இயக்குனர் சங்கத்தில் நடந்த S B M படத்தின் இசை வெளியீட்டு விழா

எஸ் பி எம் பாஸ்ட் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது

இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் ஆர் வி உதயகுமார் அவர்கள் கதை வசனகர்த்தா ஆர் கே சண்முகம்

ஊமை விழிகள் புகழ் அர்விந்த் ராஜ் அவர்கள்

பெரு துளசி பழனிவேல் அவர்கள் கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தை இயக்கிய ரங்கநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

இப்படத்தைப் பற்றி இயக்குனர் தேவனந்த் குறிப்பிடும் பொழுது நான் இயக்குனர் ஈரோடு சௌந்தரிடம் உதவியாளராக பணிபுரிந்து இருக்கிறேன் 18 வருடங்கள் அவரின் எல்லா படங்களிலுமே உதவி இயக்குனராக இருந்திருக்கிறேன்

நான் ஈரோட்டை சேர்ந்தவன் இந்த படத்தை தயாரித்து இயக்கி நடித்திருக்கிறேன்

இது ஒரு கிரைம் திரில்லர் ஜானர் இந்த படத்தில் ரஞ்சித் அவர்கள் கதாநாயகனாக நடித்திருக்கிறார்

நானும் இப்படத்தில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறேன்

நடிகை காயத்ரி இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்

இந்த படம் நன்றாக வந்திருக்கிறது சின்ன படங்களுக்கு கிரைம் தில்லர் படங்கள் தான் கேரண்டி என்றார்

அடுத்து பேசிய இயக்குனர் அர்விந்த் ராஜ் பேசும் பொழுது

திரைப்படக் கல்லூரியில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து எடுத்த படம் ஊமை விழிகள் இந்த படம் ஒரு கிரைம் திரில்லர் படம் தான் இந்த படத்திற்கு எத்தனையோ நடிகர்களிடம்கால் சீட் கேட்டோம் எல்லோரும் நடிக்க மறுத்து விட்டார்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கால் சீட் கொடுத்து ஊமை விழிகள் படத்தை வெற்றி படமாக்கினார் அதுபோல இந்த படமும் மிகப்பெரிய வெற்றி படமாக வரும் என்று நினைக்கிறேன் என்றார்‌.

அடுத்து பாண்டியன் அண்ணாமலை படங்களுக்கு வசனம் எழுதிய ஆகிய சண்முகம் அவர்கள் பேசும் பொழுது இந்த படத்தின் கட்டு டூகட் என்றார் இயக்குனர் அது வித்தியாசமாக இருக்கும் நல்ல கதை இருந்தால் இப்பொழுது எல்லாம் படமும் ஓடுகிறது எனவே இந்த படம் நிச்சயமாக வெற்றியடையும் என்றார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் பேசும் பொழுது நிச்சயமா படம் பெரிய வெற்றி படமாக அமையும் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம் என்றார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பேசும் போது

லொகேஷன் எல்லாம் மிக நன்றாக வந்திருக்கிறது இது ஒரு வித்தியாசமான படம் என்றார்

27 வருடம் பிஆர்ஓ சங்க செயலாளராக இருந்த பெரு துளசி பழனிவேல் அவர்கள் பேசும் பொழுது
இயக்குனர்

எஸ் பி முத்துராமன் போலவே ஆர் வி உதயகுமார் அவர்களும் அர்விந்த் ராஜ் அவர்களும் திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்கள் அவர்களை போல இந்த இயக்குனரும் தேவானந்த்ம் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்து பேசினார்

இன்று சின்ன படம் என்றாலும் நல்ல கதை இருந்தால் படம் நன்றாக ஓடுகிறது அதற்கு டாடா லவ் டுடே படங்கள் சாட்சி அதே போல இந்த படமும் நல்ல கண்டன் இருக்கிறது படம் வெற்றியடையும் என்றார்

இதை எடுத்து இயக்குனர் ஆர் வி உதயகுமார் அவர்கள் பேசும்பொழுது எங்களைப் போன்ற சீனியர் இயக்குனர்களுக்கு நீங்கள் படம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை எங்களை மதித்து ஓரளவுக்கு நடந்தால் போதும் என்றார்.

