படத்தின் நாயகன் விஜய் சேதுபதி அகதியா தீவிரவாதியா.?
இலங்கையில் பிறந்த விஜய் சேதுபதி தமிழகத்துக்கு வந்தது ஏன்
மகிழ் திருமேனி, விஜய் சேதுபதியை கொல்ல துடிப்பது ஏன்
மேகா ஆகாஷ், விஜய் சேதுபதியின் காதலை புதுப்பித்தாரா இல்லையா
யாருக்கும் கிடைக்காத லண்டன் சென்று இசையில் விஜய் சேதுபதி சாதித்தாரா இல்லையா
விவேக் தன் பண்பட்ட நடிப்பால நம் மனதை கலங்கடித்தாரா இல்லையா
இயக்குனர் எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் என்பதை இயக்குநர் நிரூபித்தாரா இல்லையா
இலங்கையில் இருந்து வந்த அகதிகள் தமிழக கூடங்களில் நன்றாக வாழ்கிறார்களா அவர்கள் தங்கள் திறமையை காட்ட சட்டம் இடம் கொடுக்கிறதா
இல்லையா இதுதான் படத்தின் ஒன்லைன்
இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது இந்த படம்
வாங்க இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்
எஸ்.பி.ஜனனாதன் தன்னைப்போலவே தன் உதவி யாளர் களையும் நல்ல படம் எடுப்பது எப்படி என்று கற்று கொடுத்து விட்டு சென்றுள்ளார்.
அதில் இப்போது புதிய விதையாக முளைத்து நிற்கிறார், இயக்குனர் ‘ரோகா’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.

விஜய்சேதுபதி நடிப்பில் ரோகா இயக்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் எஸ்.பி.ஜனனாதனின் படத்தை பார்ப்பது போலவே இருந்தது.
உலகில் எல்லைகள் தோன்றியது ஏன்? போர்கள் ஏன்? அகதிகள் என்ற அடையாளமற்ற இனத்தை உருவாக்கியது யார்? என்று பல கேள்விகளை விதைத்து விட்டுச் செல்கிறது படம்.
ஒரு வலுவான கதையை, நேர்த்தியான திரைப்படமாக ரோகா தந்திருக்கிறார் இயக்குனர் . தன் குருவின் குரலை ஓங்கி ஒலித்திருக்கிறார் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை
புத்தர் சிலை, போர்க் காட்சி, சர்வதேச பிரச்சினைகள்… – ‘என தமிழ் தேசிய பிரச்னைகள் பலவற்றை பேசுகிறது
படம் அழுத்தமான கதைக்களத்தை கொண்டிருக்ககறது வெளி நாட்டில் வாழும்
நமது தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் அங்கு நன்றாக வாழ்கிறார்கள் ஆனால் நம் தமிழகத்தில் அரவணைக்க தவறிவிட்டோம் என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது இந்த படம் பார்த்த பிறகு
இப் படத்தில் விஜய் சேதுபதி அருமையான நடிப்பால நம் மனதை கவர்கிறார் புனிதனாக இருந்து கிருபா நிதியாக கரு.பழனியப்பன்மூலம்இரண்டாவது ஜென்மம் எடுக்கிறார்
பண் பட்ட நடிப்பில் மிளிர்கிறார்
இயக்குநர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, கரு பழனியப்பன் மூவரில் நம்மை அடுத்து கவர்ந்த இயக்குனர் மகிழ் திரு மேனி தான் உறுதி யான பார்வை மிரட்டுகிறார் மனுஷன்
, மேகா ஆகாஷ்,
மெலிட்டா என்ற இசை அரசியாக இதயத்தில் இடம் பிடிக்கிறார் மற்றும்
ரித்விகா, கனிகா மற்றும் விவேக், சின்னி ஜெயந்த் என பலர் நடித்துள்ளனர்.
விவேக் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் கண்கலங்க வைத்து விட்டார்
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்
படத்திற்கு மிகப்பெரிய பலம்
பின்னணி இசையில் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார்
இப்படத்தை இசக்கி துரை தயாரித்துள்ளார்.
