ரிப்பப்பரி திரை விமர்சனம்

கிராம பின்னணியில். வாயில வை யூடுயூப் மற்றும் குக்கிங் சேனல் நடத்தி வரும் மூன்று இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் சம்பவங்களை பற்றியது தான் ரிப்பப்பரி

இப்படத்தின் கதை. 6 முதல் 60 வயது வரை அனைவரும் ரசிக்கும் வகையில் காமெடி டிராமா கலந்த, அசத்தலான திகில் காமெடியாக உள்ளது. குரங்கு பொம்மை, எலக்ட்ரிக் நாய், சுருட்டு சாமியார் என்று குழந்தைகள் ரசிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் இதில் இருக்கிறது தளபதி விஜய்யும் இந்த படத்தில் இருக்கிறார் அதனால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

இந்த படத்தின் கதை என்ன,

முக்கியமாக ஒரே வீட்டுக்குள் நடக்கிற வழக்கமான திகில் காமெடியாக இல்லாமல், மாறுபட்ட வித்தியாசமான திரைக்கதையில் நிறைய திருப்பங்களுடன் உருவாகியுள்ள ‘ரிப்பப்பரி’ திரைப்படத்தின் குரங்கு பொம்மை அனைவரது கவனத்தையும் கவர்ந்தது என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது

மாஸ்டர் மகேந்திரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனைவரின் பங்கும் சிறப்பாக இருக்கிறது

திவாரகா தியாகராஜன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பாடல்கள் படத்திற்கு நன்றாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.

தளபதி ரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். கொடுமுடி அந்தியூர் போன்ற பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு பசேல் என்று இருக்கிறது

வேல் படத்தொகுப்பு செய்திருக்கிறார். படம் இரண்டு மணி நேரம் இருபது நிமிடம்
இரண்டு மணி நேரம் என்று இருந்தால் நன்றாக இருக்குமே

விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக மாறுபட்ட வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்த மகேந்திரன், மீண்டும் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்
காமெடி வேணுமா காமெடி இருக்கு காதல் வேண்டுமா காதல் இருக்கு பாட்டு வேணுமா பாட்டு இருக்கு

ஏகே தி டால்ஸ்மேன் (AK THE TALESMAN) நிறுவனம் சார்பில் நா.அருண் கார்த்திக் தயாரித்து இயக்கியிருக்கும். இப்படம் எப்படி வாங்க பார்க்கலாம்

வாயில வை என்ற youtube சேனல் நடத்தி வரும் மூன்று இளைஞர்கள் மாஸ்டர் மகேந்திரன்
மாரி.ஜோவல்

இவர்கள் மூவருக்கும் ஊருக்குள் வம்பு இழுப்பது பொழுதுபோக்கு மாஸ்டர் மகேந்திரன் நண்பன் வேறு ஒரு ஜாதி பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடி வந்து விட மகேந்திரன் இடம் தங்க கேட்கிறான் என்னால் முடியாது போலிஸ் இன்ஸ்பெக்டரை போய் பார் என்கிறார் மாஸ்டர் மகேந்திரன் இன்ஸ்பெக்டரை பார்க்கும் போகும் போது பேயால் அடித்துக் கொள்ளப்படுகிறான்
நண்பன்

தலைக்கரைஎன்னும் ஊரில் தொடர்ந்து ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்பவர்கள் கொலை செய்யப்பட்டு போஸ்ட் ஆபீஸ் பாக்ஸுக்குள்ளும் பால் கேனுக்குள்ளும் தலை இருக்கிறது
உடல் மட்டும் காணவில்லை

என்ன நடந்தது இதுதான் ரிப்பப்பரி படத்தின் ஒன் லைன்

படத்தில் முதல் பாதி யில் மகேந்திரனும் மாரியும் ஜோயலும் அடிக்கும் ஊட்டி சிரிப்பு வரவில்லை கொட்டாவி தான் வருகிறது

இடைவேளை விட்டு வந்து அமர்ந்த பிறகு கனகு என்ற கதாபாத்திரம் பேயாக வருவதற்கு என்ன காரணம் அவர் ஏன் பேயாக மாறினார் கனகுவின் காதலி பாரதி க்குஎன்ன நடந்தது அவர் ஏன் இறந்தார்

கனகுவை ஏன் கொலை செய்தார் என்பதை மாஸ்டர் மகேந்திரனிடம் பிளாஷ்பேக்காக ஒரு மணி நேரம் செல்கிறார் அவர் காதலி அந்த ஒரு மணி நேரம் தான் படம் .

