நாயகியின் கதவை இரவில் தட்டிய புதுமுக நடிகர் சொந்த காசில் சூனியம்வைத்த இயக்குனர்

அந்த இயக்குனர் மெத்த படித்தவர்..நல்ல நண்பர்.. சினிமாவில் அவரைப்போல் ஒரு அறிவாளியை நான் அதன் பிறகு சந்தித்ததில்லை. ஓரளவு தமிழ் இலக்கியம் படித்தவர்.

அவரது முதல் படம் சூப்பர் ஹிட்..இரண்டாவது படம் சரியாக ஓடவில்லை..சில ஆண்டுகள் பட வாய்ப்பு இல்லாமல், தன பூர்வீக சொத்தான ஒரே வீட்டை அடகு வைத்து படம் ஒன்றை துவக்கினார்.. காலம் யாரை விட்டது

.புது கதாநாயகி, கதாநாயகன்.. படப்பிடிப்பு பாதி முடிந்த நேரத்தில் என்னிடம் Co -Director வந்து ஒப்பாரி வைத்தார்..

“சார்…அந்த ஹீரோ பேசவேண்டிய அத்தனை வசனகத்தையும் ஹீரோயினை வைத்து பேச வைக்கிறார் சார் இயக்குனர். ஹீரோவை டம்மியாக ஒரு சேரில் உக்கார வைத்துவிட்டார் சார்.. ”-என்றார்..
.

அந்த ஹீரோவும், தயாரிப்பாளரும் போன வாரம் போதையில் ஹீரோயின் வீட்டு கதவை தட்டியிருக்கின்றனர்… அந்த பெண், இயக்குனரிடம் அழுது புகார் செய்துவிட்டார்..” என்றார்..

அந்த இயக்குனர் மிக ஒழுக்கம் நிறைந்தவர்.. அவர் கோபத்தின் வெளிப்பாடுதான் அந்த வசனம் மாற்றம்..எல்லாம்..

படம் படு தோல்வியடைந்தது..நான் கனடா புலம் பெயர்ந்து சென்று விட்டேன்..திரும்பி வந்தபோது சொன்னார்கள்.. அந்த இயக்குனர் படுத்த படுக்கையாய் பல காலம் இருந்து மரணமடைந்தார் என்பதை..

ஹீரோவின் மேல் அவரது கோபம் நியாயமானதே..ஆனால் கொசுவை கொல்ல வீட்டை கொளுத்தியாற்போல், படத்தில் தன விருப்பு வெறுப்பைக் காட்ட, பலரது எதிர்காலம் அந்த தோல்வியால் சூனியமாயிற்று..

ஹீரோ சொன்னரென்று படப்பிடிப்பின் நடுவே கதையை மாற்றுவது.. தன்னுடன் நடிக்கும் நடிகர், பெயரை தட்டிச்சென்றுவிடுவாரோ என்கிற பயத்தில் நடிகர்களை மாற்றுவது” போன்ற கூத்து இன்னும் சினிமாவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது..

50,60 கள் சினிமாவில் உங்களுக்கு எத்தனைப் பேரை நினைவிலிருக்கிறது…? சட்டென்று சொல்லுங்கள் பார்ப்போம்..…ஒரு சிலரைத்தான் இருக்கும்..

சினிமா என்கிற போதை, மனிதனை மாற்றிவிடும்.. சினிமாவில் நிறைய பேர் ஆணவத்தினால் அழிந்ததை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்..

ஊட்டியில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டு சென்னை சோழாவிலிருந்து உணவு வாங்கி அனுப்பிக்கேட்ட இயக்குனர்கள் எனக்குத்தெரியும்..

இன்னும் 50 ஆண்டுகளில் இன்றைய சினிமாவில் ஒரு சில பெயர்கள் மட்டுமே மக்கள் மனதில் உலவும்….அந்த லிஸ்டில் சத்தியமாய் இப்படிபட்டவர்கள் இருக்கப்போவதில்லை..

எத்தனை நடிகர்கள் இந்த சினிமாவில் காணாமல் போய்விட்டனர் அதில் பாதி பேர் ஆணவத்தால் அறிந்தவர்கள் பெண் போதையால் அழிந்தவர்கள் புகழ் பாதையால் அறிந்தவர்கள் பணத்தை எப்படி பராமரிப்பது என்பது தெரியாமல் அறிந்தவர்கள் காலம் எல்லோருக்கும் பதில் சொல்ல காத்திருக்கிறது கவனமாக செயல்படுங்கள் நடிகர்களே..
(இன்னும் நிறைய வரும்)

அடுத்து சீரியலில் மாமியாக நடித்த மாமியார் நடிகை யின் இரவு வேட்டையில் நடந்த சுவராஸ்யம்)