அர்விந்த் ராஜ் அவர்கள் இயக்கிய ஊமை விழிகள் திரைப்படத்தில் நானும் பணிபுரிந்தேன் அதில் ஒரு காட்சியில் ஆயிரம் கார் வரும்
அதை எடுக்க
ஒரு நான்கு
நாட்கள் ஆகிவிட்டது

ஒரு செகண்ட் மாறி போனால் அடுத்த நாள் எடுக்க வேண்டும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது அந்த லைட்வெளிச்சம் மெதுவாக வந்து வந்து பெரிதாகும் பொழுது தியேட்டரில் கைதட்டினார்கள் அந்த கைதட்டல் தான் எங்களுக்கு அடுத்த படத்திற்கானவாய்ப்பை வழங்கியது என்றார்.

எனக்கு பேண்ட் சர்ட் போடுவதற்கு ஒன்றே ஒன்று தான் இருக்கும் அதுவும் கிழிந்து இருக்கும்
ஊமை விழிகள்

வெற்றி விழாவில் எங்களுக்கு பேண்ட் சட்டை எல்லாம் வாங்கி தருவார்அர்விந்த்ராஜ்
என்று எதிர்பார்த்தோம் அவர் கும்பகோணத்திற்கு தீபாவளிக்கு அழைத்தார்
நானும் போனால் பேண்ட் சர்ட் கிடைக்குமே என்று

பஸ் ஏறி விட்டேன் என் நண்பன் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்குஎன்றார்

என் மனம் தவித்தது
அடடே பேண்ட் சட்டை போச்சே வட போச்சேஎன்று
அப்போது அவர் உனக்கு கதை சொல்ல ஒரு கம்பெனி கிடைத்து இருக்கிறது

வா என்று அழைத்துப் போனார் அதுதான் உரிமை கீதம் அந்த படம் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதன் பின் சின்ன கவுண்டர் எஜமான் போன்ற படங்களை இயக்கினேன்

இந்த படத்தின் இயக்குனர் தேவானந்த் நல்ல கதை என்றார் கதை இருந்தால் போதும் படம் ஓடும்
இப்படத்தில் நடித்த நாயகன்

ரஞ்சித் கோயம்புத்தூர் காரர்தான்
நல்ல மனிதர் அவருக்கு ராய ல்ஸ்டார் என்று பட்டம் கொடுத்தது பாராட்ட வேண்டியது என்றார்

நானும் சத்யராஜ்ம் கல்லூரியில் படித்த பெஞ்சில் வந்து உட்கார மாணவர்கள் எல்லாம் போட்டி போடுவார்கள் அப்படி ரஞ்சித்தும் போட்டி போட்டார் அதுபோல இன்றைய இயக்குனர்கள் சீனியர் இயக்குனர்களை மதிக்க வேண்டும் இந்த படத்திற்கு ஏன் அவர் வரவில்லை என்று தெரியவில்லை என்றார்

இன்று லவ் டுடே டாடா போன்ற படங்கள் பெரும் வெற்றியாக இருப்பது

சின்ன படங்களுக்கு எல்லாம் ஒரு மகிழ்ச்சி என்றார்.

ஊடகத்தில் இன்று
சில பேர் தண்ணி அடித்துக் கொண்டும் காசு வாங்கிக் கொண்டும் தவறாக எழுதுகிறார்கள் அப்படி எழுதாதீர்கள் நீங்கள் நல்ல முறையில் எழுதினால் தான் சின்ன படங்கள் வெற்றியடைய முடியும்

எனவே ஊடகங்களால் மட்டும் தான் ஒரு படம் பேசபட முடியும் என்றார்

நிகழ்ச்சியில் பி ஆர் ஓ
வெங்கட் அவர்கள் அனைவரையும் வரவேற்று
பேசினார்

இந்த படம் தேவானந்த் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்பதில் சிறுதுளி சந்தேகம் இல்லை

கிரைம் தில்லர் ஜானர் நிச்சயமாக கை கொடுக்கும் எஸ் பி எம் அந்த வகையில் மிகப்பெரிய வெற்றியடையும்

வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா