அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’.
நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோருடன், பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை பிரசன்னா ஜி.கே மேற்கொண்டிருக்கிறார்.
ஜெய் ஸ்வதா ஐஸ்வர்யா ராஜேஷ் அஜ்மத் இவர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பொங்கி எழுந்து கணவனுக்கு ஓங்கி ஒரு அறை விடுவது தியேட்டரில் கைதட்டல்.
சிவதா நடிப்பு அருமையாக இருக்கிறது ஒரு குடும்பத் தலைவியாக பொறுப்பான அம்மாவாக நன்றாகவே நடத்தி இருக்கிறார். ஜெய் ராஜா ராணி படத்திற்கு பிறகு இந்த படத்தில் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார் இசை சித்து குமார் நன்றாக இருக்கிறது நன்றாக இருக்கிறது இயக்குனர் வெங்கடேசன் தரமான படத்தை கொடுத்ததற்காக அவருக்கு நமது பாராட்டுக்கள் மொத்தத்தில் இந்த தீரா காதல் கல்யாணம் ஆனவர்களை பற்றி கனவு காண வைக்கும் திரைப்படம் மீண்டும் ஒரு 96 என்று சொன்னால் மிகையாக இருக்காது.
லைகா தயாரிப்பு நல்ல முயற்சி செய்து உள்ளார்கள். கதை, மனைவி ஷிவாடா மற்றும் மகள் ஆர்த்தியுடன் மகிழ்சியாக வாழ்ந்து வரும் ஜெய், ஒரு நாள் இரவில் தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேசை ரயில் நிலையத்தில் சந்திக்கிறார். அப்போது பழைய நினைவுகளுடன் செல்போன் எண்ணையும் பரிமாறிக் கொள்கின்றனர். அடித்து துன்புறுத்தும் கனவனால் வாழ்கையே வெறுத்து போயிருக்கும் நிலையில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முன்னாள் காதலன் ஜெய்யின் ஆறுதலான வார்த்தைகளால் அக மகிழுகிறாள். இந்நிலையில் இந்த விசயம் ஜெய்யின் மனைவிக்கு தெரிய வர குடும்பம் இரண்டாக பிரிகிறது. இறுதியில் ஐஸ்வர்யா என்ன ஆனார் மனைவியை எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் மீதிக்கதை. ஆரம்பத்தில் அற்புதமாக தொடங்கும் படம் நேரம் செல்ல வழக்கமான படமாகி விடுகிறது. ஆனாலும், ஜெய். அவரது மனைவியாக வரும் ஷிவாடா. முன்னாள் காதலியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் மூவரும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அழகான இசையால் வருடிய சித்து குமாரை வாழ்த்துக்கள். திரைக்கதை வடிவமைத்த இயக்குனர் ரோகின் வெங்கடேசனுக்கு பாராட்டுகள்
தொழில் நுட்ப கலைஞர்கள் திரைக்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி படமாக அமைந்தது இந்த தீராக்காதல்