ராஜராஜ சோழனை விட எனக்கு ராவணன் தான் பிடிக்கும் என்ற இயக்குனர்

படப்பிடிப்பில் சாந்தனுவுடன்தினமும் சண்டை தான் என்று பகிரங்கமாக பேசி மன்னிப்பு கேட்ட இயக்குனர்

ராவணக் கோட்டத்தின் முதல் ஷெட்யூலில் பட்ஜெட் எகிறியதால் மனம் தடுமாறி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட முடிவெடுத்தேன் என்று கூறிய சாந்தனு

இந்தப் படத்தால் ஜாதி கலவரம் ஏற்படாதா எதற்கு இன்னும் மேல தெரி கீழத்தெரு என்று படம் இருக்கிறீர்கள் என்று கேட்ட பத்திரிக்கையாளர் கார்த்தி

கருவேல மரம் இருக்கக் கூடாது என்று வெட்ட சொல்லி உத்தரவு போட்ட அன்றைய முதல்வர் காமராஜர் இது பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறீர்களா என்று இயக்குனரிடம் வாதம் செய்த பயில்வான் ரங்கநாதன்

பெண்களை அடிக்கும் ஆண்கள் தயவு செய்து திருந்த வேண்டும் வீடியோ இதை பப்ளிஷ் பண்ண வேண்டும் பாவம் பெண்கள் மென்மையானவர்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் காமெடி நடிகை தீபா

படத்தில் சாந்தனுவும் கயல் ஆனந்தியும் முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள் ஏப்பா வேற இடம் கிடைக்கலையா என்று கலாய்த்த ஒளிப்பதிவாளரும் நடிகருமான இளவரசு

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பை துபாயில் நடத்தியதற்காக இந்த படத்தை எழுதாமல் விட்டு விடாதீர்கள் என்று மன்னிப்பு கேட்ட இயக்குனர்

இப்படி பல சுவாரசியமான சம்பவங்கள் இராவண கோட்டம் பிரஸ் மீட் டில் நடந்தது வாங்க பார்க்கலாம்

‘இராவண கோட்ட’த்தில் கருவை மர அரசியல் –

விக்ரம் சுகுமாரனின் ‘இராவண கோட்டம்’ படத்தில் ஆளே மாறியிருக்கிறார் சாந்தனு பாக்யராஜ். ரத்தமும் சதையுமான ஒரு வாழ்வைக் காட்டும் டிரெய்லரில், ‘சாந்தனுவா இது?’ என உற்றுப் பார்க்கத் தோன்றுகிறது. மொத்தமாக, தன்னை இராமநாதபுரத்து இளைஞனாக மாற்றியிருக்கிற அவர், இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்க்கிறார். படத்தின் டிரெய்லரும் பாடல்களும் அந்த நம்பிக்கையை அளிக்கின்றன. வரும் 12-ம் தேதி வெளியாகும் படம் நிச்சயமாக வெற்றியடையும்

‘இராவண கோட்டம்’ எதைப் பேசும் படம்?

இதுல கருவை மர அரசியல் பேசியிருக்கிறார்கள் தூவல் கலவரத்துல இருந்து ஒரு பகுதியை இன்ஸ்பிரேஷனா எடுத்து படம் உருவாகி இருந்தாலும், காதல் மைய கருவி வைத்திருக்கிறார்கள் அதைச் சுற்றி நடக்கிற விஷயங்கள், அதைப்பயன்படுத்தி நடக்கிற பிரச்சினைகள் தான் படம்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரனோட படமா, தரமான சினிமாவா இருக்கும்னு நம்பிக்கையோட சொல்லலாம்
. ஒரு நல்ல படம் பார்த்தோம்ங்கற எண்ணத்தை ‘இராவண கோட்டம்’ கொடுக்கும் என்பது உறுதி.

படத்துக்காக, கிராமத்து இளைஞனா மாறியிருக்கிறார் ஷாந்தனு பாக்யராஜ்,
மற்றும்
ஆனந்தி, பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இராவண கோட்டம்’. கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்
நடைபெற்றது.

இந்த விழாவில்
இயக்குனர் விக்ரம் சுகுமாரன், சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி, காமெடி நடிகை தீபா, நடிகர் இளவரசு ஒளிப்பதிவாளர் வெற்றி. மற்றும் எடிட்டர் கலை இயக்குனர், இசையமைப்பாளர் ஜஸ்டிஸ் பிரபாகரன்
நடிகர் சஞ்சு
பாடல் ஆசிரியர் ஏகாதசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குனரும் சாந்தனு பாக்யராஜும் பதில் கூறினார்கள் துபாயில் நடந்த இசை வெளியீட்டு விழாவிற்கு பல பத்திரிகையாளர்களை அழைக்காததற்கு வருத்தம் தெரிவித்தார்கள்.

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் மதயானை கூட்டம் படத்தின் மூலம் மக்களை தன் பக்கம் ஈர்த்தவர் அதேபோல நான்கு வருட தயாரிப்பில் இருந்து தற்போது ரிலீசாகும் ராவணக்கோட்டம் திரைப்படம் எல்லோரையும் கவரும் என்பது உண்மை
மேல தெரு கீழ தெரு என்று இருந்தாலும் ஜாதி வேண்டாம் என்று கூறும் இந்த திரைப்படம் சாந்தனுவுக்கு முக்கியமான படமாக இருக்கும் கயல் ஆனந்தி எதார்த்தமான நடிப்பில் அருமையாக நடித்திருக்கிறார் சாந்தனு பாக்யராஜுக்கு இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும் வாழ்த்துக்களுடன் கிளாசிக் சினிமா