கழுவேத்தி மூர்கன் விமர்சனம்

படம் ஆரம்பித்த உடன் அற்புதமான சன்டை போடுகிறார் அருள் நிதி

அருள் நிதி அறிமுககாட்சி
நண்பனை அடித்ததற்காக எதிரிகளை அடித்து நொறுக்கும் பொழுது அடடா

நாயகி அறிமுக காட்சி சூப்பர் காதல் மலர்ந்தது என்று சொல்லி கல்லால் அடித்து கண்ணால் அடித்து நொறுக்கும் பொழுது சூப்பர்

வில்லன் அந்த பெரியவரை சந்திக்க வரும் போது

கீழத்தெரு மேலத்தெரு என்று இல்லாமல் பழகும் அருள் நிதி கதாபாத்திரம் அருமை

துஷாரா குறும்பு பெண்ணாக மனதில் இடம் பிடித்தார்

நன்பணாக வரும் சந்தோஷ் நடிப்பும் கதாபாத்திரம் அருமை

இசை ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது
எடுத்த கொண்ட கதை களம் இலக்கை நோக்கி சீராக பயணிக்கிறது

கதை என்ன வாங்க பார்க்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பூமியும்; மாற்றுச் சாதியைச் சேர்ந்த மூர்க்கனும் சிறு வயதிலிருந்தே உயிர் நண்பர்களாக இருக்கின்றனர்.
அவர்கள் நண்பர்களாக மாறுவதற்கு சொல்லப்படும் அந்த சின்ன வயது பிளாஸ்பேக் காட்சி உயிரோட்டமாக இருக்கிறது

அதே மாவட்டத்தில் எதிர் கட்சியின் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்கும் முனியராஜ்
அவர் வந்த பிறகு கதையில் அவ்வளவு சூடு செம பரபரப்பு மனுஷன் என்ன பாடு படுத்து வாரோஎன்று எதிர்பார்த்து

அடுத்து போஸ்டர் யுத்தம் ஒன்று நடக்கிறது

அப்படி பூமி இருக்கும் தெருவில் போஸ்டர் ஒட்டும் போது அவருக்கும் கட்சிக்காரர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. மூர்க்கன் தனது நண்பனுக்காக இறங்கி சண்டை செய்து எதிரிகளை ஓடவிடுகிறார். இதற்கிடையே ஊரில் மாநாடு நடக்கக்கூடாது என்று நீதிமன்றம் மூலமாகத் தடை வாங்குகிறார் பூமி. இதனால் கொதித்தெழும் முனியராஜ் செய்யும் செயல் பூமி மற்றும் மூர்க்கனின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பதை ஆக்‌ஷன் தெறிக்கச் சொல்வதே ‘கழுவேத்தி மூர்க்கன்’.

அருள்நிதி, இதில் கமர்ஷியல் ரூட்டில் கிராமத்து இளைஞன் மூர்க்கனாக மீசையுடன் வலம் வருகிறார். நண்பனுக்காகக் கோபப்படும் வேகம், காதல் காட்சிகளில் ரகளை, ஆக்‌ஷன் காட்சியில் கம்பீரமென பவர்பிளேயில் வெளுத்து வாங்கும் பேட்டர் போலக் கிடைத்த வாய்ப்பில் பலமாக ஸ்கோர் செய்துள்ளார்.
காதல் காட்சிகளில் அவ்ளோ பவ்யம் மனுஷ ன்இனிமேல் காதல் காட்சிகள் துணிந்து நடிக்கலாம்

கதைக்குப் பங்களிப்பு இல்லை என்றாலும் நாயகியாக துஷாரா விஜயன் குறும்புப் பார்வை, நக்கல் பேச்சு, துருதுரு மேனரிசம் என ரசிகர்களைக் கவர்கிறார்.

படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் பூமி
பூமியாக நடித்துள்ள சந்தோஷ் பிரதாப் தனக்குக் கொடுத்துள்ள கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சாந்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால் தன்னைக் கொலை செய்ய வருகிறார்கள் என்பதை உணர்ந்தும் அதே முகபாவனையை வெளிப்படுத்துகிறார் வில்லனாக வரும் முனியராஜும், ‘யார்’ கண்ணனும் டெம்ப்ளேட் வில்லன்களாக வந்தாலும் நடிப்பில் ஏதும் குறையில்லை. முனிஷ்காந்த் சிரிக்க வைக்கத் தவறினாலும் போலீஸ் ஸ்டேஷனில் அதிகாரத்துக்கு எதிராக வசனம் பேசி நடப்பது ‘மாஸ்’. கிராமத்துப் படம் என்றதும் வழக்கம்போல ரயிலில் ஆட்களை ஏற்றுவது போலக் கதாபாத்திரங்களை ஏற்றாமல், ஷேர் ஆட்டோ அளவுக்கு மட்டும் கதாபாத்திரங்களைக் கையாண்டு இருப்பதே பெரிய ஆறுதல

