ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ள படம் ‘உன்னால் என்னால்’. இப்படத்தை சிங்கப்பூர் ரவீந்திர சிம்மன் இயக்க மேற்பார்வையில், இப்படத்தை ஏ .ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார் . அருமையான படம் தரமான படம் இந்த படத்தில் கதை என்ன வாங்க பார்க்கலாம்
வறுமையின் காரணமாகக் கிராமத்தில் இருந்து பிழைப்பு தேடி மூன்று இளைஞர்கள் சென்னை வருகிறார்கள். பணத் தேவை அவர்களைத் துரத்த, அது சோனியா அகர்வால் ஒருவரை கொல்லச் சொல்ல அதான் ராஜேஷ் அவர் மிகப்பெரிய கோடீஸ்வரர் அவர் ஏன் சோனியா அகர்வால் கொலை சொல்கிறார் அதுதான் படத்தின் சஸ்பென்ஸ்
ஒரு வழியாக அவர்களின் பணத்தேவை தீர்ந்து போகும் ஒரு வாய்ப்பு வருகிறது. ஆனால் அந்த வாய்ப்புக்குப் பின்னணியில் ஓர் அநீதி இருப்பதைக் காண்கிறார்கள். அந்த அநீதிக்கு துணை போனார்களா அல்லது நியாயத்தை நிலைநாட்டினார்களா ஆனால் அந்த இளைஞர்கள் மனசாட்சி படி நடக்கிறார்கள்
அது இவர்களை மனசாட்சிக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தும் நபரின் வாய்ப்பு என்று தெரிகிறது. அந்தத் தருணத்தில் தங்கள் வறுமையைப் போக்க சமரசப் பட்டார்களா? அல்லது மனசாட்சி மனித நேயம் தான் முக்கியம் என்று முடிவு எடுத்தார்களா? என்பதைப் பற்றிப் பேசும் படம் தான் ‘உன்னால் என்னால்’.
” உலகமே எந்திரமயமாகி விட்ட இக்காலச் சூழலில் மனிதன் பணத்தைத் தேடி ஓடுகிறான் .பணத்திற்காக எந்த விதமான அநீதிகளையும் செய்யத் தயாராக இருக்கிறான். அப்படிப் பெரிய அநீதி இழைக்கும் ஒரு துறையாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது.இதில் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர்கள் பலர் உண்டு. இடைத்தரகர்களைக் கொண்டு சக மனிதரை எப்படி அதில் ஏமாற்றுகிறார்கள்? தங்கள் சதி வலையில் சிக்கிக் கொண்டவர்களின் வாழ்க்கையை எப்படி நாசமாக்குகிறார்கள் என்பதை இந்தப் படத்தில் கூறி இருக்கிறார் கள்
உலகளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இந்த ரியல் எஸ்டேட் உலகத்தின் கறுப்புப் பக்கங்களை இதில் புரட்டிக் காட்டியிருக்கிறார்கள் மனிதன் எவ்வளவு சாதித்தாலும் தனது மனசாட்சிக்கு உட்பட்டு மனிதநேயத்தோடு வாழ்வதுதான் சிறந்த அறம் என்று இப்படத்தில் கூறி இருக்கிறார் கள்
அது இக்கால பணம் தொடர்பான மனித மனங்களின் பணமா? பாவமா? சுயநலமா? மனசாட்சியா? என்கிற ஊசலாட்டங்களுக்குப் பதில் கூறும் ஒரு தீர்வாக இருந்து படம் பார்க்கும் ரசிகர்களை நல்வழிப்படுத்தும்”
இப்படத்தில் கிராமத்தில் இருந்து வரும் ஜீவன், ராஜ், கணேஷ் என்ற அந்த மூன்று இளைஞர்களாக ஜெகா ,கே. ஆர்.ஜெயகிருஷ்ணா, உமேஷ் நடித்துள்ளார்கள். மோசடிக் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இதுவரை கதாநாயகியாக வந்து முகம் காட்டியவர், இதில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் மிரட்டி உள்ளார். சோடா கோபால் பாத்திரத்தில் ரவி மரியா கலக்கியுள்ளார். முற்றிலும் எதிர்பாராத மாறுபட்ட பாத்திரத்தில் ராஜேஷ் நடித்துள்ளார். இவர்கள் தவிர டெல்லி கணேஷ், ஆர். சுந்தர்ராஜன், மோனிகா, நெல்லை சிவா, சஹானா, நிஹாரிகா, லுப்னா அமீர் ஆகி யோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்குக் கதை திரைக்கதை வசனம் எழுதி ஏ .ஆர்.ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்திற்குப் பிரபல ஒளிப்பதிவாளர் கிச்சாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஸ்வான் இசையமைத்துள்ளார். இயக்க மேற்பார்வை சிங்கப்பூர் ரவீந்திர சிம்மன், கலை இயக்கம் விஜய் ராஜன், படத்தொகுப்பு எம். ஆர். ரஜீஷ், நடன இயக்குநர் கௌசல்யா, சண்டை இயக்குநர் பில்லா ஜெகன் என்று பணியாற்றியுள்ளனர். ஆக்ஷன் ரியாக்ஷன் சார்பில் ஜெனீஷ் வினியோகிக்கிறார். ‘ இந்த படத்தின் பிளஸ் என்ன
ராஜேஷ் அவர்கள் கூறும் இலக்கை பற்றி நீ என்ன முடிவு செய்திருக்கிறாய் கிராமத்தில் இருந்து வந்தாயே என்ன உனக்காக செய்து கொண்டாய் என்று கேட்கும் அந்த வசனம் நன்றாக இருக்கிறது
அடுத்து நண்பர்கள் மூன்று பேரும் இணைவோம் அந்த காட்சி நன்றாக இருக்கிறது
அடுத்து காரில் வருபவர் எல்லாம் கோடீஸ்வரர் என்று தப்பு கணக்கு போடக்கூடாது என்று சொல்லும் அந்தக் கட்சி நன்றாக இருக்கிறது
அழகு பதுமையாக வரும் சோனியா அகர்வால் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனையும் தனது கெட்ட எண்ணத்தால் கவிழ்த்து முடியும் என்ற அந்த காட்சி நன்றாக இருக்கிறது
கோடீஸ்வர் ராஜேஷ் தேடி கண்டுபிடிக்கும் மகன் மகள் கண்டுபிடித்த பிறகு அவர் ஓட்டாண்டி என்று தெரிந்து பிறகு அவரை கழட்டி விடும் அந்த உறவுகளின் அந்த உறவுகளின் மனப்பான்மை நன்றாக இருக்கிறது இதுதான் எதார்த்தம்
படம் முழுக்க வரும் ரவி மரியா, சோடா கோபால் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நல நடிப்பை வழங்கி இருக்கிறார்
இயக்குனர் எடுத்துக்கொண்ட முயற்சி திறமையாக வழங்கி இருக்க நல்ல கதை அதை சொன்ன விதம் நன்றாக இருக்கிறது இரண்டு மணி நேரம் ஐந்து நிமிஷம் படம் ஆனால் படம் முழுக்கவே அந்த மூன்று இளைஞர்களின் காதல் பற்றிய கதை தான் போகிறது
அதை விடுத்து மூன்று இளைஞர்கள் வாழ்க்கை யில் கிடைத்த அற்புதமான சந்தர்பத்தை
முன்னேறினார்கள் என்று அதையே பிரதான மாக காட்டி இருந்தால் நிச்சயம் இன்னும் நன்றாக இருக்கும்
மொத்தத்தில் குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுக்க முடியும் என்று நீரூபித்த படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்