ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது யாத்திசை

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது யாத்திசை யாத்திசை என்றால் தென் திசை பாண்டிய மன்னர்களின் வீரத்தைச் சொல்லும் இத்திரை காவியம் ஆங்கில படங்களை மிஞ்சும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது இதன் மேக்கிங் வீடியோ ஒளிபரப்பப்பட்டு பிரமிக்க வைத்தது தமிழனாலும் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்க முடியும் என்பதை இதன் மேக்கிங் காட்சிகள் நிரூபித்தது

இப்படத்தின் இயக்குனர் தரணி ராஜேந்திரன் தஞ்சை சார்ந்தவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார் நெசப்பாக்கம் டிஸ்கவரி சென்றால் இதனுடைய புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கும் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு இந்த படத்தை எடுத்திருக்கிறார் யாரும் எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு இதன் தொழில்நுட்பம் நிறைந்து கிடைக்கிறது

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்கள் என்ன பாஷை பேசி இருப்பார்கள் என்பதை கண்டு அறிந்து அதே பாசையில் பேச வைத்திருக்கிறார். இதன் கதைகளும் நான்கு பாகங்களாக பிரிந்து இருக்கிறது இரண்டு மணி நேர படத்தில் ஒரு மணி நேரம் சண்டை காட்சி நிறைந்திருக்கும் வண்ணம் படமாக்கப்பட்டு இருக்கிறது இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒவ்வொருவரும் கூறிய கருத்துக்களை இனி பார்ப்போம்

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’.
ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் ‘யாத்திசை’. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெய்லர் மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த இப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘யாத்திசை’ தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது படத்தின் மேக்கிங் காட்சிகளும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசும் வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

அதில் பேசியவர்கள்

இசையமைப்பாளர் சக்ரவர்த்தி பேசியதாவது…

முதலில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இது பீரியட் படம் என்பதால் இசையமைப்பது பெரும் சவாலாக இருந்தது.

நடிகை சுபத்ரா பேசியதாவது…

டிரெய்லருக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி. படத்திற்கும் அதே ஆதரவு தாருங்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது, படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.

தயாரிப்பாளர் கே ஜே கணேஷ் பேசியதாவது…

எங்கள் குழுவை நம்பி மட்டுமே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். படத்தின் டிரெயல்ருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள், நன்றி.

*இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசியதாவது…

இந்தப்படம் 1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும் இதில் ஒரு கலை இருக்கிறது. . இப்படத்திற்கு முழு உயிர் தந்தது என் குழு தான். 25 உதவியாளர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளார்கள்

விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…

யாத்திசை சக்தி ஃபிலிம் பேக்டரிக்கான பெருமை. எங்கள் நிறுவனத்தில் நிறைய பெருமையான படைப்புகளை வெளியிட்டுள்ளோம் அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டே 30 பேருக்கு மேல் என்னை அழைத்துப் பேசினார்கள். எல்லோரையும் இந்தப்படம் சென்றடைந்துள்ளது என்பதே பெருமை. டிரெய்லரை விட இந்தப்படத்தில் இன்னும் பிரமாண்டம் இருக்கும்

நடிகர் விஜய் சேயோன் பேசியதாவது…

யாத்திசையை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. இது நம்முடைய பெருமைமிகு படைப்பு. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள்.

*மாபெரும் வெற்றி பெற்று சாதனை புரிய வாழ்த்துகிறது கிளாசிக் சினிமா