார். இதற்கிடையில் அவர் சந்திக்கும் போராட்டங்கள் அதை மீறி அவரால் சாதிக்க முடிந்ததா என்பதை விறுவிறுப்புடன் படம் விளக்குகிறது.
இதற்கிடையில் இளவட்ட காதல் கதையும் இழையோடுகிறது.
இப்படத்துக்காக பாண்டிச்சேரியில் பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டு போட்டியின் முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது.
மேலும் சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
மோட்டார் ரேஸ் காட்சிகளில் நிஜ ரேஸ் வீரர்களுடன் ஹீரோ அகில் போட்டிபோட்டு பைக் ஓட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்
*லட்சியத்துடன் வாழும் ஒவ்வொரு இளைஞனுக்கும் தன்னம்பிக்கை தரும் படமாக வெளிவந்து உள்ளது
சின்ன வயதிலேயே சைக்கிள் ஓட்ட துடிப்பது அப்பாவிடம் பைக் வாங்க வேண்டும் என்று பணம் கேட்பது
நண்பர்களிடம் ஆறு லட்சம் லோன் போட்டு பைக் வாங்குவது
லட்சியத்தோடு இருக்கும் இளைஞன்
தன் லட்சியத்தை காதலியுடன் பகிர்ந்து கொள்ளும் காதலன்
மகனின் ஆரோக்கியமே முக்கியம் என்று நினைக்கும் தந்தை
காதலனின் லட்சியமே தனது பாசம் என்று நினைக்கும் காதலி
இப்படி ஒவ்வொரு கதை பத்திரத்திற்கும் உயிர் கொடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர்
படம் அங்கங்கே சின்ன சின்ன குறும்புகளை சொல்லி நம்மை சிரிக்க வைக்கிறது ரசிக்க வைக்கிறது எந்த இடத்திலும் படம் லேக் ஆகவில்லை
கிளைமாக்ஸ் காட்சியை சிறப்பாக முடித்திருக்கிறார் இயக்குனர்
மொத்தத்தில் இந்த ரேசர் பேரை போலவே படு ஸ்பீடாக செல்கிறது இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் படமாக வெளிவந்துள்ளது நிச்சயம் காணலாம்