சொப்பன சுந்தரி விமர்சனம்

காமெடியில் கலக்கி உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர் தற்போது நடிக்கும் படங்களை எல்லாம் தனியாக நின்று கதையை தாங்கி பிடிப்பது அவருக்கு சுலபமாகிவிட்டது. அவருக்காகவே கதை செய்யும் இயக்குனர்கள் பெருகிக்கொண்டே இருக்கிறார்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் இதே போல நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் விரைவில் நயன்தாரா இடத்தை கெட்டியாக பிடித்து விடலாம் அவருக்கு நமது வாழ்த்துக்கள்

சொப்பன சுந்தரி தற்போது இப்படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமையை டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SG சார்லஸ் இயக்கிய, சொப்பன சுந்தரி யு தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

டார்க் காமெடியை வைத்து எடுக்கப்பட்ட படம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் & ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. சொப்பன சுந்தரியின் தொழில்நுட்பக் குழுவில் பால முருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவும், கே சரத் குமார் படத்தொகுப்பிலும் உள்ளனர். அஜ்மல் தஹ்சீன் இசையமைத்துள்ளார் அனைவரின் பங்களிப்பு நன்றாக இருக்கிறது

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, தீபா சங்கர், கருணாகரன், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, தென்றல் ரகுநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர

நோ ஹீரோ ,நோ லவ் ,நோ சாங் ,இப்படி சில நோ க்கள் இல்லனா வழக்கமான படங்கள்ல இருந்து வித்தியாசமான படமா வந்திருக்கு

இந்த படத்துல இன்ட்ரெஸ்டிங்கான பல காட்சிகள் முழுமையாக இருக்கிறது

படம் ஹிட்டு னு சொல்லறத்துக்கு வாய்ப்பு நிறைய இருக்கு

குளோஸ்-அப் காட்சிகளில் ஹீரோயின் என்பதை மறந்து ஐஸ்வர்யாவை சராசரி பெண்ணுக்கும் கீழே காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது எளிமையா இருக்கிறது படத்திற்கு அதுவே பலம்

.ஹீரோயினை எந்த கேரக்டரில் ,எவ்வளவு under play வில் காட்டினாலும் படம் பார்க்கும் ரசிகனுக்கு எல்லா ஹார்மோனும் வேலை செய்ய வேண்டும் அதை இந்த படம் செய்துள்ளது

ஐஸ்வர்யா பக்கத்து வீட்டு பெண் போன்ற முகம் அலட்டிக்கொள்ளாத நடிப்பு இதுவே அவருக்கு இது பெரிய பிளஸ் பாயிண்ட் காட்சிக்கு ஏற்ப உணர்ந்து நடிக்கும் எளிமையான நடிப்பு

கதைய பார்ப்போம் -நகை கடையில் வேலை செய்யும் ஐஸ்வர்யா வுக்கு குலுக்கள் முறையில் கார் கிடைக்கிறது அந்த காரை விற்று தன் அக்கா கல்யாணத்தை முடிக்கலாம் என திட்டம் போடும் போது அந்த காருக்கு பங்கு கேட்டு உதவாக்கரை அண்ணன் கருணா ,அவர் மச்சினன் மைம் கோபி ,வருகிறார்கள் ஒவ்வொரு காட்சிக்கும் சஸ்பென்ஸ் வீடு வைத்து இயக்குனர் கொண்டு போய் இருப்பது சரியான திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது லட்சுமி பிரியா காரை ஓட்டிக்கொண்டு போகும்போது ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என எதிர்பார்த்தால் அங்கு கருணா நிற்கிறார் அது ஒரு திருப்பம் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்பெக்டர் இடம் பணிந்து போய் படுக்கையில் கிடக்கிறார் என்றால் அங்கே ஒரு திருப்பம் இப்படி படம் முழுக்கவே திருப்பங்கள் நிறைந்திருப்பதால் சுவராஸ்யம் அதிகமாக உள்ளது.