இயக்குநர் சை.கௌதமராஜ் கதையின் கனத்தை இரண்டாம் பாதியில் வைத்திருப்பதால் முற்பாதி திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். ‘மீசைன்றது வெறும் முடி தான’, ‘நீங்க ஒருத்தன் தலைக்கு மேல இருக்கீங்கன்னு நெனைக்குறீங்க, ஆனா நீங்களே இன்னொருத்தன் காலுக்கு கீழதான் இருக்கீங்க’, ‘அடிவாங்குறவன் பக்கத்துலதான் நிக்கணும், அவன அடிவாங்காம பாத்துக்கிடனும்’ என்ற அரசியல் வசனங்கள் பன்ச்சாக அதிர்கின்றன. பூமி கதாபாத்திரத்தின் காதலின் மூலம் ‘தீண்டாமைக்குள் தீண்டாமை’யாக சமூகத்தில் பின்னியிருக்கும் சாதிய மனோபாவத்தைக் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு.

கே.கணேஷ்குமாரின் சண்டைக் காட்சிகள் ‘இயற்கை’யை மீறியதாக இருந்தாலும் ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், கிராமம் என்றாலே புழுதிப் பறக்கவேண்டும் என்ற எழுதப்படாத விதியை இந்தப் படமும் தக்கவைத்திருக்கிறது. டி.இமானின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே கேட்டதுபோலத் தோன்றினாலும் யுகபாரதியின் வரிகளில் ‘அவ கண்ண பாத்தா’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசை, சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் உதவியிருக்கிறது. வறண்ட நிலத்திற்கும் கருவேலமரத்திற்குள் செல்லும் காட்சிகளில் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு நன்று. குறியீடாக வரும் அக்காலகட்ட பிரசாந்த், கார்த்திக் ரசிகர் மன்ற போர்டுகள், கிழிந்த அரசியல் பிளக்ஸுக்குப் பின்னால் கம்பீரமாக நிற்கும் அம்பேத்கர் சிலை, கோயில் கழுமரம் எனக் கலை இயக்குநர் மகேந்திரா கவனம் பெறுகிறார்.
கிழிந்து கிடக்கும் பேனரில் அம்பேத்கர் சிலை அருமை

. சண்டைக் காட்சிகள் கச்சிதம் சேர்த்திருக்கிறார், ஆனால், கத்தரித்து எறிய வேண்டிய பல காட்சிகளை அப்படியே வைத்திருக்கிறார் படத்தொகுப்பளார் நாகூரான் ராமச்சந்திரன்.

கிராமத்துக் கதை என்றாலே பழைமைவாதம், மண்ணின் குணம், சாதியைத் தூக்கிப்பிடிக்கும் குறியீடுகள், பாசம், மண் வாசம் என ஊறிப்போன கதையைப் பார்த்த நமக்கு, சமத்துவத்தை நோக்கி காலத்துக்கு ஏற்றார்போல அரசியல் பேசியிருக்கும் முனைப்பு பாராட்டத்தக்கது. ஆனால், தொய்வான திரைக்கதை, நீளமான காட்சியமைப்புகள் படத்துக்கு நிஜ வில்லன்களாக மாறியிருக்கின்றன. அதேபோல க்ளைமாக்ஸ் காட்சி நெஞ்சில் தைக்கும் அளவுக்கு ஆழமாக இருந்தாலும், அதற்கு முந்தைய ஹீரோ vs வில்லன் சண்டை வழக்கமான டெம்ப்ளேட்டாக மட்டுமே கடந்துபோகிறது. அதேபோல கழுவேற்றம் குறித்த வாதமும் மரண தண்டனையை ஆதரிக்கும் போக்காகப் புரிந்துகொள்ளப்படும் ஆபத்து இருக்கிறது.

சண்டைக் காட்சியிலிருந்த மூர்க்கம் திரைக்கதையிலும் இருந்திருந்தால் சரியான அரசியல் பேசிய இந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ இன்னும் கவனம் ஈர்க்கும் மூர்க்கனாகவும் மாறியிருக்கிறது
கல்லால் அடித்த சுந்தரி கண்ணால் அடிக்க சொல்லி கேட்கும் பொழுது தியேட்டரே கலகலக்கிறது புது விதமான காதல் விதி ரசிக்க வைக்கிறது