அவரும் ஒரு சிறப்பான வேடத்தை ஏற்று நடித்து இருக்கிறார் நிச்சயம் வரும் காலத்தில் ஒரு ஹீரோவாக வருவதற்கு அத்தனை அம்சங்களும் பொருந்தி இருக்கிறது
ஒளிப்பதிவு அருமை இலங்கையில் நடக்கும் போல் காட்சிகள் ஆகட்டும் கொடைக்கானல்
பழனி மலை ஆகட்டும் எல்லா இடங்களிலும் கண்களுக்கு குளுமை
கதை என்ன- வெளிநாடு வாழ் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை கையிலெடுத்து நிலம், நாடு, மக்கள், அரசியல் குறித்த ஒலிக்கும் வசனம் அத்தனை அடர்த்தியுடன் எழுதப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் வெவ்வேறு கெட்டப்புகள், மகிழ்திருமேனியின் கம்பீரமான தோற்றம் கவனம் பெறுகின்றன. தலையிலாத புத்தர் சிலை, பசியில் வாடும் உயிர்கள், போர்க் காட்சிகள் உள்ளிட்டவை படம் குறித்து நம்பிக்கையை கூட்டுகின்றன. ‘இந்த நிலம் எதுக்காக படைக்கப்பட்டது?’ உள்ளிட்ட பின்னணி வசனம் எஸ்.பி.ஜனநாதனின் உதவி இயக்குநரின் படம் என்பதை அழுத்தமாக நிறுவுகிறது
யாதும் ஊரே யாவரும் கேளிர் … கணியன் பூங்குன்றனார் பாடிய வரிகள் இது. அதை இசக்கி துரை ஒரு படமாக உருவாக்கியுள்ளார். மிகுந்த பொறுப்புணர்வுடன் இப்படம் சொல்லப்பட்டுள்ளது. நமது தமிழ் இனம் நீண்ட காலம் இந்த பிரச்சினைகளை அலசி வருகிறது
இதை எளிதாகக் கடந்துபோக முடியாது. சாதாரணமாக சில காட்சிகளைக் கடந்து போக முடியாது. குடியுரிமை இல்லாததால் ஒரு தலைமுறை தாண்டி இங்கு இருக்கிறோம். சட்டம் மீறி குடியேறியவர்கள் என்று கூறி அப்படியே விட்டுவிடுகிறார்கள். திபத்தியர்களுக்கு குடியுரிமை கொடுத்துள்ளார்கள், இவர்கள் ஏன் இன்னும் அகதிகளாக இருக்க வேண்டும்
இவர்களும் எல்லா விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கி முன்னேற முடியும் இவர்களுக்கு ஏன் தடை..?

அயர்லாந்து போன்ற சம்மந்தமில்லாத நாடுகள் குடியுரிமை தருகிறார்கள். கனடா, ஃபிரான்ஸ் நாடுகளில் தமிழர்கள் உயர் பதவிகளில் இருக்கிறார்கள் ஆனால் இந்த நாடு இன்னும் இவர்களைஅகதிகளாகவே பார்க்கிறது. இரட்டைக் குடியுரிமை கூட கேட்கிறார்கள் இதை தான் இந்தப் படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
இறுதிக்காட்சியில் விஜய் சேதுபதி பேசுவது மிகவும் உருக்கமாக இருக்கிறது. உலகக் குடிமகனாக பேசுகிறேன், எனக்கு நாடு, உறவு இல்லை எனப் பேசுகிறார். அது உண்மை. ஆயுதம் ஏந்தி கிளர்ச்சி செய்யும்போது தீவிரவாதம் என்றீர்கள், எல்லாம் முடித்து விட்டு அரசியர் தீர்வு காண்போம் என்றீர்கள், ஆனால் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிறப்பு முகாம் என்பது சித்திரவதை முகாம்.
ஒருவர் தன் சொத்தைப் பிரிவது, சொந்தங்களைப் பிரிவது சோகம் அல்ல; தன் நாட்டைப் பிரிவது தான் சோகம். அதுபோல் பிறந்த நாட்டை விட்டு எங்கெங்கோ சென்று வாழும் என் இன மக்களின் வலியை இந்தப் படம் கூறுகிறது. இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்த படக்குழுவினருக்கு பாராட்டுகள். விஜய் சேதுபதிக்கு பாராட்டுகள். இது படமல்ல, பன்னெடும் காலமாக பாதிக்கப்பட்ட அவர்கள் மக்களின் வலி..” எனப் பேசியுள்ளது படம்
மொத்தத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் அனைவரும் காண வேண்டிய படம் அற்புதமான படம் தமிழ் தேசிய உணர்வாளர்களால் போற்ற வேண்டிய படம்
நிச்சயம் போற்றுவார்கள்
ஒவ்வொரு தமிழனும் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனின் பார்வைக்கு இந்த படம் செல்ல வேண்டும் ஈழத்து தொப்புள்கொடி உறவுகள் நன்றாக வாழ வேண்டும் அவர்களின் வலி போக வேண்டும்
இதை பேசி உள்ள இந்த படம் நிச்சயம் வெற்றி பெற வேண்டும்
தயாரித்த தயாரிப்பாளருக்கும் இயக்குனர் அவர்களுக்கும் படத்தில் பங்கு பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் படத்தில் நடித்த அத்தனை நடிகர் நடிகர்களுக்கும்
கிளாசிக் சினிமாவின் வாழ்த்துக்கள்