பத்து லட்ச ரூபாய் காரும் பரிசு கூப்பனும் மட்டும் அக்கா கல்யாணம் அண்ணன் பிரச்சனை என பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் போக அங்கு இருக்கும் இன்ஸ்பெக்ட்டர் சுனில்குமார் ஐஸ்வர்யா வுக்கு ரூட்டு போட சிக்கல்ல மாட்டிக்கிட்ட ஐஸ்வர்யாவ கோலமாவு கோகிலா நயன்தாரா மாதிரி புத்திசாலி தனமா செயல்பட வச்சு, தப்பிக்க வச்சு முடிக்கறாரு இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் .

லட்சுமி ப்ரியா ஊமையா நடிச்சு படத்துக்கு என்ன பிரயோஜனமுனு தெரியல , ஆனா அவர் மீது பரிதாபம் ஏற்படுகிறது

படம் முழுக்க காமெடியும் கலகலப்பு தாங்கி நிற்பவர் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மா தீபா தான்

முந்திரி கொட்டை கனக்கா அவரே எல்லாத்தையும் உளரவம்ப விலைக்கு வாங்குகிறார்

அவர் வரும் காட்சிகளில் செம கலகலப்பு படுக்கையிலேயே படுத்து கிடக்கும் தீபாவின் கணவர் அவர் ஒருபுறம் கிச்சு கிச்சு மூட்டுகிறார்

அடுத்து கிங்ஸ்லி காரை எடுப்பதற்காக மைம்கோபியால் ரெடிமேடாக தயார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்ப அங்கு சுனில் குமார் கிடுக்குப்பிடி போட்டு அவரை கிறுகிறுக்க வைக்க அந்த காட்சி எல்லாம் கேட்டில் செம கலகலப்பு

காருக்குள் பிணம் கார் இருப்பது போலீஸ் ஸ்டேஷனில் என்ன செய்வது என்று தெரியாமல் ஐஸ்வர்யா ராஜேஷ் தீபாவும் லட்சுமி பிரியாவும் பேய் விழிமுழிப்பது எல்லாம் டார்க் காமெடியில் ஸ்பெஷல்

சுனில் குமார் தன்னுடைய நடிப்பில் நிறைவான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இதுதான் முதல் காமெடி படம் நன்றாக கை கொடுத்திருக்கிறது காமெடி லாஜிக் எந்த இடத்திலும் மீறாமல் இருப்பது படத்திற்கு பிளஸ்

இயக்குனர் சார்லஸ் எடுத்துக்கொண்ட கதைகளம் நம்பகத்தன்மையுடன்இருப்பதால் எந்த இடத்திலும் இப்படி எல்லாம் நடக்குமா என்ற கேள்வி நம்மால் எழுப்ப முடியவில்லை

கிளைமாக்ஸ் காட்சியில் சுனில் குமாரை மூன்று பெண்களும் சேர்ந்து புரட்டி புரட்டி அடித்து நார் நாராக கிழித்து தொங்கவிடும் போது பெண்களாலும் முடியும் எந்த பிரச்சனை வந்தாலும் துவண்டு போகாமல் பிரச்சனைகளை சமாளிக்கலாம் என்ற விதமாக தன்னம்பிக்கையோடு படத்தை முடித்து இருக்கிறார் இயக்குனர்

கடைசி காட்சியில் பஞ்சு சுப்புவிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் காரைக்குடுக்கும்போது பஞ்சு சுப்பு காரை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்ப சூழ்நிலை உணர்ந்து

அவர்களுக்கே கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

மொத்தத்தில் இந்த சொப்பன சுந்தரி உங்களை சிரிக்க வைப்பார் உங்களை ரசிக்க வைப்பார் உங்களை மெல்லிய புன்னகையோடு படம் முழுக்க நகைச்சுவை உணர்வை ஏற்படுத்துவார் வெற்றியின் நம்பிக்கைக்கு அச்சாரம் போடுகிறார் இந்த சொப்பன சுந்தரி