சத்தமே இல்லாமல் அஜித் சார் செய்த உதவி, எந்த நடிகர் இப்படி செய்வார் இது தான் அவரை உச்சத்தில் வைத்து உள்ளது
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வில்லனாக நடித்து வரும் பொன்னம்பலம் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவர் அஜித்துடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த நடித்தபோது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.
அவர் அன்று சொன்னது இன்று வைரலாகி வருகிறது
அதாவது அஜித், ஷாலினி நடிப்பில் உருவான அமர்க்களம் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த பட சூட்டிங்கின் போது பொன்னம்பலம் அஜித்தை சந்தித்து ஒரு உதவி கேட்டிருக்கிறார். என்னவென்றால் அவருடைய நண்பரின் மகனுக்கு இதயத்தில் ஒரு பிரச்சனை இருந்திருக்கிறது.
அதை சரி செய்ய வேண்டும் என்றால் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்திருக்கிறது. அதற்காக ஏதாவது பண உதவி செய்ய முடியுமா என்று பொன்னம்பலம் அஜித்திடம் கேட்டிருக்கிறார். உடனே அவர் சம்பந்தப்பட்ட அந்த பையனின் மெடிக்கல் ரிப்போர்ட், ஹாஸ்பிடல் பில் போன்ற அனைத்தையும் கேட்டு வாங்கி இருக்கிறார்.
அதன் பிறகு ஷாட் ரெடியானதால் அவர் நடிப்பதற்கு சென்று விட்டாராம். இப்படி எதுவுமே சொல்லாமல் அஜித் சென்று விட்டாரே என்று நினைத்த பொன்னம்பலம் அவர் திரும்பி வரும் வரை காத்திருந்தாராம். சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி வந்த அஜித் வழக்கம்போல தன்னுடைய வேலையை பார்த்தபடி இருந்திருக்கிறார்.
உடனே குழம்பிப்போன பொன்னம்பலம் நாம் சொல்லியதை அஜித் மறந்து விட்டாரோ என்று நினைத்துக் கொண்டு மீண்டும் ஆபரேஷன் பற்றி ஞாபகப்படுத்தி இருக்கிறார். அதற்கு அஜித் நீங்க என்னிடம் கேட்ட போதே நான் ஹாஸ்பிடல் பில் அனைத்தையும் கட்டி விட்டேன். நீங்கள் இன்னும் ஏன் இங்கு நிற்கிறீர்கள் என்று கேட்டாராம்.
இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பொன்னம்பலம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். இதுதான் அஜித்தின் குணம். யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டால் உடனே உதவி செய்துவிடுவார்.
ஆனால் இன்று வரை அவர் தான் செய்யும் உதவிகளை பகிரங்கப்படுத்திக் கொண்டது கிடையாது. அந்த வகையில் பொன்னம்பலத்தின் நண்பருக்கு அவர் செய்த இந்த உதவி கேட்பவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது
கண் மருத்துவர் விஜய சங்கர் தலைமையில் 6000 பேருக்கு கண்அறுவை சிகிச்சைக்கு அஜித் உதவி செய்துள்ளார் அதையும் யாரிடம் வெளியே சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்
நடன இயக்குனர் ராதிகா குறிப்பிடும் பொழுது
எப்பொழுது யாருக்கு அஜித் சார் உதவி செய்தாலும் வெளியே சொல்ல கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொள்வார் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்பது அவரது கொள்கை என்று குறிப்பிட்டு ள்ளார்
சிட்டிசன் படத்தில் பணி புரியும் போது மேக்கப் மேன் உதவியாளர் தாமதமாக வந்தார் ஏன் தாமதம் என்று கேட்டதற்கு ரெட் ஹில்ஸ் பகுதியில் இருந்து
பஸ் பிடித்து வருவதற்கு தாமதமாகிவிட்டது என்று மேக்கப் மென் சொல்ல அன்று மாலையை புதிய ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்துள்ளார் அஜித் மேக்கப் மேன் உதவியாளர் அஜித் காலி உள்ள போக சட்டென்று தடுத்திருக்கிறார்
இப்படி கண்ணுக்கு தெரியாத பிறருக்கு உதவிகள் செய்ததால் இன்று தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டு இருக்கிறார் அஜித்
இவர் அடுத்த எம்ஜிஆர் என்றால் நிச்சயம் அது இவருக்கு தான் பொருந்தும் அழகிலும் குணத்திலும் 100% அடுத்து எம் ஜி ஆர் அஜித் சார் தான்
இது தவிர
ராகவா லாரன்ஸ்
அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது
பொதுவாக அஜித் புகழுக்கு ஆசைப்படாத ஒரே நடிகர் அஜித் தான் என்றும் அந்த பேட்டியில் பதில் அளித்தார் .அவரிடம் அது தான் என்னை மிகவும் ஈர்த்தது என கூறியுள்ளார்