அவ்வளவு அருமையான படம் அருமையான கதை அருமையான மேக்கிங் அருமையான நடிப்பு இதையே இரண்டு மணி நேரமாக மாற்றி இருந்தால் நிச்சயம் இன்னும் அதிகமாக ரசித்து இருக்கலாம்

கணகு, பாரதி இந்த இரண்டு கேரக்டரும் வடிவமைக்கப்பட்ட கோணத்திலும் சரி நடிப்பிலும் சரி அவ்வளவு உயர்ந்த நிற்கிறார்கள்

அதிலும் கனகுவுக்கு நடக்கும் துரோகம் பாரதியை பலி கடாவாக்கி ஆடும் ஆட்டம் மனசு கனக்கிறது

மாஸ்டர்மகேந்திரன் காமெடி நடிப்பில் நடிகர் விஜய்யின் சாயல் தெரிகிறது படத்தின் முடிவில் கூட விஜய்யின் ஆனந்தம் ஆனந்தம் பாடலை போட்டு உற்சாகமாக வெளியே அனுப்புகிறார் இயக்குனர்

மகேந்திரனின் காதலிக்கும் ஆர்த்திக்கு அதிக வேலை இல்லை என்றாலும் அழகு பதுமையாக வந்து போகிறார்

அடுத்த விஜய் சேதுபதி என்று கூட சொல்லலாம். பேயாக வரும் அவரின் நடிப்பு அவருக்கு எதிர் காலம் சிறப்பாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

மாஸ்டர் மகேந்திரன் அம்மா நடிப்பு நன்றாக இருக்கிறது யார் அந்த சாமியார் என்று கேட்க வைக்கிறது அவர் கேரளாவை சேர்ந்தவர் நாடக மேடையில் 10 வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர் நடிப்பு இந்த படத்தில் செம்மையா ரசிக்க வைக்கிறது

மகேந்திரனும் அவரது நண்பர்களும் காமெடி என்ற பெயரில் அடிக்கும் கூத்து முக்கியமான சில காட்சிகள் சலிப்புதட்டுகிறது

இயக்குநர் எந்த ஜாதி யார் என்று எதுவும் சொல்லாமல் ஒரு பொதுவான படத்தை கொடுத்திருக்கிறார் கனவுக்கு விலனாக வரும் இந்த நாலு பேர் நடிப்பு நன்றாக இருக்கிறது அவர்கள் ஏன் கனவுக்கு எதிராக மாறுகிறார்கள் என்பதற்கான அந்தக் கதையை நன்றாக இருக்கிறது அந்த கனகுவும் அந்த நான்கு நண்பர்களும் இதை வைத்துக் கொண்டே ஒரு படம் எடுத்திருந்தால் வேட்டையாடு விளையாடு போல மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கும்
படத்தின் பலம் அந்த ஃபோர்ஷன் தான் படத்தை தாங்கிப் பிடிப்பது. அந்த ஒரு மணி நேரம் தான்.

மொத்தத்தில் இந்த ரிப்பப்பரி குழந்தைகள் கொண்டாடுவார்கள் இளைஞர்கள் ரசிப்பார்கள் வித்தியாசமான பாணியில் வந்திருக்கும் இந்த படம் ஜாதி மோதல் இல்லாமல் ஜாதி வேண்டாம் என்று சொல்லி இருக்கும் சமத்துவமான படம் இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவர் ஒரு நல்ல படத்தை கொடுத்ததற்காக அவர் கைகுலுக்கி வாழ்த்து சொல்லலாம்