யோசி’ திரை பட விமர்சனம்

15 வருடங்களுக்கு பிறகு ஊர்வசி-கலாரஞ்சனி சகோதரிகள் மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘யோசி’ திரை படம் என்ன சொல்லுது வாங்க பார்க்கலாம்

J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘யோசி
தற்கொலை எண்ணங்களை மாற்றி அமைக்கும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார்.
அருமையான இயக்கம் எடுத்துக் கொண்ட கதையை நேர்த்தியாக சொல்லி இருக்கும் பாங்கு இயக்குனருக்கு வாழ்த்துக்கள்

அபய் சங்கர் கதாநாயகனாக நடித்துள்ளார்
அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது

கதாநாயகியாக ரேவதி வெங்கட்
அருமையான தேர்வு
மற்றும் பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எல்லோரும் தங்கள் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என நான்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா என்பவர் அமைத்துள்ளார். பாடல்களை ரட்சகன் மற்றும் இசையமைப்பாளர் வி.அருண் இருவரும் எழுதியுள்ளனர். படத்திற்கு ஆறுமுகம் ஒளிப்பதிவாளர் படத்திற்கு மிகப்பெரிய பலம்செய்துள்ளார்.

படத்தொகுப்பை ரோஷன் பிரதீப்.ஜி மற்றும் ரதீஷ் மோகனன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். ஆசன காட்சிகளை ஜாக்கி ஜான்சன் வடிவமைத்துள்ளார்.
சரி படத்தின் கதை என்ன வாங்க பாக்கலாம்

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவன் ஒருவன் மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறான். அவனுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த மாணவனால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.
காட்டுக்குள் நாயகன் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு காட்சியும் நம்மை சீட்முனைக்கே கொண்டு வந்து விடுகிறதுஅவ்வளவுதத்துரூபமாக இருக்கிறது

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடிப்பில் பல சாதனைகளை செய்த நடிகை ஊர்வசியின் நெருங்கிய உறவினரான அபய் சங்கர் தான் இதில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவருக்காக மட்டுமல்ல, கதையால் ஈர்க்கப்பட்டும் இந்த படத்தில் ஊர்வசியும் அவரது சகோதரி கலாரஞ்சனியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர் இவர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது

மேலும் இப்படத்தில் :

அபய் சங்கர் (ஹீரோ), ரேவதி வெங்கட் (கதாநாயகி), ஊர்வசி, கலாரஞ்சனி, அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்
எல்லோருடைய நடிப்பும் சிறப்பாக இருக்கிறது

இந்த படத்தை தயாரித்திருக்கிறது
தயாரிப்பு நிறுவனம் ; j & A பிரைம் புரொடக்ஷன்ஸ்

இந்த படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பால் வெளியிடுகிறது

; j & A பிரைம் புரொடக்ஷன்ஸ் & A V I மூவி மேக்கர்ஸ்

கதை வசனம் & இயக்கம் ; ஸ்டீபன் எம். ஜோசப்

இசையமைப்பாளர்கள்: ராபின் ராஜ்சேகர், கே குமார், வி. அருண், ஏ.எஸ்.விஜய்

பாடியவர்கள் : கார்த்திக், கே.ஜே. அய்யனார், ஜெகதீஷ் குமார், மோனிஷா சௌந்தரராஜன்

பாடலாசிரியர்: ராக்சகன், வி. அருண்

இசை உரிமைகள்: MRT இசை

பின்னணி இசை: பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா (இத்தாலி)

BGM அசோசியேட் ; ஏ.எஸ். விஜய்

ஒளிப்பதிவு : ஆறுமுகம்

ஆக்சன் இயக்குனர்: ஜாக்கி ஜான்சன்

இரண்டாவது யூனிட் கேமராமேன்: பெரியசாமி & ஆனந்த் கிருஷ்ணா

நடனம்: ஜெய் & டயானா

படத்தொகுப்பு: ரோஷன் பிரதாப் ஜி – ரதீஷ் மோகனன்

ஆடை: டயானா

ஒப்பனை: கலைவாணி

என்ன எல்லோருடைய பங்களிப்பும் யோசிக்க வைத்திருக்கிறது வெற்றிகரமாக
ஒரு திரைப்படம் மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நல்ல சிந்தனையில் உருவான இந்த யோசி திரைப்படம்
வித்தியாசமான திரைப்படம் தான் நிச்சயம் பார்க்கலாம் வாழ்க்கைக்கு தற்கொலை ஒரு தீர்வு அல்ல