[B&c சென்டரில வெளுத்து வாங்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
. தொழிநுட்ப ரீதியாக வேல்ராஜ் படத்திற்கு பெரிய பலம். விஷுவலாக பல காட்சிகளில் கிராமத்து களத்தை, ஸ்டைலிஷாக காட்ட உழைத்திருக்கிறார். ஆனால்
இசை பொருத்தவரை ஜி.வி. படத்தின் பாடல்களோ, பின்னணி இசை
படத்தில் அருமை
மொத்தத்தில் முத்தையா எடுக்கும் படங்களை ரசித்துப் பார்ப்பவர் நீங்கள் என்றால் கண்டிப்பாக காதர்பாட்சா உங்களை ஏமாற்றாது.
காதர் பாட்சா கதாபாத்திரத்தில் ஆர்யாவின் நடிப்பை விட ஆக்ஷன் காட்சிகளில் அதிர வைக்கிறார்
நடிகர் ஆர்யா நடிப்பில் ‘கொம்பன்’ ‘விருமன்’ ‘மருது’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா என்றதும் மிகவும் எதிர்பார்ப்பு
இந்தப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கும் இந்தப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
கதையின் கரு:
தமிழ் செல்வியின் சொத்துக்களை அபகரிக்கும் நினைக்கும் அவரின் முறை மாமன்கள் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில்தான் ஜெயிலில் இருக்கும் காதர் பாட்ஷாவை நேரில் சந்திக்க செல்கிறாள் செல்வி. ஆனால் அந்த சந்திப்பு கைகூடாமல் போகிறது.
இதனை தெரிந்து கொள்ளும் காதர் பாட்ஷா தன்னைத் தேடி வந்த பெண் யாரென்று தெரிந்து கொள்ள செல்வியை நோக்கி செல்கிறான். அங்கு மோதல் வெடிக்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது? காதருக்கும் செல்விக்கும் என்ன தொடர்பு? செல்வியின் சொத்துக்கள் என்ன ஆனது? செல்வியுடன் இருக்கும் அவரது அண்ணன் மகள்களின் நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே ‘காதர்பாட்சா என்ற முத்து ராமலிங்கம்’ படத்தின் கதை.
காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கதாபாத்திரத்தில் ஆர்யா முறுக்கான உடம்பும்
கறுப்பு காஸ்ட்யூம் என கலக்குகிறார்
முறைமாமன்களிடம் இருந்து காப்பாற்ற போராடும் நாயகன் தாய், தந்தையை இழந்த சித்தி இத்னானி, தன் அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை
சித்தி இத்னானி இருவருக்கும் முடிச்சு போட்டு கதையை தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர் சிறப்பு
கிராமத்து கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்யா கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியுள்ளார. ஆக்ஷன் காட்சிகளில் ஆர்யாவின் உழைப்பு தெரிகிறது. சித்தி இத்னானியை சுற்றியே கதை நகர்கிறது. கிராமத்து பெண்ணாக வரும் சித்தி அழகாக நடித்துள்ளார். படத்திற்கு தேவையான விஷயங்களை அழகாக கொடுத்து கவனம் பெறுகிறார். படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு, அவரின் முதிர்ச்சியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். ஆடுகளம் நரேன் மற்றும் தமிழ் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தம். பாக்கியராஜ், சிங்கம் புலி, தீபா, விஜி சந்திரசேகர், ரேணுகா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு அதனை காட்சிப்படுத்தியிருக்கிறார்
இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் இயக்குனர்.
பிளாஷ் பேக் காட்சிகள் சிறப்பு.
மொத்தத்தில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்
சன்டை பிரியர்களுக்கு விருந்து கிராமத்து மண்வாசனை ரசிக்கும் ரசிகர்களுக்கு விருந்து இன்னமும் ஜாதி முதல் மத ஒற்றுமையை குலைக்கும் அரசியல்வாதிகள் கிராமத்தில் இருக்கிறார்கள் என்று வெளிச்சம் காட்டு போடுவதில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார் சித்தி இத்யானி அழகான முகம் ஆர்யாவுக்கு தகுந்த ஜோடி கடைசியில் அவரை பலி கொடுத்திருக்க வேண்டாமே அது மட்டும் தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது மற்றபடி படத்தில் எந்த குறையும் இல்லை படத்தில் வசூலுக்கும் குறைவிருக்காது படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் தரமான படைப்பை கொடுத்ததற்கு